மன்னார் மடுமாதா திருத்தல ஆவணித் திருவிழாவுக்கான ஆயத்த வழிபாடுகள் கொடியேற்றத்துடன் 06/08/19 ஆரம்பமாகின.
Read More »கோத்தாவை வேட்பாளராக அறிவிப்பார் மகிந்த!
கோத்தாவை வேட்பாளராக அறிவிப்பார் மகிந்த! அரச தலைவர் தேர்தலுக்கான பொதுமக்கள் முன்னணியின் வேட்பாளராக கோத்தபாய ராஜபக்சவை, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச நாளை அறிவிக்கவுள்ளார் என்று ராஜபக்சவினருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. அந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட பின்னர், ஒரு வார காலத்துக்கு கோத்தபாய ராஜபக்ச நாடு முழுவதிலும் உள்ள மத வழிபாட்டு இடங்களுக்குச் செல்லவுள்ளார். கொழும்பில் நாளை ஞாயிற்றுக்கிழமை நடக்கவுள்ள பொதுமக்கள் முன்னணியின் தேசிய மாநாட்டில், அரச தலைவர் …
Read More »முல்லைத்தீவில் நடந்த விபத்து- ஒருவர் உயிரிழப்பு
முல்லைத்தீவில் நடந்த விபத்து- ஒருவர் உயிரிழப்பு சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து, வீதியை விட்டு விலகிய கூலர் வாகனம் தொலைத்தொடர்பு கம்பம் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது. அதின் வாகனத்தின் சாரதி உயிரிழந்துள்ளார். மற்றும் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த விபத்து கொக்குளாய் முல்லைத்தீவு வீதியில் சிலாவத்தை பகுதியில் இன்று காலை நடந்துள்ளது. புத்தளம் அசோகபுரம் பகுதியைச் சேர்ந்த நபர் விபத்தில் உயிரிழந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
Read More »உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – பொறுப்பை ஏற்கின்றது அரசு
உயிர்த்த ஞாயிறுத் தினத் தாக்குதல்களுக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்கின்றது. பாரதூரமான இந்த விடயத்தில் இருந்து ஓடிவிட முடியாது. இவ்வாறு தெரிவித்தார் தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க. கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி நாட்டில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக ஆராயும் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் நேற்றுச் சாட்சியமளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது- எனக்குச் சட்டம் ஒழுங்கு அமைச்சின் மூலமும், இராணுவத்தின் மூலமும் தேசிய பாதுகாப்புத் தொடர்பான தகவல்கள் …
Read More »41 பேரின் வங்கி கணக்குகள் இடை நிறுத்தம்!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் 41 பேருடைய வங்கி கணக்குகள் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் 134 மில்லியன் ரூபா வங்கிப் பணம் இடை நிறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் சந்தேக நபர்களின் ஒரு பில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்கள் இனங்காணப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
Read More »பலத்த பாதுகாப்புடன் – நல்லூர் கந்தனுக்கு கொடியேற்றம்!
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா கடும் பாதுகாப்புடன் கொடியேற்றத்துடன் இன்று ஆரம்பமானது. எதிர்வரும் 29ஆம் திகதி தேர்த்திருவிழாவும், 30ஆம் திகதி தீர்த்ததிருவிழாவும் இடம்பெறும்.
Read More »போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்கள்
வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்துக்கு முன்பாக சுழற்சிமுறை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்கள், இன்று 900 நாள்களை எட்டியுள்ளமையை முன்னிட்டு ஊர்வலத்தில் ஈடுபட்டனர். கண்டிவீதி வழியாக ஊர்வலமாகச் சென்ற காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்கள் மணிக்கூட்டு கோபுரசந்தியை அடைந்து, அங்கிருந்து கடைவீதி வழியாக தொடர் போராட்டம் மேற்கொள்ளும் இடத்தைச் சென்றடைந்தனர். ஊர்வலத்தில் மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுவை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.
Read More »கம்போடியாவுக்கு பயணித்தார் ஜனாதிபதி!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கம்போடியாவுக்கு நான்கு நாள் அரசமுறைப் பயணமாக இன்று புறப்பட்டுள்ளார். ஜனாதிபதியை கம்போடியா நாட்டின் பிரதிப் பிரதமர் மற்றும் அந்நாட்டின் தகவல்துறை அமைச்சர் உள்ளிட்ட நாட்டின் உயர்மட்டப் பிரதிநிதிகள் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
Read More »தீவிரவாதிகள் மூவர் அம்பாறையில் கைது
நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலின் சூத்திரதாரியான தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹரான் ஹாசிமுடன் நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை முகாம்களில் பயிற்சிபெற்ற மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த மூவரும் இன்று அம்பாறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது. இவர்கள், இலங்கையில் தடைசெய்யப்பட்டுள்ள தேசிய தௌஹீத் ஜமாத் மற்றும் ஜமியத்தே மில்லாது இப்ராஹிம்அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர். இதேவேளை ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் இதுவரை 116 …
Read More »காற்றில் போனது விஜயகலா வாக்குறுதி
வடமாகாண நில அளவை திணைக்கள ஊழியா்கள் வெற்றிடத்திற்கு நேற்றய தினம் திடீரென 118 போ் நியமிக்கப்பட்ட்டுள்ளனர். இ நிலையில், அவர்களில் பெரும்பாலானவா்கள் தென்னிலங்கையை சோ்ந்த சிங்களவா்கள் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நியமனம் பெற்றவா்களில் 31 பேர் மட்டுமே தமிழர்கள் என்றும், ஏனைய 87 பேரும் பெரும்பான்மையினத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்களில் உள்ள நில அளவைத் திணைக்கள அலுவலகங்களில் நிலவும் சாதாரண ஊழியர்கள் வெற்றிடத்தை …
Read More »