தென் மாகாண பாடசாலைகளுக்கான கடமை நேரம், மேலும் ஒரு மணித்தியாலமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நேர மாற்றம் இன்று (01) முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக, தென் மாகாண ஆளுநர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார். இதற்கமைய, காலை 7.30 மணிக்கு பாடசாலை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகி, பி.ப 2.30 மணிக்கு நிறைவுப் பெறும் என, ஆளுநர் தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்த அறிவிப்பு, சகல கல்வி வலயங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாகவும், சில சங்கங்கள் இதற்கு எதிர்ப்புத் …
Read More »காத்தான் குடியில் கடற்கரையில் காத்திருந்த ஆச்சரியம்!
மட்டக்களப்பு காத்தான்குடி கடற்பரப்பிலிருந்து 880 கிலோ கிராம் எடையுடைய மீன் ஒன்று இன்றுகாலை கரையொதுங்கியுள்ளது. காத்தான்குடி கடற்கரையில் திருக்கை ரக மீனொன்றே இவ்வாறு கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் அதிகளவு மக்கள் குறித்த மீனை ஆச்சரியத்துடன் சென்று பார்த்துள்ளனர்.
Read More »ஈழத்து போட்டியாளர்களை குறி வைக்கும் இயக்குனர் சேரன்!
பிக்பாஸ் சீசன் 3 தொடங்கி ஒரு வாரம் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் இன்று நிகழ்ந்த எலிமினேஷனில் இலங்கையை சேர்ந்த இருவர் குறித்து சேரன் பல தகவல்களை தெரிவித்துள்ளார். பிக்பாஸ் வீட்டில் இலங்கையை சேர்ந்த லாஸ்லியா மற்றும் தர்ஷன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். சென்ற வாரம் முழுவதும் பிக்பாஸ் வீட்டில் மற்ற போட்டியாளர்கள் சண்டை – மோதல் என இருந்தாலும், இவர்கள் எந்த விஷயத்திலும் தலையிடவில்லை. லாஸ்லியா பிக்பாஸ் வீட்டில் இயக்குனர் சேரனை அப்பா …
Read More »ஹிஸ்புல்லாவை பாதுகாக்க மைத்திரி முயற்சி?
நிதிச் சுத்திகரிப்பு சட்டமூலத்தினூடாக மட்டக்களப்பு பல்கலைக்கழக தனியார் நிறுவனத்துக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். இந்த நிறுவனத்தின் செயற்பாடுகளுக்கென கைமாற்றப்பட்டுள்ள நிதி தொடர்பில் பரந்துபட்ட விசாரணைகள் அவசியமானதாகும். முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர் என்பதற்காக அவரைப் பாதுகாக்க முயற்சிப்பது நியாயமற்றது என்று ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜெயவர்தன தெரிவித்தார். நீர்கொழும்பு பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து …
Read More »வவுனியாவில் பெண் பரிதாப பலி
இன்று அதிகாலை மன்னாரிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற புகையிரதத்துடன் மோதி செட்டிகுளம், மெனிக்பாம் பகுதியில் மன நலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். வவுனியா செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்த வயது 65 பெண் ஒருவரே உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்நிலையில் சம்பவம் தொடர்பில் செட்டிகுளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Read More »வெளிநாட்டு தூதுவர்களுடன் ரணில் விசேட கலந்துரையாடல்
இலங்கையில் 43 வருடங்களில் முதல்முறையாக தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ள நிலையில் இந்த விடயம் தொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க வெளிநாட்டு தூதர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். போதைப் பொருள் தொடர்பான குற்றம் சுமத்தப்பட்ட நான்கு பேரை தூக்கிலுடப் போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் அறிவித்திருந்தார். இந்நிலையில் இன்று பிரதமர் வெளிநாட்டு தூதுவர்களை சந்தித்து குறித்த விடயம் தொடர்பாக கலந்துரையாடியுள்ளார். இந்த கலந்துரையாடலின்போது ஜனாதிபதியின் …
Read More »யாழில் பெண்ணை தீ வைக்க முயற்சித்த நபர் !
யாழ்ப்பாணம் தென்மராட்சிப் பகுதியில் வீட்டுக்குள் தனித்திருந்த பெண் ஒருவரை தனது ஆசைக்கு இணங்க மறுத்ததால் நபர் ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைக்க முயற்சித்துள்ளார். இந்நிலையில் பெண் கூச்சலிட்டதால் குறித்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த 49 வயது குடும்பப் பெண்ணை , மதுபோதையில் இருந்த 36 வயதுடைய நபர் பாலியல் துர்நடத்தைக்கு உட்படுத்த முயற்சித்த போது, நபரைத் தள்ளி வீழ்த்தி விட்டு பெண் அபயக்குரல் …
Read More »முடிவில் மாற்றமில்லை மைத்திரி அதிரடி அறிவிப்பு
போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு எதிராக மரண தண்டனையை நிறைவேற்றுவதில் தான் உறுதியாக உள்ளதாகவும், இதற்கு எதிர்ப்பினை வெளியிட்டு, நாட்டின் சுயாதீனத்தில் சர்வதேசத்தினர் தலையிட வேண்டாம் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். மேலும், ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல்களின் பின்னணியிலும் போதைப்பொருள் வர்த்தகர்களே இருக்கிறார்கள் என்றும் அவர் கூறினார். கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே மைத்திரிபால சிறிசேன இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “போதைப்பொருட்களை …
Read More »திருகோணமலையில் யுவதி சடலமாக மீட்பு
தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமியொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேம்காமம் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாரதிபுரம் பகுதியை சேர்ந்த கணேசபிள்ளை கார்த்திகா எனும் 16 வயது சிறுமியின் சடலமே நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மீட்கப்பட்ட யுவதியின் சடலம் தொடர்பில் மூதூர் நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில் சடலத்தை சட்ட வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்துமாறு …
Read More »இராணுவ அதிகாரிகளின் பதவியில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றங்கள்!
இராணுவத்தின் உயர்மட்ட அதிகாரிகள் பலரது பதவிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவின் உத்தரவின் பேரில் இராணுவ செயலகம் ஆகியவற்றில் பணிபுரியும் அதிகாரிகளின் பதவிகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் மேஜர் ஜெனரல் சத்யபிரிய லியனகே, இராணுவ தொண்டர் படைகளின் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளதுடன் ஏற்கனவே அவர் வகித்து வந்த, மேல் மாகாணம் மற்றும் புத்தளம் மாவட்டத்தை உள்ளடக்கிய கூட்டு நடவடிக்கைத் தளபதி பதவியியையும் அவர் தொடரவுள்ளதாக …
Read More »