கிளிநொச்சி கல்லாறு பிரதேசத்தில் அளவுக்கடங்காமல் நடக்கும் சட்டவிரோத மண்ணகழ்வு தொடர்பில் பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இங்குள்ள வனம் அழிக்கப்பட்டு பாரிய அளவில் மண்ணகழ்வு இடம்பெற்று வருகின்றது. மண்ணகழ்வு இடம்பெற்று வரும் பகுதி வனவள பாதுகாப்பு திணைக்களத்திற்கு சொந்தமான பகுதி. அதேவேளை, பறவைகள் சரணாலயமும் காணப்படுகின்றது. இந்த பகுதியில் சுமார் 5 அடிக்கு அதிகமான ஆழத்தில் தோண்டப்பட்டு மண்ணகழ்வு இடம்பெற்று வருகின்றமையை அவதானிக்க முடிகின்றது. இந்த சட்டவிரோத மண்ணகழ்வு தொடர்பில் …
Read More »இராட்சத சுறாவை பிடித்தவர் கதறுகிறார்
20 இலட்சம் பெறுமதியான உபகரணங்கள் கையகப்படுத்தப்பட்டது: தானாக வந்து சிக்கியதற்கு இந்த தண்டனையா?… கதறுகிறார் புள்ளிசுறா பிடித்தவர் கிளிநொச்சி இரணைதீவு கடல் பரப்பில் அரியவகை புள்ளி சுறாவை வேட்டையாடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளி நான்கு ஆட்பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 13 இலட்சம் பெறுமதியான அவரது படகு, இயந்திரம், மற்றும் ஏழு இலட்சம் ரூபா பெறுமதியான வலைகள் என்பன கடற்படையினரின் கட்டுபாட்டில் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். புள்ளிசுறாவை வேட்டையாட …
Read More »கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் பதட்டம்!
இலங்கையில் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து கொழும்பு கோட்டை ரயில் நிலையம் மற்றும் மருதானை ரயில் நிலையத்தில் பதட்டமான நிலைமை ஏற்பட்டுள்ளது. இன்று பிற்பகல் இலங்கை நிதியமைச்சருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து அவர்கள் இன்று நள்ளிரவு முதல் இரண்டு நாள் வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்துள்ளனர். அதன்படி புகையிரத சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சில இன்று நள்ளிரவு முதல் இரண்டு நாள் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட …
Read More »அவசரகாலச் சட்டத்தை நீடிப்பது இதுவே கடைசி
அவசரகாலச் சட்டத்தை நீடிப்பது இதுவே கடைசி முறையென ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டப் போதே, அவர் இதனை கூறியுள்ளார். நாடு மீண்டும் சுமூகமான நிலைக்கு வந்திருப்பதாக பாதுகாப்பு தரப்பினர் அறிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை சில தூதரகங்கள், பாடசாலைகள் விடுத்த கோரிக்கைக்கமையவே அவசரகாலச் சட்டம் நீடிக்கப்பட்டுள்ளதாகவும் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.
Read More »பொலித்தீன் அற்ற நகரமாக மாறும் யாழ் சாவகச்சேரி!
யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகரை பொலித்தீன் அற்ற நகரமாக மாற்றும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அந்தவகையில், நகர சபையினரும், அந்தந்த வட்டார பொதுமக்களும் இணைந்து வீதியோரங்களில் காணப்படும் பொலித்தீன் கழிவுகளைச் சேகரித்து அப்புறப்படுத்தும் பணிகளை முன்னெடுத்துள்ளனர்.
Read More »முஸ்லிம் அமைச்சர்களுக்கு மஹிந்த அழைப்பு
முஸ்லிம் அமைச்சர்களும் தங்களது கட்சியில் இணைந்துக்கொள்ள முடியுமென எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பெல்லன்வில ரஜமஹா விகாரையில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மஹிந்த ராஜபக்ஷ இதனை குறிப்பிட்டுள்ளார். புதிய முஸ்லிம் தலைமையை உருவாக்கும் செயற்பாட்டை தங்களது கட்சி முன்னெடுத்துள்ளது. ஆகையால் தற்போதுள்ள முஸ்லிம் தலைமைகளும் இதில் இணைந்துக்கொள்ள முடியுமென மஹிந்த அழைப்பு விடுத்துள்ளார். இதேவேளை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றியடைவதற்காக தமது கட்சியை …
Read More »கல்முனை பகுதி மாபெரும் கலவர பூமியாக மாறும் அபாய நிலை!
கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்த வேண்டாமெனக் கோரி இன்றையதினம் முஸ்லிம் மக்கள் நடத்தும் எதிர்ப்பு போராட்டத்தின் பின்னணியில் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு கோரி தமிழர்கள் மேற்கொண்டு வரும் உணவு தவிர்ப்பு போராட்டம் தொடர்பில் அமைதியாக இருந்த முஸ்லிம் மக்களை ஹரீஸ் எம்.பி தூண்டிவிட்டு இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட வைத்துள்ளார். நேற்றைய தினம் தமிழர்கள் மேற்கொள்ளும் போராட்டத்திற்கு …
Read More »அடைக்கலநாதனின் பகற்கனவு ஒருபோதும் பலிக்காது
போர்த்துக்கேயர் காலம் தொடக்கம் சைவர்களையும் பௌத்தர்களையும் மோத விடும் சூழ்ச்சி முன்னெடுக்கப்படுகிறதாக சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் தெரிவித்துள்ளார். இந்த சூழ்ச்சியில் கத்தோலிக்கர் காலம் காலமாக இலங்கையில் செயற்பட்டு வந்தனர் என்பதைச் செல்வம் அடைக்கலநாதன் இந்தத் தலைமுறையிலும் எடுத்துக்காட்டியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அறிக்கை ஒன்றின் ஊடாகவே அவர் இதனை கூறியுள்ளார். கன்னியா மற்றும் செம்மலை நீராவியடி புத்தர் சிலைகளை ஆக்கிரமிப்புகளை அகற்ற நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய இரத்தின தேரர் …
Read More »விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்!
கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக கிளிநொச்சியில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட சமுர்த்தி உத்தியோத்தர்கள் அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராச்சி உதவி உத்தியோகத்தர் சங்கத்துடன் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டிருந்தனர். கிளிநொச்சி பழைய கச்சேரிக்கு முன்பாக ஆரம்பமான கண்டன ஆர்ப்பாட்டம் பின்னர் மாவட்டச் செயலகம் வரை சென்று மாவட்ட அரச அதிபருக்கான மகஜர் மேலதிக மாவட்ட அரச அதிபரிடம் …
Read More »செவ்வாய்கிழமை என்பதில் ரணிலுக்கு குழப்பம்
கல்முனை பிரதேசசெயலகத்தை தரமுயர்த்தும் அமைச்சரவை பத்திரத்தை செவ்வாய்க்கிழமை சமர்ப்பிப்பதாக பிரதமர் சொல்லியுள்ளார். ஆனால், எந்த செவ்வாய்கிழமை என்பதில் அவருக்கும் குழப்பம் உள்ளது. வாக்குறுதி வழங்குவதில் ரணில் விக்கிரமசிங்க வல்லவர் என தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் எம்.பி, பா.அரியநேந்திரன். கல்முனை வடக்கு பிரதேசசெயலகத்தை தரமுயர்த்த கோரி நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் இன்று கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்தபோது இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், கல்முனை தமிழ் …
Read More »