Thursday , August 28 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் (page 109)

இலங்கை செய்திகள்

வீடு திரும்பினார் சம்பந்தன்!!

கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சிகிச்சையின் பின்னர் இன்று வீடு திரும்பியுள்ளார். தனியார் வைத்தியசாலையில் கடந்த 13 ஆம் திகதி தொடக்கம் அவர் சிகிச்சை பெற்று வந்தார்.

Read More »

மைத்திரி- மகிந்த கூட்டணியுடன் அரசியல் பயணம் தொடரும்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் மஹிந்த ராஜபக்ஷ கூட்டணியின் அரசியல் பயணம் எவ்வித தடையுமின்றி தொடரும் என, நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். மஹிந்தவின் விஜேராம இல்லத்தில் வைத்து இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”நாடு அராஜக நிலைக்கு செல்வதை தவிர்க்கும் வகையில் நீதிமன்ற தீர்ப்பிற்கு மதிப்பளித்து மஹிந்த ராஜபக்ஷ இன்று தனது பதவியை இராஜினாமா செய்தார். நாம் …

Read More »

எதிர்க்கட்சி தலைவராக மஹிந்த

எதிர்க்கட்சி தலைவராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்படுவார் என நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 101 பேர் மன்றில் காணப்படுகின்ற நிலையில், எதிர்க்கட்சி தலைவர் பதவியை மஹிந்தவிற்கு வழங்க வேண்டிய நிலை சபாநாயகருக்கு ஏற்படும் எனவும் குறிப்பிட்டார். மஹிந்தவின் விஜேராம இல்லத்தில் வைத்து இன்று சனிக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”மஹிந்த …

Read More »

ரணிலிற்கு காத்திருக்கும் பெரும் ஆபத்து

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆணைக்கு அடிபணிய மறுத்தால், ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதேவேளை, நாடாளுமன்றத்தை இயக்கும் கருவி கூட்டமைப்பின் கைகளிலேயே காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பதவி விலகல் ஆவணத்தில் கையெழுத்திட்டதை தொடர்ந்து விஜேராம மாவத்தை அவரது இல்லத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”நாடாளுமன்றத்தில் வெறும் 103 ஆசனங்களை கொண்டுள்ள …

Read More »

இன்று ராஜினாமா செய்யவுள்ள மகிந்த!

பிரதமர் பதவியை இராஜினாமா செய்தவதற்கு மகிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளதாக கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.தான் உட்பட அமைச்சரவை உறுப்பினர்களினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மேன் முறையீட்டு மனு இன்று விசாரிக்கப்படவுள்ளது. இது தொடர்பில் எந்தவொரு தீர்ப்பு கிடைத்தாலும், பிரதமர் பதவியை இராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளதாக மஹிந்த தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கருத்து வெளியிட்ட பொதுஜன பெரமுன கட்சியின் பிரதானி,பிரதமர் பதவியில் இருந்து மகிந்த விலகிக் கொண்ட போதும், ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிரான …

Read More »

வெள்ளிக்கிழமை!! இன்று இரவில் மைத்திரி என்ன செய்வார்?

மைத்திரி மஹிந்த

இலங்கை அரசியலில் வெள்ளிக்கிழமையென்றால் ஒருவித பரபரப்பு தொற்றிக்கொள்ளும் அதுவும் நேற்றைய உயர்நீதிமன்றத் தீர்ப்பையடுத்து இன்றைய வெள்ளிக்கிழமை (14-12-2018) மிகவும் முக்கியம் வாய்ந்த வெள்ளிக்கிழமையாக இலங்கையின் அரசியல் நெருக்கடி நிலையில் பார்க்கப்படுகின்றது. அன்று ஒக்டோபர் மாதம் (26-10-2018) ஜனாதிபதியால் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்கிய வெள்ளிக்கிழமையில் இருந்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் இலங்கை அரசியலில் திருப்பங்கள் நடந்தவண்ணமேயுள்ளன. அதையடுத்து நவம்பர் மாதம் (09-11-2018) வெள்ளிக்கிழமை ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்து வர்த்தமானியொன்றை வெளியிட்டார். இதுவும் இலங்கை …

Read More »

47 நாட்களில் நாட்டை நாசமாக்க மைத்திரி

சர்வதேச நீதிபதிகளை அனுமதிக்க போவதில்லை: ஜனாதிபதி

கடந்த 47 நாட்கள் நாட்டினையும் நாட்டு மக்களையும் நெருக்கடிக்கு தள்ளி ஜனாதிபதி சூழ்ச்சி செய்துவிட்டார். எவ்வாறு இருப்பினும் உடனடியாக அரசாங்கம் ஒன்றினை அமைத்து இடைக்கால வரவுசெலவு திட்டத்தை சமர்ப்பிக்க வேண்டும் என ஜே.வி.பி வலியுறுத்துகின்றது. பாராளுமன்றத்தில் எந்த கட்சி ஆட்சியமைக்கவும் எமது ஆதரவை வழங்க மாட்டோம் எனவும் அக்கட்சி கூறுகின்றது. மக்கள் விடுதலை முன்னணியின் செய்தியாளர் சந்திப்பு இன்று கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் …

Read More »

ராணுவ படையினர் வசமுள்ள காணிகள் விரைவில் விடுவிப்பு

கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் படையினர் வசமுள்ள காணிகள் விரைவில் விடுவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி – முல்லைத்தீவு மாவட்டங்களில் படையினர் வசமுள்ள காணிகள் கட்டம் கட்டமாக விடுவிக்கப்பட்டு வருகின்றன.கிளிநொச்சி மாவட்டத்தில் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள ஏறத்தாள 45 ஏக்கர்காணி மாவட்ட அரசாங்க அதிபரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது, குறித்த காணிகளை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு எதிர்வரும் 19ஆம் திகதி கிளிநொச்சியில் அமைந்துள்ள இராணுவ ஒத்துழைப்பு மையத்தில் நடைபெறவுள்ளது. இதேபோல முல்லைத்தீவு மாவட்டத்தில் படையினர் வசமுள்ள …

Read More »

இன்று வெள்ளிக்கிழமை ஆட்டத்தை ஆரம்பித்தார் மைத்திரி

இலங்கை அணியின் 17 பேர் கொண்ட அணிக்கு விளையாட்டுத்துறை அமைச்சருக்குப் பதிலாக இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுமதி வழங்கியுள்ளார். இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியையடுத்து பிரதமரோ அல்லது அமைச்சர்களோ இல்லாத நிலையில் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுமதி வழங்க வேண்டிய நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுமதியளித்துள்ளார். நியூசிலாந்துக்கு இலங்கை கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் இருபதுக்கு – 20, டெஸ்ட் போட்டிகளில் …

Read More »

ரணில் தரப்பிற்கு இன்று காத்திருந்த அதிர்ச்சிகர முடிவு

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க

மேன்முறையீட்டு நீதிமன்றின் தீர்ப்பை சவாலுக்கு உட்படுத்தி மஹிந்த தரப்பால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க ஐவரடங்கிய நீதியரசர்கள் குழுவை நியமிக்குமாறு கோரி ரணில் விகரமசிங்க தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. குறித்த மனு மீதான விசாரணை இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது உயர்நீதிமன்றம் குறித்த மனுவை நிராகரித்துள்ளது. இந்நிலையில், மஹிந்த தரப்பால் தாக்கல் செய்யப்பட்ட மனு மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. முன்னாள் …

Read More »