Wednesday , August 27 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் (page 114)

இலங்கை செய்திகள்

சூடுபிடிக்கும் கொழும்பு!! மஹிந்தவின் இறுதி நிலைப்பாடு

தமக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை தம்மிடம் எப்போதுமே இருப்பதாக மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். அத்துடன் அதுதொடர்பில் யாரும் வீணாக குழம்பிக்கொள்ளத் தேவையில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்‌ஷ கேட்டுக்கொண்டுள்ளார். சிக்கிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டம் இன்று காலை இடம்பெற்றபோது அவர்களுடன் பேசிய மஹிந்த ராஜபக்‌ஷ மேற்கண்டவாறு கூறியுள்ளார். ”நீதிமன்ற தீர்ப்பை ஒருபோதும் அவமதிக்காமல் நாங்கள் செயற்பட வேண்டும். இதில் யாரும் குழம்பிக் கொள்ள தேவையில்லை. …

Read More »

ஜனாதிபதியின் அதிரடி ஆட்டம் ஆரம்பம்!

அனைத்து அமைச்சர்களினதும் பொறுப்புக்களை அமைச்சின் செயலாளர்களுக்கு வழங்கி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டமை, புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டமைக்கு எதிராக மேன் முறையீட்டு நீதிமன்றம் நேற்று இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையிலேயே அமைச்சர்களின் பொறுப்புக்களை அமைச்சின் செயலாளர்களிடம் ஜனாதிபதி ஒப்படைத்துள்ளார். ஜனாதிபதியின் ஊடகப்பிரிவினால் இன்று வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘ஜனாதிபதியினால் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின்படி, நியமிக்கப்பட்ட பிரதமர் …

Read More »

நாளை நாடாளுமன்றத்தில் மகிந்த அணியினர் செய்யவிருக்கும் செயல்!

பெரும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் நாடாளுமன்றம் நாளை காலை 10 மணிக்கு சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடவுள்ளது. பிரதமர் பதவியை வகித்த மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் நாளைய தினம் மீண்டும் இலத்திரனியல் வாக்கெடுப்புமூலம் உறுதிப்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனைத் தொடர்ந்து சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதம் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்தநிலையில் நாளைய சபை அமர்விலும் தமது அணி பங்கேற்காது என மஹிந்த கூட்டணி இன்றைய தினம் …

Read More »

சபாநாயகர் – மஹிந்த எதிர்பாராத சந்திப்பு

சபாநாயகர் கரு ஜயசூரியவும் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் இன்று நேரில் எதிர்பாராமல் சந்தித்துள்ளனர். நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்கவின் தந்தையாரின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தச் சென்ற மஹிந்த ராஜபக்ஷ, பொரளை தனியார் மலர்ச்சாலையில் சபாநாயகரை எதேச்சையாக சந்தித்தார். இதன்போது சபாநாயருக்கு அருகில் அமர்ந்திருந்து சில நிமிடங்கள் மஹிந்த அளவளாவியுள்ளார். எனினும், பேசப்பட்ட விடயங்கள் வெளியாகவில்லை.

Read More »

ரணிலின் அவசர அறிவிப்பு

ரணில் விக்கிரமசிங்க

அலரிமாளிகையில் தற்பொழுது பரபரப்பு நிலை நிலவுவதாகவும் அவசரமான செய்தியாளர் மாநாடு ஒன்றில் கூறியுள்ளார். இந்த செய்தியாளர் மாநாட்டினை ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளதாவது.. இதில், ஜனாதிபதி மைத்திர்பால சிறிசேன ஒரு முழுமையான சர்வாதிகாரியாக மாறாமல் அரசியலமைப்பை பின்பற்றவேண்டும் என அவரிடம் கேட்பதாக ரணில் தெரிவித்துள்ளார். மேலும் குறிப்பிட்ட அவர், சனாதிபதி மைத்திரிபால சிறிசேன தான் நினைத்தபடி பிரதமரைத் தீர்மானிக்கமுடியாது எனவும் நாடாளுமன்றப் பெரும்பான்மை உள்ள ஒருவரே பிரதமராக நியமிக்கப்படவேண்டும் எனவும் கூறினார். …

