சஹ்ரானுடன் நுவரெலியாவில் ஆயுதப் பயிற்சி பெற்ற இரு மௌலவிகள் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். ஹெட்டி பொல மற்றும் நிக்கவரட்டிய ஆகிய பகுதிகளிலுள்ள பள்ளிவாசல்களில் மௌலவிகளாக இருந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Read More »வடக்குப் பிரச்சினையை தீர்க்க முக்கிய கவனம் செலுத்துகின்றோம்
வடக்கு மக்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கு முக்கிய கவனம் செலுத்தி வருகின்றோம் என தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாட்டை பிளவுபடுத்த நினைப்பவர்கள் மகிந்த அணியினருடன் ஒன்று சேரலாம் என யாழில் வைத்து தெரிவித்துள்ளார். வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றம் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார் தொடர்ந்து உரையாற்றுகையில் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது. வடக்கு மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முக்கிய …
Read More »வடக்கில் காணி உறுதிப்பத்திரம் வழங்க அரசு வெகு விரைவில் நடவடிக்கை
வடக்கில் காணி உறுதிப்பத்திரம் இல்லாத காணியாளர்களுக்கு வெகுவிரைவில் உறுதிப்பத்திரம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் கயந்த கருணாதிலக சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று அமைச்சரிடத்திலான கேள்வி நேரத்தின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் இது குறித்து கேள்வி எழுப்பினார். கிளிநொச்சி மாவட்டத்தில் தமிழ் மக்களின் பெரும்பான்மையான காணிகளுக்கு உறுதிப்பத்திரம் இல்லாத நிலைமையே உள்ளது. இவற்றை கொடுக்கும் காணிகளுக்கு அரசாங்கம் பல கருத்துக்களை கூறுகின்றது. …
Read More »நானே ஜனாதிபதி வேட்பாளர் வதந்திகளை நம்ப வேண்டாம்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நானே. எனக்கு மாற்றீடாக எமது கட்சியிலிருந்து எவரும் களமிறங்க மாட்டார்கள் என மகிந்த அணியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் குறித்து கருத்து வெளியிடும்போதே கோத்தபாய ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார். இதுகுறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நானே. எனக்கு மாற்றீடாக எமது கட்சியிலிருந்து எவரும் களமிறங்கமாட்டார்கள். வீண் …
Read More »இலங்கை அரசியல் யாப்பில் இளைஞர் யுவதிகளுக்கு நம்பிக்கையில்லை
இலங்கையின் அரசியல் யாப்பு தொடர்பில் இளைஞர், யுவதிகள் நம்பிக்கை இழந்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை அரசியல் யாப்பு தொடர்பில் இளைஞர் – யுவதிகள் நம்பிக்கை இழந்துள்ளனர் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இளைஞர் – யுவதிகளை தன்னார்வ சேவையில் ஊக்குவிக்கும் புதிய வேலைத் திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் பிரதமர் நேற்று உரையாற்றினார். சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர் – யுவதிகள் இதில் கலந்து …
Read More »திரும்புகிறது வழமைக்கு யாழ். பல்கலை
வகுப்புப் பகிஷ்கரிப்பைக் கைவிட்டு இன்று(18) முதல் வழமைபோன்று கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது. இதுதொடர்பில் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள ஊடக அறிக்கையின் இறுதியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, எமது முக்கிய பிரச்சினையாக கருதிய சில பிரச்சினைகளை தீர்க்கக் கோரி கடந்த 15.08.2019 முதல் வகுப்புப் புறக்கணிப்புப் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் எமது பல்கலைக்கழகத் தகுதிவாய்ந்த அதிகாரியால் நாமறிய இவை குறித்துச் சில நடவடிக்கைகள் …
Read More »சஹரானுடன் தொடர்புபட்ட அதிர்ச்சி தகவல்
தீவிரவாதி சஹ்ரானுடன் ஆயுதப்பயிற்சி பெற்ற 16 வயதுடைய சிறுவன் ஒருவன் அம்பாறை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட நிலையில், குறித்த சிறுவன் வாக்குமூலம் வழங்கியுள்ளார். இதன்போது குறித்த சிறுவன் பல முக்கிய தகவல்களை வழங்கியுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். கெக்குணுகொல்ல பகுதியை சேர்ந்த முஹம்மத் நௌபர் அப்துல்லா எனும் சிறுவனே கைது செய்யப்பட்டிருந்தார். கைது செய்யப்பட்ட சிறுவன் தேசிய தௌஹீத் ஜமாத் இயக்கத்தின் இரண்டாவது தலைவரான நௌவர் மௌலவியின் …
Read More »அதிரடி சுற்றிவளைப்பில் 10 தமிழா்கள் கைது!
அதிரடி சுற்றிவளைப்பில் 10 தமிழா்கள் கைது! சிலாபம் பகுதி ஊடாக சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயற்சித்த 10 பேரை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகத்திற்குரிய முறையில் சிலர் சிலபத்தில் இருந்து பயணிப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிறிய ரக லொறி ஒன்றில் சிலாபம், இரணவில வீதியில் பயணித்து கொண்டிருந்தபோது அவர்களை கைது செய்யப்பட்டுள்ளதோடு, லொறியின் சாரதி …
Read More »மின்னல் தாக்கியதில் இளைஞர் பலி!
மின்னல் தாக்கியதில் இளைஞர் பலி! மின்னல் தாக்கியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கெக்கிராவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மாமினியாவ வாவிக்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த அனர்த்தத்தில் 17 வயதுடைய மரதன்கடவல பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளார். இந்நிலையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கெக்கிராவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Read More »பலாலி விமான நிலையத்தில் இருந்து ஒக்டோபர் முதல் விமானசேவைகள்!
யாழ்ப்பாணம், பலாலி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் முதல் விமான சேவைகள் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கபட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மூன்று நாள்கள் பயணமாக யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்த நிலையில், மூன்றாம் நாளான நேற்று அவர் பலாலி விமான நிலையத்துக்கும் சென்றிருந்தார். இதன்போது அவருடன் விமான போக்குவரத்து அமைச்சர் அர்ஜூன ரணதுங்க, இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் சென்றிருந்தனர். இதையடுத்து அங்கு …
Read More »