Tuesday , October 14 2025
Home / செய்திகள் (page 84)

செய்திகள்

News

கொழும்பு அந்தோனியர் ஆலயத்தில் அருகில் காத்திருந்த பேராபத்து…

கொழும்பு- கொச்சிக்கடை அந்தோனியாா் ஆலயத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் இரண்டு குண்டு வெடிப்புக்களை நடாத்த திட்டமிட்டிருந்ததாக பாதுகாப்பு தரப்பினா் நடாத்திய விசாரணைகளின் மூலம் தொியவந்துள்ளது.கொச்சிக்கடை அந்தோனியாா் ஆலயத்தின் மீது தாக்குதல் நடாத்தப்பட்டதன் பின்னா் ஆலயத்திலிருந்து 100 மீற்றா் துாரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனம் ஒன்றை சோதனையிட்ட இராணுவத்தினா் மற்றும் விசேட அதிரடிப்படையில்குறித்த வாகனத்தில் பொருத்தி வைக்கப்பட்டிருந்த ஆபத்தான குண்டு ஒன்றை வெடிக்கவைத்திருந்தனா். குறித்த வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட இந்த வான் பாணந்துறை பிரதேசத்தில் வைத்து …

Read More »

திட்டமிட்டபடி 6ஆம் திகதி பாடசாலை ஆரம்பிக்கப்படுமா?

இலங்கையின் அனைத்துப் பாடசாலைகளின் பாதுகாப்பு முழுமையாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். அனைத்து தரப்பினரும் உத்தரவாதம் அளித்ததன் பின்னரே எதிர்வரும் 6ஆம் திகதி முதல் மீண்டும் பாடசாலைகளை இரண்டாம் தவணைக் கல்வி நடவடிக்கைகளுக்காக ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி, அமைச்சரவை, உளவுப் பிரிவு, பாதுகாப்பு சபை, முப்படையினர் மற்றும் பொலிஸார் இந்த உத்தரவாத்தை வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். கொழும்பிலுள்ள சில பாடசாலைகளின் பாதுகாப்பு …

Read More »

மாத்தளையில் வெடிப்பு சம்பவம்!

மாத்தளை ,பலக்கடுவ ,வெலிக்கந்த பகுதியில் பாரிய வெடிப்புச் சத்தமொன்று கேட்டதையடுத்து படையினரும் பொலிஸாரும் இணைந்து தேடுதல்களை ஆரம்பித்துள்ளனர். விலங்குகளை விரட்டும் வகையில் பட்டாசு ஒன்றை விவசாயி ஒருவர் வெடிக்கச் செய்ததாக தகவல் வந்தாலும் அந்த சத்தம் பாரிய அளவில் உக்குவளை பிரதேச செயலாளர் பிரிவின் போவத்தை ,வரக்கமுற,கலல்பிட்டிய,பலக்கடுவ ஆகிய பகுதிகளுக்கும் கேட்டதால் படையினரும் பொலிஸாரும் இணைந்து அங்குள்ள மலைப்பகுதி ஒன்றில் தேடுதல் நடத்த ஆரம்பித்துள்ளனர். மாத்தளை – அலவத்துகொட பொலிஸாருடன் …

Read More »

தற்கொலை குண்டுதாரி சஹரான் இன்னும் இறக்கவில்லையா?

ஷங்ரி-லா ஹோட்டலில் தற்கொலை தாக்குதலில் ஈடுபட்டு தேசிய தௌஹீத் ஜமாத்தின் தலைவர் சஹரான் உயிரிழக்கவில்லை என ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. சஹரான் உயிரிழந்தமை தொடர்பாக சந்தேகம் வெளியிட்டுள்ளதாக அரச ஊடகம் புலனாய்வுத் துறையினரை மேற்கோளிட்டு இன்று (சனிக்கிழமை) செய்தி வெளியிட்டுள்ளது . அதில் தற்கொலைதாரிகளுடன் சஹரான் வந்திருந்தாலும் அவர் தற்கொலை தாக்குதல் நடத்தாமல் தூர இருந்து குண்டு ஒன்றை வெடிக்கச் செய்திருக்கலாமென பாதுகாப்பு தரப்பு சந்தேகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்கொலைதாரியின் …

Read More »

ரி 56 ரக துப்பாக்கிகள் மீட்பு

புத்தளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கால்வாய் ஒன்றிற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இரண்டு ரி 56 ரக துப்பாக்கிகளும், ரவைகளும் மீட்கப்பட்டுள்ளன. தனியார் பாதுகாப்பு அதிகாரியொருவர் கொடுத்த தகவலின் அடிப்படையில், துப்பாக்கிகள் மீட்கப்பட்டன. குப்பைகள் அகற்ற பாவிக்கும் கறுப்பு நிற பொலித்தீன் பையால் சுற்றப்பட்ட நிலையில் துப்பாக்கிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்துள்ளன.