Read More »

அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதிராக செயற்படுகின்றது

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்காமல் அம்மக்களுக்கு எதிராக அரசாங்கம் செயற்படுகின்றதென வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் து.ரவிகரன் குற்றம் சுமத்தியுள்ளார். முல்லைத்தீவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறியுள்ளதாவது, “இலங்கையை மாறி மாறி ஆட்சி செய்து வருகின்ற ஒவ்வொரு அரசாங்கமும், இனப்படுகொலை செய்த குற்றவாளிகளுக்கு உற்சாகத்தை வழங்கி வருகின்றதே ஒழிய, அவர்களுக்கு இதுவரையும் தண்டைனையை பெற்றுக்கொடுப்பதற்கான …

Read More »

மைத்திரிக்கும் சம்பந்தனுக்கும் இடையே ஏற்பட்ட திடீர் சந்திப்பு!

இலங்கையின் அரச அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் நேற்று மாலை அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பான முக்கிய சந்திப்பு இடம்பெற்றது. இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க் கட்சித் தலைவருமாகிய இரா சம்பந்தன் தலைமையில் ஜனாதிபதியைச் சந்தித்தனர். ஜனாதிபதியுடனான சந்திப்பில் முக்கிய விடயமாக அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாகக் கூட்டமைப்பால் வலியுறுத்தப்பட்டது. இதன்போது ஜனாதிபதி மைத்திரி பால …

Read More »

மைத்திரியின் இறுதி முடிவு வெளியானது!

சிறிலங்கா நாடாளுமன்றம் கலைப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியால் மீளப்பெற மாட்டாதென தகவல் வெளியாகியுள்ளது. நேற்று சட்ட மா அதிபருடன் இது விடயத்தில் ஜனாதிபதி தரப்பு பேச்சுக்களை நடத்தியதாகவும், அந்த பேச்சுவார்த்தையின் பின்னரே குறிப்பிட்ட வர்த்தமானியை மீளப் பெறுவதில்லையென தீர்க்கமான முடிவு எட்டப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. மேலும் ரணில் தவிர்ந்த பிரதமர் ஒருவரை நியமிப்பதற்கு மைத்திரி தயாராக இருப்பதாகவும், ஐக்கிய தேசிய முன்னணி அந்த முடிவில் விடாப்பிடியாக இருந்தால் பிரசினைக்கு இப்போதைக்கு …

Read More »

பறிபோனது மஹிந்தவின் பிரதமர் பதவி

மஹிந்த ராஜபக்‌ஷ பிரதமராக பதவியினைத் தொடர்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. அத்துடன் அவர் தலைமையிலான அமைச்சரவை இயங்கமுடியாதெனவும் நீதிமன்றம் இடைக்காலத் தீர்ப்பளித்துள்ளது. ஐக்கிய தேசிய முன்னணி உள்ளடங்கலாக 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாக்கல் செய்த ரிட் மனுவை இன்றைய தினம் ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்றம், மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது அமைச்சரவை இயங்க இடைக்கால தடை விதித்தது. சம்மந்தப்பட்ட மனுவின் பிரதிவாதிகளுக்கு நோட்டீஸ் அனுப்பவும் முடிவு …

Read More »

ஜனாதிபதி- ஐ.தே.க.வுக்கு இடையில் மீண்டும் சந்திப்பு

maithiri ranil

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் பிரச்சினைக்கு இன்னும் தீர்வு எட்டப்படாத நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று இன்று நடைபெறவுள்ளது. குறித்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இன்று பிற்பகல் இடம்பெறவுள்ளது. இதன்போது நாடடின் அரசியல் நிலைமையை சீராக கொண்டுவர வேண்டியதன் அவசியம் தொடர்பிலும் பிரதமர் தொடர்பிலும் ஆராயப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. இதேவேளை கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதியுடன் சந்திப்பினை மேற்கொண்ட ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களும் இதில் …

Read More »