Monday , October 20 2025
Home / செய்திகள் (page 515)

செய்திகள்

News

இலங்கைக்கு காலஅவகாசம் வழங்கப்பட வேண்டியது அவசியமாகும்: ஜெகான் பெரேரா

இலங்கைக்கு காலஅவகாசம் வழங்கப்பட வேண்டியது அவசியமாகும்: ஜெகான் பெரேரா

இலங்கைக்கு காலஅவகாசம் வழங்கப்பட வேண்டியது அவசியமாகும்: ஜெகான் பெரேரா இலங்கையின் அரசியல் சூழ்நிலையை கவனத்திற்கொண்டு இலங்கைக்கு காலஅவகாசம் வழங்கப்பட வேண்டும் என தேசிய சமாதானப் பேரவையின் தலைவரும் ஜெனிவா சென்றுள்ள அரச தூதுக்குழுவின் பிரதிநிதியுமான கலாநிதி ஜெகான் பெரேரா தெரிவித்துள்ளார். ஜெனிவா வளாகத்தில் இலங்கை தூதுக்குழுவினால் ஏற்பாடு செய்யபட்டிருந்த உபகுழுக் கூட்டத்தில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், நாட்டில் நல்லிணக்கத்தை …

Read More »

வடமாகாண சபை மீது ஆளும்கட்சி உறுப்பினர் சுகிர்தன் பகிரங்க குற்றச்சாட்டு

வடமாகாண சபை மீது ஆளும்கட்சி உறுப்பினர்

வடமாகாண சபை மீது ஆளும்கட்சி உறுப்பினர் சுகிர்தன் பகிரங்க குற்றச்சாட்டு வடமாகாண இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாய்ப்பை தட்டிக்கழித்ததே வட மாகாண சபை இதுவரை செய்த பெரும் சாதனை என வடமாகாண சபையின் ஆளும்கட்சி உறுப்பினர் ச.சுகிர்தன் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். யாழ். மாவட்ட செயலகம் முன்பாக தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள வடமாகாண வேலையற்ற பட்டதாரி மாணவர்களுக்கு தனது ஆதரவை தெரிவிக்கும் வகையில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு …

Read More »

தமிழகத்தில் ரேஷன் பொருட்கள் தட்டுப்பாடு செய்திகள் உண்மை இல்லை – ஆர்.காமராஜ்

தமிழகத்தில் ரேஷன் பொருட்கள் தட்டுப்பாடு

தமிழகத்தில் ரேஷன் பொருட்கள் தட்டுப்பாடு செய்திகள் உண்மை இல்லை – ஆர்.காமராஜ் தமிழகத்தில் ரேஷன் பொருட்கள் தட்டுப்பாடு என்று வெளியாகும் செய்திகளில் உண்மை இல்லை என உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் இன்று தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பல ரேஷன் கடைகளில் பருப்பு மற்றும் பாமாயில் நிறுத்தப்பட்டுள்ளதாக சில நாட்களாக செய்திகள் வெளியான நிலையில், இது தொடர்பாக உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது …

Read More »

மாடிப்படியில் இருந்து தவறி விழுந்து சிறுமி பலி

மாடிப்படியில் இருந்து தவறி விழுந்து சிறுமி பலி

மாடிப்படியில் இருந்து தவறி விழுந்து சிறுமி பலி பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை ரொசிட்டா பகுதியில், ஒன்றரை வயது நிரம்பிய சிறுமியொருவர் வீட்டின் மாடிப்படியிலிருந்து விழுந்து இன்று (வியாழக்கிழமை) உயிரிழந்துள்ளார். கமலதாசன் சீதையம்மாள் அவர்களின் இரண்டாவது புதல்வியான வஸ்மிளா எனும் சிறுமியே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சிறுமியின் தாயார் வீட்டில் வேலை செய்துகொண்டிருந்தபோதே மேற்படி சம்பவம் இடம்பெற்றதுடன், உடனடியாக பாதிப்புக்குள்ளான சிறுமி டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பின் மேலதிக சிகிச்சைக்காக …

Read More »

ரிஷிகேஷில் சர்வதேச யோகா திருவிழா – மோடி பேச்சு

ரிஷிகேஷில் சர்வதேச யோகா திருவிழா - மோடி பேச்சு

ரிஷிகேஷில் சர்வதேச யோகா திருவிழா – மோடி பேச்சு யோகா மூலம் புதிய யுகத்தை உருவாக்குவோம் என பிரதமர் மோடி பேசியிருக்கிறார். உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் சர்வதேச யோகா திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் உலகத்தின் 70 நாடுகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இன்று தொடங்கி மார்ச் 7 வரை இந்த விழா நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் …

Read More »

