வடக்கு மாகாணத்தில் சுமார் 2 ஆயிரம் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ளனர் என்று இராணுவ ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. நாட்டில் அண்மையில் ஏற்பட்ட வெடி குண்டு தாக்குதலை அடுத்து பொது மக்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொடருந்து நிலையம் , தொடருந்து பாதைகள், தேவாலயங்கள், கோயில்கள், மின் நிலையங்கள், அரச கட்டடங்கள், மருத்துவமனைகள், ஹோட்டல்கள், பேருந்து நிலையங்கள், நெடுஞ்சாலைகள், பொதுச் சந்தை போன்ற இடங்களில் இராணுவத்தினர் கடமையில் …
Read More »சுமந்திரனால் ஹிஸ்புல்லாவிற்கு நெருக்கடி ஆரம்பம்!
இலங்கையிலுள்ள 130 இளைஞர்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்புடன் தொடர்புள்ளதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை இடம்பெற்ற ஊடக பிரதானிகளுடனான சந்திப்பின்போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார். அத்தோடு, எதிர்வரும் நாட்களில் இந்நடவடிக்கை கட்டுப்படுத்தப்படும் என நம்புவதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். இதேவேளை, கிழக்கு ஆளுநருக்கும் தௌஹீத் ஜமாத்திற்கும் இடையேயான தொடர்பு குறித்து விசாரிக்க வேண்டும் என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்திருந்ததை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, …
Read More »பயங்கரவாதத்தை அழித்து அமைதியான சூழலை ஏற்படுத்துவேன்!
பயங்கரவாதத்தை நாட்டிலிருந்து முற்றாக இல்லாதொழித்து நாட்டில் அமைதியும் சுதந்திரமுமிக்க சூழலை விரைவில் ஏற்படுத்தும் பொறுப்பினை அரச தலைவர் என்ற வகையில் தான் ஏற்றுக்கொள்வதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். நேற்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சர்வமத ஒன்றுகூடலின்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். கொடூர பயங்கரவாதத்தினை நாட்டிலிருந்து முற்றாக இல்லாதொழிப்பதற்கு அனைத்து தரப்பினரதும் ஒத்துழைப்பு தற்போது கிடைத்துள்ளதாக ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார். இச்செயற்பாடுகளில் நாட்டின் பாதுகாப்பு துறையினர் மீது தான் …
Read More »கொழும்பு பள்ளிவாசலுக்குள் பரபரப்பை ஏற்படுத்தய சம்பவம்!
கொழும்பு கொம்பனித் தெருவில் பள்ளிவாசலுக்குள்ளிருந்து 47 வாள்கள் மீட்கப்பட்டுள்ளன. பள்ளி வீதி பகுதியிலுள்ள பள்ளிவாசலில் இருந்தே வாள்கள் மீட்கப்பட்டன. பள்ளியின் மதகுருவின் படுக்கைக்கு கீழே வாள்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. அத்துடன் இராணுவ பயன்பாட்டிற்குரிய ஆடைகளும் மீட்கப்பட்டிருந்தன. மதகுரு தற்பொழுது விசாரணை செய்யப்பட்டு வருகிறார். இச்சம்பவத்தால் படைத் தரப்பு செய்வதறியாது தடுமாறுவதாக கூறப்படுகிறது.
Read More »வவுனியா முஸ்லிம் பகுதிகள் சுற்றிவளைப்பு
வவுனியாவில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதிகளில் இரர்ணுவமும் பொலிஸாரும் இணைந்து இன்று காலை சுற்றிவளைப்பு தேடுதல் மேற்கொண்டனர். வவுனியா பட்டானிச்சூர் மற்றும் சாளம்பைக்குளம் பகுதிகளிலேயே இவ்வாறு அதிகளவான பொலிஸாரும் இராணுவத்தினரும் குவிக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டுள்ளதுடன் வீதியால் செல்லும் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வாகனங்களும் நிறுத்தி சோதனை செய்யப்பட்டிருந்தது. கொழும்பு மற்றும் மட்டக்களப்பில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களை அடுத்து நாட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வவுனியாவில் முக்கிய இடங்களான வைத்தியசாலை, பேருந்து …
Read More »சம்பந்தனா புலிகளைப்பற்றி இப்படி கூறுவது!
தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்ட வடிவத்திற்கும், இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் போராட்டங்களுக்கும் இடையில் பாரிய வித்தியாசம் காணப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவரும், முன்னாள் எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவிக்கின்றார். தமிழீழ விடுதலைப் புலிகள் குறிக்கோள்களுடன் போராட்டங்களை நடத்தியதாக சுட்டிக்காட்டிய இரா.சம்பந்தன், இஸ்லாமிய அடிப்படைவாதிகள் குறிக்கோள்கள் இன்றி போராட்டங்களை நடத்தி வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, இலங்கை மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுடன், இலங்கை வாழ் முஸ்லிம் மக்கள் அனைவரையும் …
Read More »தீவிரவாத தாக்குதல்கள் தொடர்பில் 76 பேர் கைது
உயிர்த்த ஞாயிறு தினத்தில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதலின் பின்னரான சோதனை நடவடிக்கைகளில், இதுவரை சந்தேகத்தின் பேரில் 76 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று மாலையும், இரவும் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் பல்வேறு பிரதேசங்களில் வைத்து 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை ஊடகப் பேச்சாளரான காவல்துறை அத்தியட்சகர் ருவான் குணசேகர இதனைத் தெரிவித்துள்ளார். திரப்பனையில் 4 பேரும், இரக்குவானையில் 3 பேரும், வவுணதீவு மற்றும் மீகலாவை பிரதேசங்களில் இருவரும் கைது …
Read More »இலங்கையில் கத்தோலிக்க தேவாலயங்கள் மூடல்!
இலங்கையில் கத்தோலிக்க சபையின் கீழ் செயல்படும் அனைத்து தேவாலயங்களும் தற்காலிகமாக மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கிறிஸ்தவ தேவாலயங்கள், மற்றும் ஓட்டல்களில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 359 பேர் பலியானார்கள். இன்னும் இலங்கையில் பல்வேறு இடங்களில் குண்டுகள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இலங்கையில் கத்தோலிக்க சபையின் கீழ் செயல்படும் அனைத்து தேவாலயங்களும் தற்காலிகமாக மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Read More »இலங்கைக்குள் ஊடுருவிய 2 ஐ.எஸ் தீவிரவாதிகள்?
ஐ.எஸ் அமைப்பில் பயிற்சி பெற்ற இரண்டு பேர் இலங்கைக்குள் ஊடுருவியுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது. சிரியா, ஈரானில் பயிற்சி பெற்ற இவர்கள் இலங்கைக்குள் ஊடுருவியிருப்பதுடன், உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலுடன் தொடர்புபட்டுள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளது.
Read More »புலிகளின் போர்முறையை விட இது வித்தியாசமானது!
தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பில் புலனாய்வு தகவல்கள் கிடைப்பதில் சிக்கல் நிலவியதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அவர் வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தகவல்களை பரிமாறிக் கொள்வதில் நிலவிய சிக்கல் தொடர்பில் அதிகாரிகள் தங்களது கவனத்தை செலுத்தியுள்ளனர். தற்போது தீவிரவாதிகளை கைது செய்யவும், தீவிரவாத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். இதுவரை இலங்கையர்களுடன் தொடர்புடைய அமைப்பு ஒன்று சர்வதேச அமைப்பு ஒன்றுடன் தொடர்பினை வைத்துள்ளது. இந்த …
Read More »