Read More »

கொடூர தாக்குதலை நடத்திய மசூத் அசாரின் சொத்துக்கள் முடக்கம்!

புல்வாமா உள்பட பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்ட ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் இயக்க தலைவர் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா அறிவித்தது. சர்வதேச பயங்கரவாதியாக மசூத் அசார் அறிவிக்கப்பட்டதையடுத்து, அசாருக்கு சொந்தமான சொத்துக்களை முடக்க பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது. மசூத் அசார் பயணம் மேற்கொள்ள தடையையும் விதித்துள்ளது. பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் இது தொடர்பான அறிவிக்கையை வெளியிட்டது. மசூத் அசாருக்கு எதிரான நடவடிக்கைகளை உரிய …

Read More »

சபாநாயகருக்கு மஹிந்த கடிதம்

நாட்டில் மேற்கொள்ளப்பட்ட தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல்களைத் தொடர்ந்து சுற்றுலாத்துறை பாரிய பின்னடைவை எதிர்நோக்கியுள்ளது. எனவே இது குறித்து அவதானம் செலுத்த வேண்டியது அவசியமாகின்றது. இம்மாதம் 7 ஆம் திகதி பாராளுமன்றத்தில் இந்த விடயம் குறித்த ஒத்தி வைப்பு வேளை பிரேரணையை சமர்பிக்கப்பட உள்ள நிலையில் அன்றைய தினம் பிற்பகல்1 – 7.30 மணி வரை விவாதத்திற்கு எடுத்துகொள்ளுமாறு கோருவதாக எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ சபாநாயகர் கருஜய சூரியவுக்கு …

Read More »

நேரத்தை அதிகரிக்க கோரும் மஹிந்த

எதிர்வரும் 07ம் திகதி இடம்பெறவுள்ள பாராளுமன்ற அமர்வு நேரத்தை அதிகரிக்கும்படி, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அன்றைய தினம் மாலை 05.30 மணி முதல் இரவு 07.30 மணி வரை இடம்பெறுவுள்ள சபை ஒத்திவைப்பு பிரேரணை தொடர்பான விவாதத்தை 01.00 மணி முதல் 07.30 மணி வரை நடத்த நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். நாட்டின் தற்போதைய நிலையை கருத்திற் கொண்டு இந்நடவடிக்கையை …

Read More »

மாணவர் விடுதிக்குள் இராணுவம் தேடுதல்

வவுனியா பம்பைமடுவில் அமைந்துள்ள யாழ் பல்கலைகழக வவுனியா வளாகத்தின் மாணவர் விடுதி மற்றும் கற்கை நிலையங்கள் இராணுவம் மற்றும் பொலிசாரால் இன்று கடும் சோதனை நடவடிக்கைக்கு உள்ளடக்கப்பட்டுள்ளது. கொழும்பு மற்றும் மட்டகளப்பு பகுதிகளில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து நாடாளவிய ரீதியில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு ஏற்பாட்டுக்கு அமைய, வவுனியாவிலும் பல்வேறு பகுதிகளில் இராணுவம் மற்றும் பொலிசாரால் தீவிர தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. இந்நிலையில் இன்றயதினம் காலை 7.30 மணியிலிருந்து …

Read More »

மன்னாரில் இராணுவத்தினர் குவிப்பு

மன்னார் நகரின் பல்வேறு இடங்களில் இன்று காலை முதல் முப்படையினரும் இணைந்து கடும் சோதனைகளையும்,தேடுதல்களையும் மேற்கொண்டு வருகின்றனர். உப்புக்குளம், நளவன் வாடி, பள்ளிமுனை, மூர்வீதி ஆகிய கிராமங்களில் பல நூற்றுக்கணக்கான இராணுவத்தினர், பொலிஸார், கடற்படையினர் இணைந்து வீதிகளை மறித்து சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். அக்கிராமங்களில் உள்ள வீடுகளுக்குச் செல்லும் படையினர் வீட்டில் உள்ள உடமைகளை முழுமையாகச் சோதனைக்கு உட்படுத்தியுள்ளதோடு, வீட்டில் உள்ளவர்களின் விபரங்களையும் பரிசீலினை செய்து வருகின்றனர்.

Read More »