Wednesday , October 15 2025
Home / செய்திகள் (page 83)

செய்திகள்

News

கிளிநொச்சியில் மோப்ப நாயுடன் பாடசாலைகளில் சோதனை!!

கிளிநொச்சி மாவட்டத்தில் ஆரம்பப் பிரிவு பாடசாலைகளை தவிர ஏனைய பாடசாலைகள் இரண்டாம் தவணைக் கல்விச் செயற்பாடுகளுக்காக இன்று ஆரம்பிக்கப்பட்டன. மாணவர்கள் பாடசாலைகளின் நுழைவாயிலில் வைத்து கடும் சோதனைகளுக்கு பின்னர் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். மாணவர்களின் புத்தக பைகள் சோதனையிடப்பட்டன. சோதனைக்கு மோப்ப நாய்களும் பயன்படுத்தப்பட்டன. இலக்கத் தகடற்ற மோட்டார் சைக்கிளால் பரபரப்பு!! கிளிநொச்சி முறிகண்டி பிள்ளையார் ஆலயத்துக்கு அருகில் இலக்கத்தகடற்ற மோட்டார் சைக்கிள் நீண்ட நேரம் தரித்து விடப்பட்டிருந்ததால், குழப்பமடைந்த …

Read More »

இலங்கை தொடர் குண்டு தாக்குதல்களின் தீவிரவாதி சஹரான் தப்பிவிட்டார்?

சஹரான் ஹாசிம் இந்தியாவுக்கு விமானம் ஊடாக பயணம் மேற்கொண்டமைக்கான எந்த குடிவரவு, குடியகல்வு பதிவுகளும் இல்லையென அதிகாரிகள் குறிப்பிட்ட இராணுவ தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க இலங்கை தொடர் குண்டு தாக்குதல்களின் சூத்திரதாரியான சஹரான் ஹாசிம் மன்னார் ஊடாகவே தமிழ்நாட்டுக்கு கடல் வழியாக பயணம் மேற்கொண்டிருக்க வாய்ப்புக்கள் உள்ளதாக சந்தேகம் வெளியிட்டுள்ளார். ‘த ஹிந்து’ நாளிதழுக்கு வழங்கியுள்ள நேர்காணலிலேயே மகேஸ் சேனநாயக்க இதனை குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, …

Read More »

பயங்கரவாதிகளின் 40 ஏக்கரிற்கும் அதிகமான கோட்டை படையினர் வசம்

ரிதிதென்னவில் பயங்கரவாதிகளின் பயிற்சி முகாமொன்றை விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர். ஐ.எஸ் பயங்கரவாதிகளின் பயிற்சி முகாமொன்று நேற்று காத்தான்குடியில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், இன்று ரிதிதென்ன பகுதியில் இன்னொரு பயிற்சி முகாம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஓட்டமாவடி பிரதேசசபைக்குட்பட்ட இந்த பயிற்சி முகாம் 40 ஏக்கரிற்கும் அதிக விஸ்தீரணமுடையது. இந்த காணி உரிமையாளர், ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்தே, இன்று அங்கு தேடுதல் நடத்தப்பட்டது. தேடுதலின்போது …

Read More »

சஹரான் மனைவியிடம் தினந்தோறும் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள்!!

சஹரானுடன்

சஹரான் ஹாஷிம் என்ற பயங்கரவாதியின் கீழ் செயற்பட்ட குழுவின் ஆயுதப் பிரிவுக்கு பொறுப்பாக இருந்தவராக கருதப்படும் மில்ஹான் என்ற சந்தேக நபரை கைது செய்வதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. கடந்த 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் ஒன்றுகூடி வழிபாட்டில் ஈடுபட்டிருந்த மக்கள் மீது தற்கொலை குண்டுதாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 250 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருந்தனர். இந்த தாக்குதல்கள் கிறிஸ்தவ தேவாலயங்களில் மட்டுமல்லாது நட்சத்திர விடுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது …

Read More »

பயங்கரவாதிகளின் தோற்றத்திற்கு பசில் ராஜபக்ஷவே முக்கிய காரணம்

அடிப்படைவாத அமைப்புக்களுக்கு ஆதரவாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன், கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா ஆகியோர் செயற்படுவதற்கான அதிகாரத்தை முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவே வழங்கியதாக நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார். வெலிக்கடை சிறைச்சாலையில் இருக்கும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை பார்வையிட்டதைத் தொடர்ந்து, ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “பயங்கரவாதத்தை அரசியல் …

