Tuesday , October 14 2025
Home / செய்திகள் (page 94)

செய்திகள்

News

குடியுரிமையை துறக்கப் போன இடத்தில் கோத்தபாயவிற்கு காத்திருந்த அதிர்ச்சி!

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. படுகொலைச் செய்யப்பட்ட பத்திரிகையாசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் மகளே, சிவில் வழக்கொன்றை தாக்கல் செய்துள்ளார். தனது அமெரிக்க குடியுரிமையை துறப்பதற்காக கோத்தபாய ராஜபக்ச அமெரிக்காவிற்கு சென்றுள்ளதாக கருதப்படும் நிலையில், இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவர் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்கு, அவரது குடியுரிமை துறப்பில் செல்வாக்கு செலுத்துமா என்பது இனிவரும் நாட்களிலேயே தெரிய வரும். …

Read More »

புலம்பெயர் தேசத்தில் பரிதாபமாக உயிரிழந்த ஈழத்துச் சிறுவன்!

ஈழத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் பின்லாந்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளான். மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்தைச் சேர்ந்த குணசேகரம் (குணம் மாஸ்ரர்) என்ற அழைக்கப்படும் ஆங்கில ஆசிரியர் புலம்பெயர்ந்து அவரது குடும்பத்தினருடன் பின்லாந்தில் வசித்து வந்த நிலையில் அவரின் மகன் குணசேகரம் லோகபாலா என்ற சிறுவன் , கடந்த 27.03.2019 அன்று குடும்பமாக வாகனத்தில் சென்றபோது விபத்துக்குள்ளாகி படுகாயமடைந்த நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் . அவர் கடந்த வியாழக்கிழமை காலையில் சிகிச்சை …

Read More »

சம்பந்தனிற்கு அட்வைஸ் செய்யும் ஆனந்தசங்கரி!

இரா.சம்பந்தனிற்கு அரசாங்கம் வழங்க உத்தேசித்துள்ள ஆடம்பர பங்களா உள்ளிட்ட சொகுசு வசதிகளை பெற வேண்டாமென கடிதம் மூலம் கோரியுள்ளார், தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி. இரா.சம்பந்தனிற்கு, “தயவுசெய்து திரும்பிப் பாருங்கள்“ என்ற தலைப்பில் இன்று கடிதமொன்றை அனுப்பியுள்ளார். அந்த கடிதத்திலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில்- தங்களுடனும், எமது மக்களுடனும் சம்பந்தப்பட்ட பல விடயங்கள் சார்பாக எனது கருத்தைத் தெரிவிக்காது அமைதியாக இருந்துள்ளேன். ஆனால் இதை அவசரஅவசரமாக எழுதும் நோக்கம், …

Read More »

இலங்கை வாழ் மக்களுக்கு மின்சாரம் தொடர்பில் மகிழ்ச்சியான செய்தி

நாட்டில் முழுமையான மின் தேவையை நிறைவு செய்ய 300 மெகா வாட்ஸ் மின் உற்பத்தியை அதிகரிப்பதற்கான வளம் கண்டறியப்பட்டுள்ளதால், எதிர்வரும் 10ஆம் திகதி புதன்கிழமை தொடக்கம், மின்வெட்டு நடைமுறை நீக்கப்படும் என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். ‘நாட்டில் ஏற்பட்டுள்ள 300 மெகா வாட்ஸ் மின் பற்றாக்குறையை ஈடு செய்வதற்கான வழிவகைகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்தப் பற்றாக்குறை கடந்த ஆண்டு தொடக்கம் காணப்படுகின்றதுகளனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலைத்தில் …

Read More »

இராணுவத்தினருக்காக அரசாங்கம் எதையும் செய்யவில்லை! ரோஹித

போரினால் ஊனமுற்ற இராணுவத்தினருக்காக இந்த அரசாங்கம் எந்தவொரு செயற்திட்டத்தையும் முன்னெடுக்கவில்லை என்று மஹிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்த்தன தெரிவித்தார். நாடாளுமன்றில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற வரவு செலவு திட்டத்தின் மீதான இறுதிநாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “அரசாங்கம் இராணுவத்துக்கு எவ்வாறான மரியாதைக் வழங்குகிறது என்பது எமக்கு நன்றாகத் தெரியும். 30 வருடங்களாக நாட்டில் நிலவிய யுத்தத்தை முடிவுக்குக் …

Read More »

இதுவரை அனுபவிக்காத ஒரு தருணத்தில் ஈழத்து பெண் சின்மயி!

பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இதில் பங்குபெறும் ஒவ்வொரு பாடகரும் மக்களிடம் நல்ல அங்கீகாரத்தை பெறுகின்றனர். அதோடு தங்கள் திறமையால் சினிமாவிலும் ஜொலிக்க ஆரம்பிக்கிறார்கள். சிறுவர்களுக்கான போட்டி இப்போது நடந்து வருகிறது இதில் பங்குபெற்ற இலங்கை பெண் சின்மயி இப்போது மகிழ்ச்சியில் உச்சத்தில் உள்ளார். ஏனெனில் இதுவரை தான் தனது தாய் நாட்டிற்கு சென்றதில்லை என்று கூறி மன வருத்தம் அடைந்தார். இந்த …

Read More »

தமிழ் மக்களுக்கும் இறைமை உண்டு! சம்பந்தன் தெரிவிப்பு

தமிழ் மக்களுக்கும் இறைமைய உண்டு என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.இந்த வருடத்திற்கான வரவு செலவுத்திட்டம் மீதான இறுதிநாள் விவாதம் தற்போது நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது. இந்த இறுதிநாள் விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் புதிய அரசியலமைப்பின் உருவாக்கப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. எனினும் தற்போது அந்த பணிகள் கைவிடப்பட்டுள்ளன. ஏன் அந்த பணிகள் …

Read More »

மஹிந்த அணியின் எச்சரிக்கை

நாட்டை நேசிப்பவர்கள் வரவு செலவுத்திட்டத்தினை எதிர்க்க வேண்டும் என மஹிந்த அணி கோரிக்கை விடுத்துள்ளது. இந்த வருடத்திற்கான வரவு செலவுத்திட்டம் மீதான இறுதி நாள் விவாதம் தற்போது நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது. இந்த இறுதிநாள் விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே மஹிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிர்கட்சியினர் இந்த வரவு செலவுத்திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் …

Read More »

த.தே.கூட்டமைப்பு இன்று மாலை தீர்மானம்

ஜனாதிபதி தேர்தலில் கூட்டமைப்பின் முடிவு

பாதீட்டுக்கான வாக்களிப்பு தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று மாலை நான்கு மணியளவில் கலந்துரையாடவுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இதேவேளை, பாதீட்டுடின் இறுதி வாக்களிப்பின் போது அதில் கலந்து கொள்ளாமல் இருப்பற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தீர்மானித்துள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கூட்டமைப்பிற்கும் இடையில் இன்று பிற்பல் நாடாளுமன்ற வளாகத்தில் …

Read More »

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முக்கிய தீர்மானம்

வரவு- செலவு திட்ட வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாதிருக்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினர் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 2019 ஆம் ஆண்டுக்கான வரவு -செலவு திட்ட இறுதி வாக்கெடுப்பு இன்று மாலை பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது. இந்நிலையில், ஒன்றிணைந்த கூட்டு எதிர்க்கட்சியினர் குறித்த வரவு – செலவுதிட்டத்திற்கு எதிராக வாக்களிக்க தீர்மாத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More »