ஐ.தே.க கட்சியின் கட்சி கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு சிறிகொத்தலாவையிலுள்ள ஐ.தே.க. தலைமை காரியாலயத்தில் பிரதமர் ரணில் விக்கரம சிங்க தலைமையில் கூட்டம் கூடவுள்ளது. தேசிய ஜனநாயக முன்னணி என்ற பெயரில் புதிய அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பிக்க ஆலோசனை ஒன்று சபையில் முன்வைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Read More »எதனால் மகிந்த அடங்கியுள்ளார்!
நாம் எதிர்க்கட்சியில் இருப்பதால் அமைதியாகவே இருப்போம் என நினைத்துவிட வேண்டாம். நாட்டுக்கு விரோதமான செயற்பாட்டை மேற்கொண்டால் நிச்சயமாக அதற்கான எதிர்ப்பை வெளியிடுவோம் என, நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ எச்சரித்துள்ளார். நிதியமைச்சின் இடைக்கால கணக்கறிக்கை தொடர்பாக நாடாளுமன்றத்தில் இன்று கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ”இன்று எமது நாட்டின் பொருளாதாரம் பாரிய நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ளது. நாட்டில் பாரிய சவால் இருக்கும்போதுதான் நாம் …
Read More »யாரும் எதிர் பாராத ரணிலின் மற்றொரு அதிரடி அறிவிப்பு!
எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உடனடியாக குறைக்கப்படுவதாக பிரதமர் சபையில் சற்று முன்னர் அறிவித்துள்ளார். இன்று காலை 10.30 மணிக்கு நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமாகியிருந்தது. இதில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உரையாற்றும் போதே குறித்த அறிவிப்பினை விடுத்துள்ளார். அத்துடன் ஊடகங்கள் மீது பிரதமர் கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார். தற்போது கறுப்பு ஊடகங்கள் தான் நாட்டில் செயற்படுகின்றன. ஜனாதிபதிக்கு நான் அனுப்பாத பெயர்களை கூட ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. அது எவ்வாறு …
Read More »மகிந்தவிற்கு கிடைத்த மகிழ்ச்சியான செய்தி!
இலங்கை அரசியலமைப்புப் பேரவையில் மஹிந்த ராஜபக்ஷவை நியமித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்சவே நியமிக்கப்படும் சாத்தியம் காணப்படுவதாக நாடாளுமன்றத் தகவல்கள் கூறுகின்றன. இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை சபாநாயகர் அதி விரைவில் அறிவிப்பாரென எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை, இன்றைய தினம் சமர்ப்பிக்கப்படவுள்ல இடைக்காலக் கணக்கறிக்கைக்கு தாம் ஆதரவு வழங்கப்போவதாக மஹிந்த ராஜபக்ஷ அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
Read More »புதிய அமைச்சரவை விவரங்கள்
அரச தலைவர் செயலகத்தில் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன முன்பாக புதிய அமைச்சரவை இன்று காலை பதவியேற்றது. அதன் முழுமையான விவரங்கள் வருமாறு: 1.ரணில் விக்கிரமசிங்க – தேசிய கொள்கைகள், பொருளாதார விவகார, புனர்வாழ்வு, புனரமைப்பு, வடக்கு அபிவிருத்தி, தொழிற்பயிற்சி மற்றும் இளைஞர் விவகார அமைச்சர். 2.மங்கள சமரவீர – நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர். 3.திலக் மாரப்பன – வெளிவிவகார அமைச்சர் 4.ஹரின் பெர்னான்டோ – தொலைத்தொடர்புகள்,டிஜிட்டல் உட்கட்டமைப்பு, …
Read More »பொலிஸ் அதிகாரத்தை சிறிசேன வழங்க மறுத்தது ஏன்?
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை கொலை செய்வதற்கான கொலை சதி விசாரணை முடிவடையும் வரை பொலிஸ் அதிகாரத்தை தன்வசம் வைத்திருக்க தீர்மானித்துள்ளார் சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள ராஜிதசேனாரட்ண இதனை தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தன்னை கொலை செய்வதற்கான சதி குறித்த விசாரணைகள் முடிவடையும் வரை பொலிஸ் அதிகாரத்தை தன்னிடம் வைத்திருக்க தீர்மானித்துள்ளார் என அமைச்சர் தெரிவித்துள்ளார். தன்னை கொலை செய்வதற்கான சதி முயற்சிகள் குறித்து நேர்மையான விசாரணைகளை முன்னெடுக்காததன் காரணமாகவே ரணில் …
Read More »வெடித்தது அடுத்த பிரச்சனை! கடும் அதிர்ச்சியில் ரணில்
சிறிலங்காவின் புதிய அமைச்சரவை அமைச்சர்களுக்கான சத்தியப்பிரமாணம் நடைபெற்றுள்ள நிலையில், அமைச்சுக்களுக்கான செயலாளர்களை நியமிப்பதில் இழுபறி நிலை ஆரம்பித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதன்படி குறித்த அமைச்சுக்களின் செயலாளர்களை தாமே தெரிவுசெய்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முடிவுசெய்துள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. கடந்த 26ஆம் நாள் இடம்பெற்ற ஆட்சிக் குழப்பத்தின் பின்னர் அமைச்சுக்களின் செயலாளர்கள் விடயத்தில் மாற்றம் ஏற்பட்டிருந்தது. முன்னர் இருந்த அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு பதிலாக புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தார்கள். ஆனாலும் தற்பொழுது அமைக்கப்பட்டுள்ள அமைச்சரவையில் …
Read More »மைத்திரி வெளியிட்டார் உத்தியோக பூர்வ அறிவிப்பை
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கோரிக்கைக்கு அமைய இன்றையதினம் புதிய அமைச்சரவை நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு இடையில் நேற்று விசேட கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. ஜனாதிபதியின் தலைமையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கலந்து கொண்டுள்ளார். அதற்கமைய இன்று புதிய அமைச்சரவை நியமிக்கப்படவுள்ளது. அதற்கமைய இன்று முதல் ஐக்கிய தேசிய …
Read More »ரணிலின் அதிரடி நடவடிக்கையால் ஆடிப்போன மைத்திரி
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் கொடுக்கப்பட்ட அமைச்சர்கள் பட்டியலை நிராகரித்த ஜனாதிபதியின் செயலுக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி அடுத்த களத்தில் இறங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு எப்படியாவது அமைச்சுப் பதவியை வழங்க ரணில் புது வியூகம் அமைத்துள்ளதுடன், அவர்களுக்கு அமைச்சுப் பதவியை வழங்குவதற்கான பிரேரணையினை நாடாளுமன்றில் சமர்ப்பிக்க உத்தேசித்துள்ளதாக அறியக்கிடைத்துள்ளது. எவ்வாறாயினும் குறித்த பிரேரணை நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி நிராகரித்தாலும் அதற்கு எதிராக நீதிமன்றத்தை நாட முடிவுசெய்துள்ளதாக …
Read More »அம்பலமானது ஆதாரம்! பெரும் சிக்கலில் மஹிந்த
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி நிலையில் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ஷவை சபாநாயகரினால் நேற்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சர்ச்சை ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் பதிவு செய்யப்படாத அரசியல் ஒன்றில் மஹிந்த ராஜபக்ஷ உறுப்புரிமையை பெற்றுக்கொண்டுள்ளதுடன், அந்தக் கட்சியின் தலைவராகவும் செயற்பட்டு வருகிறார். இதன் காரணமாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து பிரிந்து சென்ற மஹிந்த ராஜபக்ஷ, நாடாளுமன்றத்தில் உறுப்பினராக இருக்க …
Read More »