இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து உறுப்பு நாடுகள் தீவிர கவனம் செலுத்தவேண்டும் என சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். வட மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கைக்கு மேலும் இரண்டு வருட கால அவகாசம் வழங்கப்பட்டமை தமிழ் மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளதாக விக்னேஸ்வரன் கூறியுள்ளார். இது மனித குலத்துக்கு எதிரான குற்றங்களை …
Read More »நடு வீதியில் திடீரென பற்றி யெரிந்த முச்சக்கர வண்டி
முச்சக்கர வண்டியொன்று திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவமொன்று இன்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது. கொழும்பு 7 தாமரைத்தடாகத்திற்கு அருகிலுள்ள வீதியிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தையடுத்து குறித்த பகுதியில் வாகனப் போக்குவரத்து சிறிது நேரம் தடைப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Read More »ஐ.தே.க. – கூட்டமைப்பு விவகாரம்: நீதிமன்றின் முக்கிய அறிவிப்பு
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க போலியான ஆவணத்தை வெளியிட்டமை தொடர்பான வழக்கில், முறைப்பாட்டாளரும் பிரதிவாதியும் மனுவை மீளப்பெற முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி, விக்கும் களுவாரச்சி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இந்த விடயம் தொடர்பாக நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிப்பதற்காக எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி குறித்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. 2015ஆம் …
Read More »காங்கேசன்துறை பகுதியில் 62 ஏக்கர் நிலப்பரப்பை அபகரிக்க முயற்சி
காங்கேசன்துறை பிரதேசத்தில் அமைந்துள்ள ராஜபக்ஷ் அரண்மனையை மையமாகக்கொண்டு மேலும் 62 ஏக்கர் நிலப்பரப்பை அபகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று இந்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தின் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு மற்றும் துறைமுகங்கள், கப்பற்றுறை அலுவல்கள் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சு மீதான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு …
Read More »இலங்கை திரும்பும் அகதிகள்! யாழ் உள்ளிட்ட பகுதிகளில் குடியேற்ற நடவடிக்கை
தமிழகத்தில் அகதிகளாக வசிக்கும் ஈழத் தமிழர்களின் 24 குடும்பங்கள் இலங்கைத் திரும்பவுள்ளனர்.நாளையும், எதிர்வரும் 28ம் திகதியும் குறித்த அகதிகள் இலங்கைத் திரும்பவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. ஐக்கிய நாடுகளின் அகதிகள் உயர்ஸ்தானிகரகத்தின் உதவியுடன் அவர்கள் நாடு திரும்பவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.விசேட விமான சேவைகளின் ஊடாக குறித்த இரண்டு தினங்களிலும், 24 குடும்பங்களைச் சேர்ந்த 54 பேர் நாடு திரும்பவுள்ளனர். தேசிய கொள்கைகள், பொருளாதார விவகார, மறுசீரமைப்பு மற்றும் மீள்குடியேற்றத்துறை வடக்கு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் …
Read More »பலாலியில் விரைவில் தரையிறங்கும் இந்திய விமானம்!
யாழ்ப்பாணம் – பலாலி விமானத் தளத்தில் வெகு விரைவில் தமது விமான சேவைகளை இந்தியா அரசாங்கம் ஆரம்பிக்க வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கேட்டுக் கொண்டுள்ளார். இலங்கை நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டத்தின் போக்குவரத்து அமைச்சிற்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதம் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், பலாலி விமான நிலையத்தில் அடுத்த மாதத்தில் விமான சேவைகளை …
Read More »பிரதமரின் பிறந்ததினத்தை முன்னிட்டு விசேட நிகழ்வுகள்!
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பிறந்ததினத்தை முன்னிட்டு விசேட நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று தனது 70ஆவது பிறந்த தினத்தை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு இன்று காலை 9.30 மணியளவில் அலரிமாளிகையில் விசேட சமயபூஜைகள் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து விசேட தேவையுடையவர்களுக்கு பிரதமர் சக்கர நாற்காலிகளையும் வழங்கி வைத்தார். அத்துடன் பிரதமரின் பிறந்த தினத்தினை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகளை ஐக்கிய தேசிய கட்சியினர் ஏற்பாடு …
Read More »ஈரான் கப்பலை கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டுவர நடவடிக்கை!
தென் கடற்பரப்பில் ஹெரொயின் போதைப்பொருளுடன் ஈரான் கப்பலொன்று கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அக்கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டவுள்ளது. மேலும் இதன்போது ஈரானிய பிரஜைகள் 9 பேர் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கப்பலில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் சுமார் 100 கோடி ரூபாய் பெறுமதியுடையதென தெரிவிக்கப்படுகின்றது. பொலிஸ் விசேட அதிரடிப் படையினரும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினரும் கடற்படையினருடன் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே இந்தக் கப்பல் கைப்பற்றப்பட்டுள்ளது. சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்ட …
Read More »ரணில் தொடர்பில் மஹிந்தவிடம் கசிந்த ரகசியம்!
நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட பல முன்னணி அரசியல்வாதிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த பிரபலம் ஒருவரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட ஆர்வம் கொண்டுள்ளார். இது குறித்து தனது நிலவரம் குறித்து ஆராய்ந்து பார்ப்பதற்காக ஜோதிடர் ஒருவரை நாடியுள்ளார். ஜனாதிபதி தேர்தலில் தனது சாதக பலன்படி எவ்வாறான பெறுபேறு கிடைக்கும் என ஆராய்ந்துள்ளார். எனினும் அவரின் எதிர்பார்ப்பிற்கு மாறான பதில் கிடைத்துள்ளது. குறித்த பிரபலம் …
Read More »சர்வாதிகாரியாக மாறிய ரணில்
ஐக்கிய தேசிய கட்சியும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும சர்வாதிகார ஆட்சியை முன்னெடுத்து செல்கின்றனர் என எதிர்க்கட்சி உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். கைத்தொழில், வாணிப அலுவல்கள், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள் குடியேற்றம், கூட்டுறவு அமைச்சு மற்றும் வெகுஜன ஊடகத்துறை பற்றிய அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சு ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர், மகிந்த ராஜபக்ச சர்வாதிகாரி அல்ல, அவர் சர்வாதிகாரி …
Read More »