தொடர் குண்டுத் தாக்குதல்களை தொடர்ந்து ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையினால் நாடு முழுவதிலும் பலத்த பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள போதிலும், யாழில் இராணுவ முகாமுக்கு அருகில் வைத்து இளைஞனொருவர் மீது வாள் வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம்- சாவகச்சேரி, தம்புத்தோட்டம் படை முகாமுக்கு அருகில் குறித்த வாள் வெட்டு சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த மிருசுவில் கெற்போலி மேற்கை சேர்ந்த கனகரத்தினம் நிரோசன் (வயது 21) யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை …
Read More »உயர் பதவிகளில் இன்று அதிரடி நியமனங்கள்!
சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய புதிய பிரதம நீதியரசராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று (29) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். மேலும், சொலிசிட்டர் ஜெனரல், ஜனாதிபதி சட்டத்தரணி தப்புல டி லிவேரா பதில் சட்டமா அதிபராகவும், மேலதிக கணக்காய்வாளர் நாயகம் சூலந்த விக்ரமரத்ன கணக்காய்வாளர் நாயகமாகவும், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன பதில் பொலிஸ்மா அதிபராகவும், முன்னாள் பொலிஸ்மா …
Read More »தாக்குதல் நடத்த பயங்கரவாதிகளின் திட்டம் வெளியாகியது
பௌத்த பெண்கள் விகாரை செல்லும் ஆடைகளை அணிந்து சிங்கள பெண்கள் போன்று தற்கொலை தாக்குதல் நடத்த பயங்கரவாதிகளின் திட்டம் வெளியாகியது!!! சிங்கள பெண்கள் பௌத்த விகாரைகள் செல்லும் போது வெள்ளை நிற மேல்சட்டை மற்றும் நீளமான சட்டை அணிந்து செல்வது வழமை , இவர்களை போன்று இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பு பெண்கள் இதில் பெரும்பாலும் மதம்மாற்றப்பட்ட தமிழ் ,சிங்கள பெண்களை பயன்படுத்தி புத்தவிகாரைகளை தாக்கி இன்னும் இலங்கையில் பேரழிவை ஏற்படுத்தி …
Read More »தற்கொலைத் தாக்குதல் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்?
நாட்டிலுள்ள பல மத ஸ்தலங்களைில் பெண்களை பயன்படுத்தி தற்கொலை தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக புலனாய்வு பிரிவு கண்டுபிடித்துள்ளது. பயங்கரவாத அமைப்பான தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பினால் இந்தத் தாக்குதல்கள் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. தாக்குதல்களுக்காக பயன்படுத்துவதற்காக தயார் நிலையிலிருந்து ஆடைகள், சாய்ந்தமருது பிரதேசத்தில் வெடித்த வீட்டில் இருந்து தேசிய புலனாய்வு பிரிவு கண்டுபிடித்துள்ளது. கடந்த 29ஆம் திகதி கிரிஉல்ல பிரதேசத்தில் ஆடை வர்த்தக நிலையம் ஒன்றில் முஸ்லிம் பெண்களின் 9 வெள்ளை …
Read More »வடக்கு – கிழக்கில் மக்கள் வீடுகள் அனைத்தும் சோதனை
தொடரும் குண்டுவெடிப்பு அச்சத்தினை தொடர்ந்து வடக்கு கிழக்கு பகுதிகளில் முஸ்லீம் மக்கள் வாழும் கிராமங்கள் அனைத்திலும் படையினர் குவிக்கப்பட்டு வீடுவீடாக சென்று சோதனை செய்யும் நடவடிக்கை முடக்கிவிடப்பட்டுள்ளது. வீதிகளில் செல்பவர்களும் படையினரால் சோதனைக்கு உட்படுத்தப்படும் அதேவேளை அடையாளத்தினை உறுதிப்படுத்தும் நடவடிக்கையிலும் முப்படையினர் ஈடுபட்டுள்ளார்கள் அச்ச உணர்வுடன் மக்கள் வாழ்கின்றார்கள் வீதிகளில் செல்வதை தவிர்த்துவரும் நிலையில் மக்கள் வீடுகளுக்குள் முடக்கப்பட்டுள்ளார்கள். இன்னிலையில் சில கிராமங்களை சுற்றிவளைத்த படையினர் கடும் சோதனை நடவடிக்கையில் …
Read More »கல்முனையில் நேற்று நடந்த பயங்கர தாக்குதல்!
