அரசியல் அமைப்பு சபையின், அடுத்த கூட்டம் எதிர்வரும் 30 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில், புதிய பிரதம நீதியரசரை நியமித்தல் மற்றும் கணக்காய்வாளர் நியமனங்கள் குறித்து ஆராயப்படவுள்ளன. இலங்கை அரசியல் அமைப்பின், 19 ஆவது திருத்தத்திற்கு அமைய பிரதம நீதியரசரை நியமித்தல் மற்றும் கணக்காய்வாளரை நியமித்தல் ஆகிய பொறுப்புகள் அரசியல் அமைப்பு சபைக்கு வழங்கப்பட்டுள்ளன. இதற்கமைய, பதவிகளுக்காக ஜனாதிபதியினால் பரிந்துரைக்கப்பட்ட பெயர்கள் குறித்த தீர்மானம் எதிர்வரும் 30 …
Read More »இலங்கை மக்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால பகிரங்க அறிவிப்பு
எதிர்கால சந்ததியினரின் நலனை கருத்திற்கொண்டு அனைத்து இலங்கையர்களும் இன்றைய தினம் (திங்கட்கிழமை) மரக்கன்றொன்றை நாட்ட வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பகிரங்க அறிவிப்பு விடுத்துள்ளார். ஜனாதிபதி செயலகம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் சுற்றாடலுக்கான பொறுப்பை நிறைவேற்றும் பொருட்டு அனைத்து இலங்கையர்களும் மரக்கன்றொன்றை நாட்டுவதற்கு ஒன்றிணையுமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். இதேவேளை இவ்வருட சிங்கள, தமிழ் புத்தாண்டு நிகழ்வுகளில் மரம் …
Read More »வைகோவிற்கு ஏன் இந்த நிலை??
அரசியலில் நேர்மை, பொதுவாழ்வில் தூய்மை, லட்சியத்தில் உறுதி ஆகிய முழக்கங்களோடு கடந்த 1996, மே 6-ம் தேதி உருவாகியது மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்(மதிமுக). சிறந்த அரசியல்வாதி, எந்தத் தலைவரையும் எந்த நேரத்திலும் சந்திக்கும் வலிமை படைத்தவர், , சொல்லாற்றல் மிக்கவர், இலக்கியவாதி, தமிழ்- தமிழர் உணர்வு மிக்கவர், தேர்ந்த வழக்கறிஞர் என பன்முகத் தன்மைகளைக் கொண்டவர் மதிமுக பொதுச் செயலாளர் வை. கோபால்சாமி. திமுகவின் கொள்கை, அறிஞர் அண்ணாவின் …
Read More »ஜனாதிபதி தேர்தலில் போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு இடமளிக்க கூடாது
போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்களை, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதிக்க கூடாதென முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். பன்னாட்டு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே சந்திரிகா இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “ஜனாதிபதி தேர்தல் குறித்து உத்தியோகப்பூர்வமான அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தரப்பினர் தேர்தல் குறித்த பரப்புரைகளை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர். மேலும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மீது …
Read More »மீண்டும் ஜனாதிபதியாக மஹிந்த!
எமது கட்சி மக்களின் பெரும்பான்மையுடன் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நாட்டின் தலைவராக வருவதையே நாடு பார்க்க விரும்புகின்றது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அவரை ஜனாதிபதியாக அல்லது அரசாங்கத்தின் தலைவராக பார்க்க விரும்புகிறது என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவாரா என்பது தொடர்பில் அவர் கருத்துத் தெரிவிக்கையில், முன்னாள் ஜனாபதி மகிந்த ராஜபக்சவை ஸ்ரீ …
Read More »அரச சலுகைகள் வேண்டாம் என வலியுறுத்திய கூட்டமைப்பு எம்.பிக்கள்
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிற்கு அரசாங்கம் வழங்கவுள்ள பங்களாவை பெற்றுக்கொள்ளக்கூடாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் நேரில் வலியுறுத்தியுள்ளனர். எனினும், அந்த கோரிக்கையை இரா.சம்பந்தன் அடியோடு நிராகரித்தார். எதிர்க்கட்சி தலைவராக இரா.சம்பந்தன் நியமிக்கப்பட்ட பினனர், எதிர்க்கட்சி தலைவருக்குரிய வரப்பிரசாதங்களை பெற்றிருந்தார். அதில் எதிர்க்கட்சி தலைவருக்குரிய வாசஸ்தலமும் அடங்கும். எனினும், மஹிந்த ராஜபக்ச எதிர்க்கட்சி தலைவரான பின்னர், அவர் எதிர்க்கட்சி தலைவருக்குரிய வாசஸ்தலத்தை பெற்றுக்கொள்ளவில்லை. வயதில் …
Read More »இலங்கை மக்களிடம் மைத்திரி விடுத்துள்ள முக்கிய கோரிக்கை
தமிழ், சிங்கள புத்தாண்டு தினத்தில் மரக்கன்று ஒன்றினை நாட்டுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சுற்றாடல் பாதுகாப்பிற்கான பொறுப்பினை நிறைவேற்றுமாறு ஜனாதிபதி அவர்கள் சகல இலங்கையர்களிடமும் கோரிக்கை விடுத்துள்ளார். சுற்றாடல் பாதுகாப்பின் பெறுமதியை இன்று எமது நாடு மட்டுமன்றி முழு உலகமும் இனங் கண்டுள்ளதாக இன்று முற்பகல் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் இடம்பெற்ற நாட்டுக்காக ஒன்றிணைவோம் தேசிய அபிவிருத்தி செயற்திட்டத்தின் நிறைவு வைபவத்தில் ரையாற்றும்போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை …
Read More »அமெரிக்க குடியுரிமையை துறந்த கோத்தா
அமெரிக்க குடியுரிமையை துறக்கும் பணிகள் வெற்றிகரமாக பூர்த்தியாகி விட்டதென தெரிவித்துள்ளார் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச. அமெரிக்காவிலிருந்து நேற்று காலை நாடு திரும்பிய கோத்தபாயவிற்கு, கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெரும் வரவேற்பளிக்கப்பட்டது. இதன்பின்னர், ஊடகங்களிடம் பேசியபோதே இதனை தெரிவித்தார்.
Read More »நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை தொடர்ந்தும் நீடிக்கும்
நாட்டில் கடந்த சில நாட்களாக நிலவிவரும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை தொடர்ந்தும் நீடிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனை தெரிவித்துள்ளது. அதன்படி நாட்டின் பல பிரதேசங்களில் இன்று மாலை 02 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டல திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. குறிப்பாக மத்திய, சப்பரகமுவ, தென், ஊவா, வடமேல் மற்றும் மேல் மாகாணங்கள் அம்பாறை மற்றும் …
Read More »யாழ்ப்பாணத்தில் துப்பாக்கிச் சூடு?
யாழ். மாதகல் பகுதியில் கடந்த வியாழக்கிழமை பொலிஸாரினால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.எனினும் தாம் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளவில்லை என பொலிஸார் மறுப்பு வெளியிட்டுள்ளனர். இளவாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாதகல் பகுதியில் கஞ்சா போதைப்பொருள் வியாபாரியை பொலிஸார் கைது செய்ய முயன்றபோது, சந்தேகநபர் அங்கிருந்து தப்பி செல்ல முற்பட்டுள்ளார். இதன்போது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். மேலும் இந்த சம்பவத்தால் அப்பகுதி …
Read More »