மன்னார் இலுப்பைக்கடவை பிரதேசத்திற்கு மின்னிணைப்பு வசதிகள்

மன்னார் இலுப்பைக்கடவை பிரதேசத்திற்கு - பா.டெனிஸ்வரன்

மன்னார் இலுப்பைக்கடவை பிரதேசத்திற்கு மின்னிணைப்பு வசதிகள் மன்னார், மாந்தை மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட இலுப்பைக்கடவை மற்றும் அந்தோனியார்புரம் ஆகிய பிரதேசங்களில் மின்னிணைப்பு வசதிகளை இன்று (வியாழக்கிழமை) வட.மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் வழங்கிவைத்தார். ரூபி முன்பள்ளி, அந்தோனியார்புரம் முன்பள்ளி, அந்தோனியார்புரம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையின் ஆசிரியர் விடுதி ஆகியவற்றிற்கான மின்னிணைப்பு வசதிகளை அமைச்சர் தனது நிதி ஒதுக்கீட்டில் ஏற்கனவே இருந்து வழங்கியிருந்தார். அத்துடன் தமக்கு நிலவிய நீண்டகாலத் தேவை பூர்த்திசெய்யப்பட்டுள்ளதாகவும், …

Read More »

கேரள முதல்வர் பினராயி விஜயனின் தலையை கொண்டு வருபவர்களுக்கு பரிசளிக்கப்படும்

கேரள முதல்வர் பினராயி விஜயனின்

கேரள முதல்வர் பினராயி விஜயனின் தலையை கொண்டு வருபவர்களுக்கு பரிசளிக்கப்படும் கேரள முதல்வர் பினராயி விஜயனின் தலையை கொண்டு வருபவர்களுக்கு பரிசளிக்கப்படும் என ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் பேசிய நிலையில், சங்பரிவார் அமைப்புகள் ஏற்கனவே பலரது தலைகளை எடுத்துள்ளது என பினராயி பதிலடி கொடுத்துள்ளார். மத்தியப்பிரதேச மாநிலம் உஜ்ஜைன் பகுதியின் ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் குழு தலைவராக உள்ள குந்தன் சந்திரவாத் என்பவர், இன்று அங்கு நடந்த கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி …

Read More »

தமிழக மீனவர்கள் 13 பேர் வடமாகாண கடற்பரப்பில் கைது

தமிழக மீனவர்கள் 13 பேர் வடமாகாண கடற்பரப்பில் கைது

தமிழக மீனவர்கள் 13 பேர் வடமாகாண கடற்பரப்பில் கைது ஸ்ரீலங்கா கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் தமிழக மீனவர்கள் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இன்றைய தினம் இருவேறு கடற்பரப்பில் வைத்து ஸ்ரீலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழக மீனவர்கள் 9 பேர் வடமராட்சி வெற்றிலைக் கேணி கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர்கள் பயணித்த படகொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. அத்துடன் நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து படகொன்றில் …

Read More »

விக்னேஸ்வரன் இனவாதி: மீண்டும் கடுமையாக விமர்சிக்கும் சுதந்திரக் கட்சி

விக்னேஸ்வரன் இனவாதி: சுதந்திரக் கட்சி

விக்னேஸ்வரன் இனவாதி: மீண்டும் கடுமையாக விமர்சிக்கும் சுதந்திரக் கட்சி வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இனவாதியைப் போன்றுதான் எப்போதும் செயற்பட்டு வருவதாக நல்லாட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பிரதான கட்சிகளில் ஒன்றான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. தேசிய பாதுகாப்பு தொடர்பாக பிரச்சினைகளைத் தோற்றுவித்து குழப்பத்தை ஏற்படுத்தவே இவ்வாறானவர்கள் செயற்பட்டு வருவதாகவும் அந்தக் கட்சியின் மூத்த உறுப்பினரும், மேல் மாகாண முதலமைச்சருமான இசுறு தேவப்பிரிய பகிரங்கமாக விமர்சித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் …

Read More »

அமராவதியில் புதிய சட்டமன்றக் கட்டிடத்தை முதல்வர் சந்திரபாபு நாயுடு திறந்து வைப்பு

புதிய சட்டமன்றக் கட்டிடத்தை முதல்வர் சந்திரபாபு நாயுடு திறந்து வைப்பு

அமராவதியில் புதிய சட்டமன்றக் கட்டிடத்தை முதல்வர் சந்திரபாபு நாயுடு திறந்து வைப்பு ஆந்திராவின் புதிய தலைநகர் அமராவதியில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள புதிய சட்டமன்றக் கட்டிடத்தை முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று திறந்து வைத்தார். ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலுங்கானா மாநிலம் பிரிந்ததையடுத்து ஒருங்கிணைந்த ஆந்திராவின் தலைநகரமாக இருந்த ஐதராபாத் தெலுங்கானா வசம் சென்றுள்ளது. எனவே, ஆந்திராவின் புதிய தலைநகரம் அமராவதியில் உருவாக்கப்படுகிறது. இதற்கான கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று …

Read More »