கல்முனை – சம்மாந்துறை பகுதியில் நேற்று ஏற்பட்ட பாரிய மோதல் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.கல்முனையில் இனங்காணப்பட்ட ஐ.எஸ் பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் கும்பல் காணொளியை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த தற்கொலை தாக்குதல் என்ன நோக்கத்திற்காக மேற்கொள்கின்றோம் என அதில் குறிப்பிட்டுள்ளனர்.நேற்று சிறப்பு அதிரடி படையினரால் முற்றுகையிடப்பட்ட வீட்டிலிருந்தே இந்த கும்பல் காணொளியை வெளியிட்டுள்ளது. அவர்களின் முழுக் குடும்பமும் ஆயுதங்களுடன் கூட்டாக இந்த காணொளியை வெளியிட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. …
Read More »வவுனியா நகரத்தில் இடம்பெற்ற சுற்றிவளைப்பில் பத்து பேர் கைது
வவுனியா நகர பள்ளிவாசலை சூழவுள்ள பகுதியில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது பத்து பேர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர். இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் வவுனியா நகரப் பள்ளிவாசலை சூழவுள்ள பகுதியில் இராணுவத்தினரும், பொலிஸாரும் இணைந்து கடும் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதன்போதே சந்தேகத்தின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேகத்தின் பேரில் வான் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை, சுற்றிவளைப்பு பகுதியிலிருந்து …
Read More »வெடிகுண்டு தாக்குதலுக்கு முன் ஒத்திகை பார்த்த தற்கொலைதாரிகள்!
நாட்டில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்கான ஒத்திகை மட்டக்களப்பு பாலமுனை பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. கடந்த 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டில் 8 இடங்களில் தற்கொலைக் குண்டு தாக்குதல் இடம்பெற்றன.குறித்த தாக்குதலுக்கு ஐ.எஸ் அமைப்பு உரிமைகோரியிருந்தது. இந்நிலையில் குறித்த தற்கொலைத் தாக்குதலுக்கான ஒத்திகை மட்டக்களப்பு பாலமுனைப் பகுதியில் உள்ள வெற்றுக் காணியில் கடந்த 16 ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் …
Read More »கொழும்பில் வெடித்து சிதறிய தற்கொலை குண்டுதாரி! மற்றுமொரு காணொளி
கொழும்பில் பிரபல நட்சத்திர ஹோட்டலில் தற்கொலை தாக்குதல் நடத்திய மற்றுமொரு காணொளி வெளியாகி உள்ளது. கின்ஸ்பெரி ஹோட்டலில் தற்கொலை தாக்குதல் நடத்திய நபரின் காணொளியை சர்வதேச ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. கொழும்பில் பிரதான மூன்று ஹோட்டலில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதலில் 30 இற்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் கொலை செய்யப்பட்டிருந்தனர். கொழும்பில் பிரபல நட்சத்திர ஹோட்டலில் தற்கொலை தாக்குதல் நடத்திய மற்றுமொரு காணொளி வெளியாகி உள்ளது. கின்ஸ்பெரி ஹோட்டலில் தற்கொலை தாக்குதல் …
Read More »கொழும்பில் கனரக வாகனங்களுடன் முப்படை ரோந்து !
இன்று அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படலாமென சந்தேகிக்கப்படுவதால் கமாண்டோ படையினர் மற்றும் முப்படையினர் கொழும்பில் நிலை நிறுத்தப்பட்டுள்ளனர். அனைத்து வெளிநாட்டு தூதரகங்களின் பாதுகாப்பில் கடும் இறுக்கம். மக்களை கூட்டமாக நிற்கவேண்டாமென அறிவுறுத்தல்
Read More »