Read More »

தாக்குதல் இடம் பெற்ற ஆலயத்தில் வட மாகாண ஆளுநர்

நீர்கொழும்பு, கட்டுவபிட்டிய புனித செபஸ்டியான் ஆலயத்திற்கு வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் இன்று முற்பகல் விஜயம் மேற்கொண்டார். ஆலயத்திற்கு விஜயம் செய்த ஆளுநர் ஆலயத்தின் பங்குத்தந்தை வணக்கத்துக்குரிய ஸ்ரீலால் பொன்சேகாவை சந்தித்து அண்மையில் உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் மரணித்த மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனது சார்பிலும் வடமாகாண மக்கள் சார்பிலும் அனுதாபங்களை தெரிவித்துக் கொண்டார். இதன்போது பயங்கரவாத தாக்குதலினால் சேதமடைந்து மீள் சீரமைக்கப்படுவரும் ஆலயத்தையும் …

Read More »

IS தீவிரவாதிகளின் முகாம்!! விசேடஅதிரடிப்படையினர் முற்றுகை

மட்டக்களப்பு தாழங்குடா ஒல்லிக்குளம் முஸ்லீம் கிராமத்தில் அமைந்திருந்த இஸ்லாமிய தீவிரவாதிகளின் பயிற்சி முகாம் ஒன்று இன்று கைப்பற்றப்பட்டுள்ளது. மட்டக்களப்பு தாழங்குடா ஒல்லிக்குளம் முஸ்லீம் பிரதேசத்தில் இன்று காலை விசேடஅதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதலில் இஸ்லாமிய தீவிரவாத அமைப்பினரின் பயிற்சி முகாம் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. ஐ. எஸ் அமைப்பின் தற்கொலைதாரியான ரில்வானின் தலைமையில் இயங்கியதாக கூறப்படும் குறித்த பயிற்சி முகாமில் வைத்தே தீவிரவாதிகளுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. குறித்த பயிற்சி முகாமில் …

Read More »

ஐ.எஸ். பயங்கரவாதம் ஒழித்துக்கட்டப்படும் ஜனாதிபதி அதிரடி!

ஜனாதிபதி

இந்த வருட இறுதிக்குள் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு ஜனாதிபதி தேர்தல் சிறப்பாக நடத்தப்படும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 42 வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட 250 ற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த ஏப்ரல் 21 தாக்குதல்களின் பின்னணியில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் உள்ளதை தாங்கள் நம்புவதாகவும் ஜனாதிபதி சர்வதேச ஊடகமான ரோய்ட்டர்ஸ் செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “தீவிரவாதிகளின் இந்த செயற்பாடுகளினால் தேர்தலை தள்ளிவைக்க முடியாது, எனவே தேர்தலுக்கு …

Read More »

அனைத்து பாடசாலைகளிலும் கடுமையான சோதனை

கடந்த மாதம் 21ஆம் திகதி இலங்கையின் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதலையடுத்து, நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாக நாடளாவிய ரீதியாக அனைத்து பாடசாலைகளும் கடந்த 22ஆம் திகதியிலிருந்து மூடப்பட்டிருந்தன. அதனைத்தொடர்ந்து முப்படையினர், விசேட அதிரடிப் படையினர், பொலிஸார் இணைந்து தொடர்ச்சியாக இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் தரம் 6 இற்கு மேற்பட்ட வகுப்புக்களுக்கு நாளை (திங்கட்கிழமை) இரண்டாம் தவனைக் கல்வி நடவடிக்கைகள் …

Read More »

காத்தான்குடியில் ஆயுதங்கள் மீட்பு

கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலொன்றின் அடிப்படையில் பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது, காத்தான்குடியில் உள்ள பள்ளிவாசல் மையவாடியிலிருந்து இருந்து இன்று காலை ஆயுதங்கள் உட்பட சில பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காத்தான்குடி ஜாமியுழ்ழாபீரின் பெரிய மீரா ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் இருந்தே இந்த ஆயுதங்களும் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

Read More »