ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்குமிடையில் கூட்டணி அமைப்பது தொடர்பான மூன்றாம் கட்ட கலந்துரையாடல் சற்று முன்னர் ஆர்மபமாகியுள்ளது. அத்துடன் இந்த கலந்துரையாடலில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் தொடர்பிலும் கலந்துரையடப்படவுள்ளது.
Read More »பெற்றோரை சோகத்தில் ஆழ்த்திய 16 வயதுடைய மாணவி
மஸ்கெலிய – குலெனுஜி தோட்டத்தில் வசிக்கும் பாடசாலை மாணவி ஒருவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 16 வயதுடைய பாடசாலை மாணவியே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக காவற்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இம் முறை கல்வி பொது தராதர பத்திர சாதாரண தர பரீட்சையில் சித்தியடைந்து உயர் தரத்திற்கு தெரிவாகியுள்ள மாணவியே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தாயாரின் சேலையினால் இவ்வாறு தூக்கிட்டு …
Read More »பலாலி விமான நிலையத்தில் தரையிரங்கினார் சந்திரிக்கா!!
யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள முன்னாள் ஜனாதிபதியும் தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகத்தின் தலைவியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் பலாலி விமான நிலையத்தில் வரவேற்றார்.
Read More »வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களுக்கு ஆலோசனை
அதிக வெப்பத்துடன் கூடிய காலநிலை மே மாதம் இறுதி வரை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வெப்பநிலை 32 பாகை முதல் 41 பாகை செல்சியஸ் வரையிலான எல்லைக்குள் இருக்கும் போது கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய தேவையுள்ளது. இதன் காரணமாக தசைப்பிடிப்புடன் அலர்ச்சி ஏற்படலாம். வடமேல், வடக்கு, வடமத்திய மாகாணங்களிலும், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கம்பஹா, அம்பாறை மாவட்டங்களிலும் இத்தகைய நிலை நீடிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் …
Read More »ரூபாவின் மதிப்பு 4.5 சதவீதத்தினால் அதிகரிப்பு
சர்வதேச வர்த்தகத்தின் மூலம் இலங்கைக்கு நன்மையுள்ள இறக்குமதி செலவுகள் மேற்கொள்ளப்படும் பாரிய நிதி முகாமைத்துவத்தின் காரணமாக வர்த்தகத்தில் ஏற்படும் சரிவு குறைவடைந்திருப்பதாக மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்தார். வெளிநாட்டு நாணயம் பெருந்தொகையில் ஈர்க்கப்பட்ட வாகனத்திற்கான கொடுப்பனவு தங்கம் மற்றும் எரிப்பொருள் ஆகியவற்றை கொள்வனவு செய்வதற்கான செலவை கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின் காரணமாக தற்பொழுது இந்த இறக்குமதி செலவு குறைந்திருப்பதாக ஆளுநர் சுட்டிக்காட்டினார். இலங்கை மத்திய வங்கியின் …
Read More »முல்லைத்தீவில் மூன்று பிள்ளைகளின் தாய் வெட்டிக்கொலை!!
பெண் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அவருடைய கவனைத் தேடிப் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். உடையார்கட்டு மூங்கிலாறு வடக்கு பகுதியில் கடந்த சனிக்கிழமை நள்ளிரவு பெண் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருந்தார். சம்பவத்தில் வெட்டிக் கொல்லப்பட்டவர் மூன்று பிள்ளைகளின் தாய் எனத் தெரிவிக்கப்படுகிறது. கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தில் கணவன் மனைவியை கத்தியால் கழுத்தில் வெட்டிக்கொன்றார் என்று விசாரணைனளில் தெரியவந்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
Read More »மைத்திரி வெளியிட்டுள்ள அதிரடி கருத்து
மொழியினால் நாட்டு மக்கள் பிளவுபட்டிருப்பது நாட்டின் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை நிலைநாட்டுவதற்கு தடையாக உள்ளது என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார். இதனை கட்சி பேதமின்றி அனைத்து அரசியல்வாதிகளும் பொறுப்பேற்க வேண்டும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டார். அனைத்து இன, மத பிரிவினர்களிடையே ஏற்படுத்திக்கொள்ளும் புரிந்துணர்வு மற்றும் பரஸ்பர நம்பிக்கையின் ஊடாக …
Read More »மேஜர் பசீலனின் தாயாருக்கு சி.சிறிதரன் அஞ்சலி
தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதிகளில் ஒருவரான மேஜர் பசீலனின் தாயார் தனது 86 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார். கடந்த ஐந்தாம் திகதி உயிரிழந்த அன்னாரின் பூதவுடலுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் நேற்று அஞ்சலி செலுத்தினார். முல்லைத்தீவில் வசித்து வந்த பசீலனின் தாயாரான நல்லையா தங்கம்மா சுகயீனம் காரணமாக உயிரிழந்தார். தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் உலகமே வியந்த ஒப்பற்ற தளபதியான பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் தளபதியாக மேஜர் பசீலன் செயற்பட்டிருந்தார். …
Read More »மதங்களுக்கு இடையில் முறுகல்…யாழில் பதற்றமான சூழ்நிலை
நல்லூர் – செம்மணிச் சந்தியில் யாழ்ப்பாணம் வரவேற்பு பலகைக்கு அருகாமை மற்றும் செம்மணி இந்து மயானத்துக்கு அண்மையில் என இரு இடங்களில் கிருஸ்தவ மதத்தினரால் நடப்பட்ட பதாகைகளால் நேற்று இரவு பரபரப்பு ஏற்பட்டது. அந்த பதாகைகள் நடப்பட்டமை தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதால் பொலிஸார் இரவு 11 மணிக்கு அங்கு வந்து சம்பவம் தொடர்பில் ஆராய்ந்தனர். அத்துடன் அந்தப் பகுதியில் நீண்ட நேரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனம் ஒன்றின் சாரதியிடன் …
Read More »அதிகரித்த வெப்பத்தால் பற்றி எரிந்த வயல்!!
யாழ்ப்பாணம், காரைநகர்ப் பகுதியில் அறுவடையின் பின்னர் விடப்பட்டிருந்த வைக்கோல்கள் தீப்பற்றி எரிந்துள்ளது. சுட்டெரிக்கும் கடும் வெப்பமான காலநிலை நிலவுவதால் தீ ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. சூடு அடிப்பட்டு வயல்களில் போடப்பட்ட வைக்கோல்களில் தீ பற்றியது. அது அங்குள்ள வயல்களில் மெல்ல மெல்ல பரவ ஆரம்பித்தது. தீ வீடுகளுக்குள் பரவாதிருக்க ஈரமான சாக்குகளைப் போட்டு தடுக்கப்பட்டது என்று மக்கள் தெரிவித்தனர்.
Read More »