அமைச்சர்களான சஜித் பிரேமதாச மற்றும் ரவி கருணாநாயக்க ஆகியோருக்கு இடையில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலைமையை தணிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கையை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் ஐக்கிய தேசிய கட்சியின் 38 பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து முன்வைத்துள்ளனர். அவர்களுக்கு இடையிலான முரண்பாட்டை நீக்கி, ஒரே நிலைப்பாட்டில் கட்சியை முன்நடத்துமாறும் அவர்கள் கோரியுள்ளனர். கடந்த சில நாட்களாக அமைச்சர்களான சஜித் பிரேமதாஸ மற்றும் ரவி கருணாநாயக்க ஆகியோர் …
Read More »கோட்டாவிற்கு எதிரான வழக்கின் பின்னணியில் மங்கள சமரவீர
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக அமெரிக்காவில் வழக்கு தொடரப்பட்டதன் பின்னணியில் நிதி அமைச்சர் மங்கள சமரவீர செயற்பட்டிருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன குற்றம் சுமத்தியுள்ளது. கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்து வெளியிடும்பொதே நாடாளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜயசேகர இதனை தெரிவித்துள்ளார். அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் துணையுடன் அமைச்சர் மங்கள சமரவீர கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக இந்த வழக்கினை பதிவு செய்திருப்பதாக கூறியுள்ளார். ஜனாதிபதி தேர்தல் …
Read More »சிறிலங்காவுக்கு உதவுவதில் ஐ.நா உறுதி
சிறிலங்கா மக்களின் நிலையான அபிவிருத்தி மற்றும் நல்லிணக்க நிகழ்ச்சி நிரலுக்கு தொடர்ந்தும் உதவுவதில் ஐ.நா அர்ப்பணிப்புடன் இருப்பதாக ஐ.நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெஸ் தெரிவித்துள்ளார். நியூயோர்க் சென்றுள்ள சிறிலங்கா நிதியமைச்சர் மங்கள சமரவீர, ஐ,நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெசை நேற்றுமுன்தினம் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார். இதன்போதே அவர், சிறிலங்காவுக்கு உதவ தொடர்ந்தும் உறுதி பூண்டிருப்பதாக குறிப்பிட்டார். சிறிலங்காவில் அண்மையில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி அமைதியான முனையில் தீர்க்கப்பட்டமை குறித்தும் இந்தச் …
Read More »பொன்சேகாவுக்கு அமைச்சர் பதவி கிடைக்காது
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவருக்கும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அமைச்சர் பதவிகளை வழங்கமாட்டார் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் தெரிவித்துள்ளார். ”தேசிய அரசாங்கம் அமைக்கும் பேச்சுக்கே இடமில்லை. எந்தவொரு சூழ்நிலையிலும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஊடாக நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு அமைச்சர்களாக சிறிலங்கா அதிபர் சத்தியப்பிரமாணம் செய்து வைக்கமாட்டார். அத்துடன், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு உள்நாட்டு விவகார …
Read More »உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் தேர்தல்!
தமிழ்நாட்டில் இன்று, இந்திய நாடாளுமன்றத்தின் 38 தொகுதிகளுக்கான தேர்தலும், 18 சட்டமன்றத் தொகுதிகளுகான இடைத்தேர்தலும் சற்று முன்னர் ஆரம்பமாகி நடந்து வருகிறது. இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கான இரண்டாவது கட்ட வாக்களிப்பு- 12 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில், 96 தொகுதிகளில் இன்று நடைபெறுகிறது. இங்கு, இன்று காலை 7 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பமானது. தமிழ்நாட்டில் வேலூர் தவிர்ந்த ஏனைய 38 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் இன்று காலை வாக்களிப்பு ஆரம்பமாகியுள்ளது. …
Read More »முல்லைத்தீவில் பெரும் சோகம்
முல்லைத்தீவு – முள்ளியவளை பகுதியில் அதிக வெப்பமான வானிலை காரணமாக உயிரிழந்த ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் 51 வயதானவர் என்று காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். ஆடுகளை மேய்க்கும் அவர், ஓய்வுக்காக கூடாரம் ஒன்றில் உறங்கிய வேளையில் அவர் மரணித்திருப்பதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
Read More »யாழில் வைத்தியசாலையில் பொலிஸார் அட்டகாசம்!!
மதுபோதையில் உந்துருளியைச் செலுத்திய பலாலிப் பொலிஸார் வீதியில் வீழ்ந்து படுகாயமடைந்து தெல்லிப்பழை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்னர், மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்களுடனும் பொலிஸார் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் என்று மருத்துவமனை வட்டாரத்தால் தெரிவிக்கப்பட்டது. சுன்னாகம் பகுதிநோக்கி உந்துருளியில் பயணித்த இரு பொலிசாரும் மதுபோதையில் உந்துருளியைச் செலுத்திச் சென்றதோடு வீதியால் பயணித்த பெண் ஆசிரியர் ஒருவரையும் மோதித்தள்ளினர். இதன்போது வீழ்ந்த இரு பொலிசாரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சமயம் இருவரும் போதையின் …
Read More »பாராளுமன்ற தேர்தலில் வரிசையில் நின்று வாக்களித்த சீமான்!
லோக்சபா தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு மொத்தம் 95 தொகுதிகளில் நடைபெறுகிறது. இன்று புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் 39 தொகுதிகளில் லோக்சபா தேர்தல் நடக்கிறது. இந்நிலையில் சென்னையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அரைமணி நேரத்திற்கும் மேலாக வரிசையில் நின்று தனது வாக்கினை பதிவு செய்தார். அதேபோன்று, தேமுதிக தலைவர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தனர். அவர்களின் மகன் விஜயபிரபாகரன் மற்றும் …
Read More »ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் கருத்தை வெளியிட்டார் மஹிந்த
அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு எந்தவித சதித்திட்டமும் இல்லை எனவும் தேவைப்படும் நேரத்தில் அதனை மேற்கொள்ள தயாராக இருப்பதாகவும் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ ஆகியோரின் பங்குபற்றுதலுடன் பெல்லன்வில ராஜமகா விகாரையில் இடம்பெற்ற தலைக்கு எண்ணெய் தேய்க்கும் நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தற்போது மின்சாரம், நீர், அதிக …
Read More »கோத்தாவிற்கு எதிரான வழக்கு விபரங்கள் பகிரங்கப்படுத்தப்பட்டது!
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவிற்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சிவில் வழக்குகள் தொடர்பில் கலிபோர்னியாவின் மத்திய மாவட்ட அமெரிக்க சமஷ்டி நீதிபதி பகிரங்கப்படுத்தியுள்ளதாக ஊடகவியலாளர்களைப் பாதுகாக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது. 2009 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க கொலை விவகாரத்தில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் வகிபாகம் தொடர்பில் விசாரிக்குமாறு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று அவ்வமைப்பு மேலும் குறிப்பிட்டுள்ளது. அத்தோடு …
Read More »