தமிழீழ விடுதலை புலிகளால் மறைத்துவைக்கப்பட்ட ஆயுதங்களை தோண்டி எடுத்து அதனை தென்னிலங்கையில் உள்ளவர்களுக்கு விற்பனை செய்தவர்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகியிருக்கும் நிலையில் விற்பனை செய்யப்படும் ஆயுதங்களை பயன்படுத்தி படுகொலைகளை செய்யவும் சதி நடந்துள்ளது. தமிழீழ விடுதலை புலிகள் மறைத்து வைத்த ஆயுதங்களை தேடிக் கண்டுபிடித்து, அவற்றை தெற்கின் பாதாள உலகக் குழுவினருக்கு விற்பனை செய்யும் நடவடிக்கை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 12 சந்தேக நபர்களை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 90 நாட்கள் …
Read More »கோத்தபாயவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க வலுக்கும் எதிர்ப்பு
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் களுத்துறை மாவட்ட எம்.பியான குமார வெல்கம விரைவில் தீர்க்கமான அரசியல் தீர்மானமொன்றை எடுக்கவுள்ளார் என நம்பகரமான வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது. அம்முடிவு கொழும்பு அரசியலில் திருப்புமுனையாக அமையும் எனவும் கூறப்படுகின்றது.கோத்தபாய ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவதற்கு குமார வெல்கம எம்.பி. போர்க்கொடி தூக்கியிருந்தாலும், கடும் எதிர்ப்பையும்மீறி கோத்தபாயவை களமிறக்கும் தீர்மானத்துக்கு ராஜபக்சக்கள் வந்துள்ளனர் எனக் கூறப்படுகின்றது.குறித்த தீர்மானம் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டபின்னர், குமார வெல்கம, மஹிந்த அணிக்கு …
Read More »வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட பெண்
வவுனியா நெளுக்குளம் பகுதியில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட இரு பிள்ளைகளின் தாயின் கையடக்க தொலைபேசியினை புலனாய்வு பிரிவினருக்கு வழங்கி பகுப்பாய்வு செய்யுமாறு வவுனியா மாவட்ட நீதிமன்ற நீதிபதி தஸ்னீம் பௌஷான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். வவுனியா நெளுக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுற்றுவட்ட வீதியில் இன்று (20.03) அதிகாலை வெட்டுக்காயங்களுடன் கிணற்றில் பெண்ணொருவர் சடலமாக கிடப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டினையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா மற்றும் நெளுக்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர். …
Read More »வலுப்பெற்றது இலங்கை ரூபாவின் பெறுமதி
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றைய தினம் வலுப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் வௌியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்கள் தொடர்பான அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 179 ரூபா 78 சதமாக காணப்பகின்றது. கடந்த 2018 ஆம் ஆண்டு இலங்கை ரூபாவின் பெறுமதி நூற்றுக்கு 16 சதவீதத்தினால் குறைவடைந்திருந்ததோடு இந்த வருடத்தில் நூற்றுக்கு 3 …
Read More »கிளிநொச்சியில் தொடர்ந்தும் மின்வெட்டு
கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ந்தும் மின்வெட்டு அமுல்படுத்தப்படுவதால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக விசனம் வெளியிட்டுள்ளனர். குறிப்பாக பகல் வேளைகளில் சுமார் நான்கு மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படுவதாகவும் இதுகுறித்து எவ்வித முன்னறிவித்தல்களும் வழங்கப்படுவதில்லை என்றும் அவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். நீண்ட நேர மின்வெட்டு காரணமாக வர்த்தகர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கின்றனர். மாவட்டத்தில் கடுமையான வெப்பம் நிலவும் நிலையில், மின்வெட்டும் அமுல்படுத்தப்படும் சந்தர்ப்பங்களில் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கின்றனர். மேலும் 4 …
Read More »பொது மக்களுக்கு மைத்திரி விடுத்துள்ள அறிவிப்பு
பாதீட்டு இடைவெளியை சமாளிப்பதற்கு அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாட்டுக்காக ஒன்றாய் இருப்போம் என்ற தொனிப்பொருளில் புத்தளம் மாவட்டத்தில் வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போது அவர் இதனைக் கூறியுள்ளார். பில்லியன் கணக்கான பாதீட்டு இடைவெளியை தணிப்பதற்கு நாம் அனைவைரும் முக்கியமான விடயங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது. பொதுமக்கள், பாதுகாப்பு தரப்பினர், அரச அதிகாரிகள் என்று பலரும் இந்த விடயத்தில் ஒன்றிணைய வேண்டும் …
Read More »வெளிநாட்டிலிருந்து வந்த பலர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது
வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்த 9 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமான முறையில் தங்கக்கட்டிகள் கொண்டு வந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் பெறுமதி 4 கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்தின் நுழைவு பகுதியில் வைத்து சுங்க பிரிவு அதிகாரிகளினால் குறித்த 9 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 3 இலங்கையர்களும் 6 இந்தியர்களும் அடங்குகின்றனர். வவுனியா பிரதேசத்தை சேர்ந்த 23 …
Read More »யாழில் மீண்டும் வாள்வெட்டு குழுவினர்…
யாழ்ப்பாணம் வேம்படி வீதியில் சாரதி ஒருவர் மீது வாள்வெட்டு குழுவொன்று தாக்குதல் மேற்கொண்டு தப்பிச்சென்றுள்ளது. இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். உந்துருளியில் வருகைதந்த குழுவொன்றே இவ்வாறு வாள் வெட்டு தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலில் படுகாயமடைந்த சாரதி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதோடு தாக்குதல் மேற்கொண்டவர்களை கைது செய்ய காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Read More »வெளிநாட்டில் பதுங்கியிருக்கும் சர்ச்சைக்குரிய இலங்கைத் தமிழர்!
சர்ச்சைக்குரிய நபரை இலங்கைக்கு நாடு கடத்த தாம் தயாராக இருப்பதாக சிங்கப்பூர் அரசாங்கம் அறிவித்துள்ளது. முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை நாடு கடத்துவதற்கு தேவையான ஆவணங்களை வழங்கினால் அவரை நாடு கடத்துவதாக சிங்கப்பூர் தெரிவித்துள்ளது. இலங்கை உட்பட பொதுநலவாய நாடுகளுக்கு தேவையான சந்தேக நபரை நாடு கடத்துவதற்கான உடன்படிக்கையில் சிங்கப்பூர் இணைந்துள்ளது. இதேவேளை, முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனுக்கு பாதுகாப்பு வழங்கப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால …
Read More »கொழும்பில் கூழ் விற்பனை
தமிழரின் பாரம்பரிய உணவுகளில் ஒன்றான கூழ் செய்யும் முறை என்னவென்பது இளய சமுதாயத்தினரில் பலர் அறிந்திருக்க மாட்டார்கள், அதன் சுவை மற்றும் அதன் போசாக்கு பற்றி இளைய சமுதாயம் அறிய வேண்டுமென்பதை நோக்காகக் கொண்டு வேம்படி மகளிர் உயர்தர பாடசாலையின் பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளையினர் எதிர்வரும் சனிக்கிழமை பங்குனி 23ம் திகதி காலை 11 மணிக்கு கூழ் விற்பனை செய்யவுள்ளனர். கொண்டு செல்லக்கூடிய கொள்கலங்களில் இவ்விற்பனை கொழும்பு-6 …
Read More »