ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இன்று விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. இந்த சந்திப்பானது ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது. இதன்போது ஐக்கிய தேசிய முன்னணியின் அரசாங்கத்தில் இணையவுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான இறுதி முடிவும் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Read More »புதிய அரசாங்கத்தில் ஊடகங்களிற்கு ஆபத்து மஹிந்த எச்சரிக்கை
புதிய அரசாங்கத்தில் ஊடகங்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுமென்றும், ஒவ்வொரு ஊடகங்களையும் தனித்தனியாக கண்காணிக்கும் வகையில் அமைச்சு பொறுப்புகள் வழங்கப்படவுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தங்காலையில் உள்ள அவரது கால்டன் இல்லத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், “புதிய அரசாங்கத்தில் நாடு துண்டாடப்படும் அதிலிருந்து ஊடகத்துடன் இணைந்து நானும் நாட்டை பாதுகாப்பேன். நாங்கள் ஆட்சி செய்த காலத்தில் …
Read More »மகிந்தவுக்கு மீண்டும் வந்துள்ள ஆசை
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பாராளுமன்றில் எதிர்க்கட்சியாக செயற்படுமளவுக்கு அதிக உறுப்பினர்களைக் கொண்டிருப்பதால், எதிர்கட்சித் தலைவர் பதவி அக்கட்சிக்கே வழங்கப்பட வேண்டுமென சபாநாயகரிடம் வலியுறுத்தப் போவதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன் மகிந்த ராஜபக்ஸவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்குமாறும் தாம் சபாநாயகரிடம் வலியுறுத்தவுள்ளதாகவும் தற்போதைய நிலையில் மகிந்தவுக்கு எதிர்க்கட்சித்தலைவர் …
Read More »விசேஷட உரையால் மைத்திரி மீது ஏற்பட்டுள்ள சந்தேகம்!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த காலத்தை மறந்து தம்மீது வீண்பழி சுமத்துவதாக ஐக்கிய தேசிய முன்னணியினர் குற்றம் சுமத்துகின்றனர். அத்தோடு, நேற்றைய அவரின் உரை தமக்கிருந்த சந்தேகத்தை அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அலரி மாளிகையில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல இக்குற்றச்சாட்டை முன்வைத்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்- ”ரணில் விக்ரமசிங்க 5ஆவது தடவையாகவும் நாட்டின் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் நாட்டில் …
Read More »ரணிலுக்கு முதலாவதாக வாழ்த்து கூறிய நாமல்
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விகரமசிங்க பிரதமராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ள நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வாழ்த்து கூறியுள்ளார். நாட்டில் நீடித்த அரசியல் குழப்பங்கள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், ரணில் விக்ரமசிங்க ஐந்தாவது முறையாகவும் பிரதமராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். இந்நிலையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு நாமல் ராஜபக்ச வாழ்த்து கூறியுள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “ பிரதமராக பதவிப்பிரமாணம் …
Read More »பிரதமர் ரணில் நாட்டு மக்களுக்கு தெரிவித்தது என்ன?
பிரதமராக பதவியேற்றதன் பின்னர் ரணில் விக்ரமசிங்க அலரிமாளிகையில் விசேட உரையொன்றை நிகழ்த்தியிருந்தார். அந்த உரையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க,நாட்டின் அரசியல் நெருக்கடிகளுக்கு தீர்வினை ஏற்படுத்தி, வழமை நிலைக்கு கொண்டு வந்து பொருளாதாரத்தை முன்னேற்ற வேண்டும். அத்துடன் பாராளுமன்றமும் நீதிமன்றமும் உரிய வகையில் செயற்பட்டமை குறித்து பெருமை அடைவதாகவும், நாட்டில் அரசியல் அமைப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதற்காக குரல் கொடுத்த அனைவருக்கும் தான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன் எனவும் இதன்போது குறிப்பிட்டிருந்தார்.
Read More »ஜனாநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என ரணில் பெருமிதம்
இலங்கையின் ஜனநாயகம் மற்றும் மக்களின் இறையாண்மைக்கு கிடைத்த வெற்றியாக, இன்றைய பதவியேற்பு நிகழ்வை தாம் பார்ப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மாறாக தனக்கோ ஐக்கிய தேசியக் கட்சிக்கோ கிடைத்த வெற்றி இதுவல்ல என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். பிரதமராக இன்று பதவியேற்றதன் பின்னர் அலரிமாளிகையிலிருந்து நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அத்தோடு, நாட்டின் அரசியலமைப்பை உறுதிப்படுத்தப்படுவதற்கு குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றி என்றும் …
Read More »ஜனாதிபதி பதவி விலக போகிறாரா?
ஜனாதிபதி செயலகத்தில் இன்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங் அவர்களுக்கு சற்று முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமராக பதவிப்பிரமாணம் செய்து கொடுத்துள்ளார். ஆனால் மைத்திரி சில நாட்களுக்கு முன் ரணில் மீண்டும் பிரதமராக பதவியேற்றால் நான் ஒரு மணி நேரத்திலே பதவி ராஜினாமா செய்வேன் என மைத்திரி அதிரடியாக அறிவித்திருந்தார். ஆனால் இப்போது ரணில் பதவி பிரமாணம் இவர் முன்னிலையிலே நிறைவேறியுள்ளது ஆனால் அவர் எந்தவித …
Read More »கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு பறந்து சென்ற கடிதம்
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உதவியுடன் ஆட்சிக்குழப்பநிலை முடிவுக்கு வந்துள்ள சூழ்நிலையில் இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அரசுக்கு காத்திரமான அழுத்தத்தினைக் கொடுப்பதுடனூடாக திட்டமிடப்பட்ட பௌத்த மயமாக்கல் செயற்பாடுகளை தடுத்து நிறுத்த முன்வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தமிழர் மரபுரிமை பேரவையினர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். இக் கடித்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது ஆட்சிக் குழப்ப நிலையில் நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் அவசரமாக நிர்மாணிக்கப்படும் புத்தர் சிலை தொடர்பில் பொது மக்கள் கவலையும் அதிருப்தியும் …
Read More »பதவி விலகுவதற்கு முன் கூட்டமைப்பினை சந்தித்த மகிந்த..!
கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மகிந்த பேச்சுவார்த்தை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவிற்கு இடையில் விசேட பேச்சுவார்த்தையொன்று தற்போதைய நிலையில் இடம்பெற்றுவருகிறது. கொழும்பு விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த பேச்சுவார்த்தை ஆரம்பமாகியுள்ளது. எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் மற்றும் பிரதமர் பதவியில் இருந்து விலகுவது தொடர்பில் மேற்கொள்ளவுள்ள விசேட உரை தொடர்பில் இதன்போது முன்னாள் ஜனாதிபதி நாடாளுமன்ற …
Read More »