யாழ். வடமராட்சியில் பிறந்து சில மணி நேரமேயான சிசுவை வீதியில் எறிந்த கொடூர சம்பவமொன்று பதிவாகியுள்ளது. வடமராட்சி துன்னாலை மத்தி ஞானாசாரியார் சுடலைக்கு அண்மையில், நேற்று உரப்பை ஒன்றை நாய் கடித்து குதறிக்கொண்டிருந்ததை அவதானித்த பாதசாரிகள், உடனடியாக நெல்லியடி பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த நெல்லியடி பொலிஸார், குறித்த உரப்பையினை சோதனையிட்டபோது, அதனுள் சிசு ஒன்று உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளது. அத்தோடு சிசுவின் கை காயங்களுக்கு உள்ளாகியிருந்துள்ளது. …
Read More »கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய பாதுகாப்பு முறை
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்புக்காக புதிய செயல்திறன்மிக்க நடவடிக்கைகள் பல மேற்கொள்ளப்படவுள்ளன. பயணிகளின் பொதிகளை பரிசோதனை செய்வதற்காக புதிய ஸ்கேனர்(Scanner) இயந்திரங்கள் பொருத்தப்பட உள்ளன. பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக ஏற்படக்கூடிய தாமதத்தை தவிர்த்துக் கொள்வதற்காக விமானம் புறப்படுவதற்கு முன்னர் 4 மணித்தியலாத்திற்கு முன்னதாக பயணிகள் விமான நிலையத்தை வந்தடைய வேண்டும். இதே போன்று பயணிகள் செல்லும் பொழுதும் விமான நிலையத்திற்கு வரும் பொழுதும் அவர்களது உறவினர்கள் நண்பர்களை …
Read More »பயங்கரவாதிகளின் குற்றத்தை 22 லட்சம் பேர் மீது திணிக்க வேண்டாம்
இஸ்லாத்தின் பெயரை வைத்துக்கொண்டு ஒருசிலர் செய்த பயங்கரவாதத் தாக்குதல், நாட்டில் உள்ள 22 இலட்சம் முஸ்லிம்களையும் வேதனைக்குள்ளாக்கியுள்ளதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். சபை ஒத்திவைப்புப் பிரேரணை மீதான விவாதத்தில் நேற்று (10) கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார். பள்ளிவாசல்களில் வாள்கள் மற்றும் கத்திகள் மீட்கப்படுவதாக ஊடகங்களில் காண்பிக்கின்றனர். திகனவில் 30 பள்ளிவாசல்கள் அடித்து நொருக்கப்பட்டபோது பள்ளிவாசல்களில் ஆயுதங்களை வைத்திருந்தவர்கள் அவற்றை எடுத்து யாரின் மீதாவது தாக்குதல்களை …
Read More »மக்களுக்கு 3 நாட்கள் காலக்கெடு
அனுமதிப்பத்திரமின்றி வெடிபொருட்களை உடமையில் வைத்திருப்பவர்களுக்கு அதனை பொலிஸாரிடம் ஒப்படைப்பதற்கு 3 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் 14ஆம் திகதி காலை 06 மணிக்கு முன்னதாக அவற்றை பொலிஸாரிடம் ஒப்படைக்குமாறு கோரப்பட்டுள்ளது. அவ்வாறு அனுமதிப்பத்திரமின்றி வெடிபொருட்களை வைத்திருப்பவர்கள் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்குச் சென்று அறிவிக்குமாறு பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசே
Read More »பாடசாலைகளுக்கு அருகிலிருந்து வெற்று ரவைகள் மீட்பு
பண்டாரவளை தமிழ், சிங்கள பாடசாலைகளுக்கு அருகில் பொலிதின் பை ஒன்றில் சுற்றப்பட்ட நிலையில் வெற்று ரவைகளை பொலிஸார் மீட்டுள்ளனர். பண்டாரவளை தமிழ் மற்றும் சிங்கள பாடசாலைகளுக்கு அருகில் பாடசாலை மாணவர்கள் பயணிக்கும் வாகனங்கள் நிறுத்துமிடத்திற்குப் பின்புறத்தில் பொலிதின் பையில் சுற்றப்பட்ட நிலையில் 15 வெற்று ரவைகளை பண்டாரவளைப் பொலிஸார் மீட்டுள்ளனர். இந்நிலையில் குறித்த ரவைகள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பண்டாரவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Read More »ஹட்டன் தேவாலய மர்மம் விலகியது…வெளிவரும் உண்மைகள்!
