ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. தொலைபேசியூடாகவே இருவருக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாகவும், மதத்தலைவர் ஒருவரின் முயற்சியின் பயனாகவே இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதன்போது பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் இன்னும் உத்தியோகப்பூர்வமான எவ்வித தகவல்கள் வெளியாகவில்லை. எனினும், அரசியல் குழப்பத்துக்கு தீர்வு காண்பது தொடர்பிலேயே கவனம் செலுத்தப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட விவகாரம் தொடர்பான …
Read More »ரூபாவின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சி
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளது. மத்திய வங்கி இன்று வௌியிட்ட நாணய மாற்று விகிதத்தின் படி அமெரிக்க டொலரின் விற்பனை பெறுமதி 181.2 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதன் கொள்முதல் பெறுமதி 177.5 ரூபாவாக பதிவாகியுள்ளது.
Read More »வெளிநாட்டு இராஜதந்திரிகளை சந்தித்த ஐதேக முக்கியஸ்தர்கள்
ஐக்கியதேசிய கட்சியின் சிரேஸ்ட தலைவர்கள் வெளிநாட்டு இராஜதந்திரிகளை இன்று சந்தித்து ஜனாதிபதியின் கடும் நிலைப்பாடு குறித்து தெளிவுபடுத்தியுள்ளனர் ஐக்கியதேசிய கட்சியின் முக்கிய தலைவர்கள் நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலை குறித்து வெளிநாட்டு இராஜதந்திரிகளிற்கு எடுத்துரைத்துள்ளனர் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையுள்ள போதிலும் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவிடமிருந்து பிரதமர் பதவியை பறித்துள்ளார் என ஐக்கியதேசிய கட்சித்தலைவர்கள் வெளிநாட்டு இராஜதந்திரிகளிடம் தெரிவித்துள்ளனர். 117 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு ரணில் விக்கிரமசிங்கவிற்கு உள்ளதையும் ஐதேக தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
Read More »மக்களிடம் தவறான தகவலை வழங்கும் சபாநாயகர்!
“தனக்கு இல்லாத அதிகாரங்களை இருப்பதாக காட்டிக் கொண்டு சபாநாயகர் நாட்டு மக்களுக்கு தவறான தகவல்களை வழங்குகிறார்” என்று பாராளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல குற்றஞ்சாட்டியுள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே கெஹெலிய ரம்புக்வெல்ல மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட கெஹெலிய ரம்புக்வெல்ல,“சபாநாயகர் தமது அதிகாரத்தை மீறி செயற்படுவதாலேயே ஊடகங்களுக்கு அழுத்தங்களை பிரயோகிக்கிறார். இக் காலங்களில் பாராளுமன்றில் எந்த செயற்பாடுகளும் இடம்பெறவில்லை எனினும் அவர் அரச ஊடக …
Read More »மகிந்த வீட்டில் கூடிய சட்டதரணிகள்! காரணம் என்ன?
சட்டத்தரணிகளுக்கும் நாடாளுமன்ற ஊறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸவுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. விஜேராமவில் அமைந்துள்ள மஹிந்த ராஜப்பக்ஸவின் இல்லத்தில் நேற்று மாலை இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமைகளை தொடர்பிலும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் உள்ள வழக்கு தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின் போது பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தமை சுட்டிக் காட்டத்தக்கது.
Read More »12ஆம் திகதி ரணில் பிரதமர்? அதிரடி நடவடிக்கை
ரணில் விக்ரமசிங்க நாட்டின் பிரதமராவதற்கு பாராளுமன்றில் பெரும்பான்மை ஆதரவு உண்டு என்பதை நிரூபிக்கும் நம்பிக்கை பிரேணை ஒன்றை சஜித் பிரேமதாஸ முன்மொழியவுள்ளார். குறித்த நம்பிக்கை பிரேணையை எதிர் வரும் 12ஆம் திகதி சபையில் சஜித் பிரேமதாஸ சமர்ப்பிக்கவுள்ளார். குறித்த நம்பிக்கை பிரேணை எதிர் வரும் தினங்களில் பாராளுமன்ற செயலாளரிடம் கையளிக்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Read More »ஜனாதிபதிக்கு எதிராக வலுப்பெறும் எதிர்ப்பு!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நளை பிரதம விருந்தினராக கலந்துகொள்ளவுள்ள சுற்றுலாத்துறை விருது வழங்கும் விழாவை சிலர் புறக்கணிக்க தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுற்றுலாத்துறை சார் தலைவர்கள் சிலரே இவ் விழாவை ஜனாதிபதியின் வருகையை எதிர்த்து குறித்த விருது வழங்கும் விழாவை புறக்கணிக்கவுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
Read More »மகிந்தவுக்கு மீண்டும் துரோகம் செய்த மைத்திரி
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய தேசியக்கட்சியின் ஊடாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக மற்றுமொரு நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வர முயற்சிப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய அரசியல் நெருக்கடி சம்பந்தமாக நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட 5 வர்த்தமானி அறிவித்தல்களில் 4 …
Read More »நான் ஜனாதிபதியாகியிருந்தால்….! பொன்சேகா வெளியிட்ட அதிரடி கருத்து!
அமெரிக்காவில் அரச தலைவர்கள் மன நல மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை மேற்கொள்வதுபோல இலங்கையிலும் அப்படி ஒரு சட்டம் கொண்டுவரப்படவேண்டும் என சரத் பொன்சேகா வலியுறுத்தியுள்ளார். இன்றைய தினம் நாடாளுமன்ற அமர்வில் பேசியபோதே அவர் இவ்வாறு கூறினார்.இதுதொடர்பில் மேலும் கூறிய அவர்,“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என்னைப்பற்றி கடந்த கூட்டத்தில் சொன்னாராம். அதாவது பொன்சேகா ஆகிய நான் ஜனாதிபதியாக வந்திருந்தால் இப்படியெல்லாம் கட்சித் தலைவர்களை அழைத்துச் சந்தித்திருக்கும் நிலைமை ஏற்பட்டிருக்காது என்று அவர் …
Read More »ஜனாதிபதியின் உளவியல் மீது பாரிய சந்தேகம்
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் விசேட மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அக்கட்சியின் கொள்கை பிரச்சாரத்தினை அக்கட்சியின் தலைவர் என்ற ரீதியில் குறிப்பிடவில்லை. மாறாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை சாடியுள்ளார்.இச்செயற்பாட்டின் காரணமாக அவரது நன்மதிப்பு குறைந்து வருகின்றது என்பதை நாட்டு மக்களிடம் அவர் கேட்டுத் தெரிந்துக் கொள்ள வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் பேச்சாளர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார். எவ்விடத்தில் எவ்விடயம் தொடர்பில் கதைக்க வேண்டும் …
Read More »