கடந்த மாதம் 07 ஆம் திகதி இஸ்லாமிய மதத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் ஹட்டன் அந்தோனியார் தேவஸ்தானத்திற்கு வந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. அது தொடர்பான சிசிரிவி காட்சிகளும் வெளியாகியிருந்தன. இந்த இரண்டு இளைஞர்கள் உட்பட 07 இளைஞர்கள் இன்று காலை ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் ஆஜராகியுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். இந்த இளைஞர்கள் கொழும்பு வெல்லம்பிட்டிய பகுதியை சேர்ந்தவர்கள் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கொழும்பு பிரதான பள்ளிவாசலில் …
Read More »கொடூர தாக்குதலுக்கு பின் பலத்த பாதுகாப்புடன் திறக்கப்பட்ட தேவாலயம்…
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் பின்னர் கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயம் இன்று மீண்டும் வழிபாடுகளிற்காக திறக்கப்பட்டது. காலை 7 மணி தொடக்கம் மாலை 7 மணிவரை வழிபாடுகளிற்காக திறக்கப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More »சஹ்ரானின் மனைவி வைத்திய சாலையில் புதிய நாடகம்
ஈஸ்டர் ஞாயிறு அன்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் மாஸ்டர்மைன்ட என்று சொல்லப்படுகின்ற சஹ்ரானின் மனைவி கடந்த 26ம் திகதி சாய்ந்தமருது பிரதேசத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பிலிருந்து உயிர்தப்பி அம்பாறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்நிலையில் அவர் பொலிஸாருக்கு வாக்குமூலம் வழங்கும் போதும் இடை.. இடையே காது கேட்காதது போல் நடிப்பதாக கூறப்படுகிறது. சஹ்ரானின் மனைவியான பாத்திமாவிடமிருந்து எந்த தகவல்களையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் அவர் காது கேட்கவில்லை என நாடகமாடி …
Read More »IS அமைப்பிற்கு காணி வாங்கிய பிள்ளையானின் சகாக்கள்? அந்தரங்க இரகசியம்!
காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாழங்குடா, ஒல்லிக்குளம் பகுதியில் ஐ.எஸ் பயங்கரவாதிகளின் பயிற்சி முகாம் நேற்று சிக்கியது. 15 ஏக்கர் பரப்பளவில் விவசாய பண்ணை போன்ற அமைப்பில், இந்த பயிற்சி முகாம் அமைந்திருந்தது. பயிற்சி முகாமின் முன் பகுதி பண்ணை போன்ற தோற்றமுடையது. தென்னை மற்றும் விவசாய பயிர்கள் நடப்பட்டுள்ளன. ஆடு, கோழி, வான் கோழியென்பன வளர்க்கப்படுகின்றன. சாதாரண பார்வைக்கு அதை பண்ணையென தோன்றும் விதமாக பக்காவாக அமைத்திருக்கிறார்கள். நேற்று பொலிசார் …
Read More »சஹ்ரானின் நெருங்கிய சகா வாழைச்சேனையில் சிக்கினார்
டெட்டனேற்றர் வெடிபொருட்களுடன் ஒருவரை குற்றத்தடுப்புப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர். மட்டக்களப்பு ரிதிதென்ன ஓமடியாமடு பிரதேசத்தில் வைத்தே குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த நபரிடமிருந்து 138 டெட்டனேற்றர் குச்சிகளை குற்றத்தடுப்புப் பிரிவினர் கைப்பற்றியுள்ளதுடன் கைதுசெய்யப்பட்டவரிடம் குற்றத்தடுப்புப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கைதுசெய்ப்பட்ட நபர் 48 வயதுடைய ஆதம் லெப்பை காதர் என அடையாளம் காணப்பட்டதுடன் சஹ்ரானின் வாகன சாரதியான அண்மையில் கைதுசெய்யப்பட்ட கபூரின் நெருங்கிய சகாவென விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
Read More »