போயஸ் கார்டன் வீட்டுக்கு தீபா பேரவையினர் வரப்போவதாக தகவல் இல்லை மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வேதா நிலையம் வீட்டை நினைவு இல்லமாக்கி பொதுமக்கள் பார்வைக்கு திறந்து விட வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது. இந்த நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் கடந்த 23-ந் தேதி பேட்டியளிக்கும் போது போயஸ் கார்டன் வீடு தனக்கும் தீபாவுக்கும் மட்டுமே சொந்தம். வேறு யாரும் அதை உரிமை …
Read More »சோமாலியாவில் கடுமையான வறட்சி – 2 நாட்களில் 110 பேர் பரிதாப சாவு
சோமாலியாவில் கடுமையான வறட்சி – 2 நாட்களில் 110 பேர் பரிதாப சாவு கடந்த சில ஆண்டுகளாக போதிய அளவு மழை பெய்யாததால் ஆறுகள், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் பாலைவனமாக காட்சி அளிக்கின்றன. இந்த வறட்சியானது பஞ்சத்திற்கு வழிவகுக்கும் என சோமாலியாவிற்கான ஐ.நா. மனிதாபிமான குழுவின் ஒருங்கிணைப்பாளர் பீட்டர் டி கிளர்க் கடந்த வாரம் எச்சரிக்கை விடுத்தார். இதனை தொடர்ந்து அதிபர் முகமது அப்துல்லாகி பார்மஜோ அங்கு தேசிய பேரழிவு …
Read More »அமி பெரா சீக்கியர் மீதான துப்பாக்கி சூடு தாக்குதலுக்கு கண்டனம்
அமி பெரா சீக்கியர் மீதான துப்பாக்கி சூடு தாக்குதலுக்கு கண்டனம் அமெரிக்க பாராளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை உறுப்பினர் இந்திய வம்சாவளியை சேர்ந்த அமி பெரா சீக்கியர் மீதான துப்பாக்கி சூடு தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளார். ‘உலகமெங்கும் இருந்து சென்று குடியேறிய மக்களின் நாடு’ என்ற பெருமையைப் பெற்றது அமெரிக்கா. ஆனால் இப்போது அங்கு இனவெறி தாக்குதல் தொடர்கதை ஆகி வருகிறது. கடந்த மாதம் 22–ந் தேதி மது விடுதி …
Read More »டெலிபோன் பேச்சு ஒட்டு கேட்டதாக ஒபாமா மீது அதிபர் டிரம்ப் கூறிய புகாரை உளவுத்துறை இயக்குனர் மறுப்பு
டெலிபோன் பேச்சு ஒட்டு கேட்டதாக ஒபாமா மீது அதிபர் டிரம்ப் கூறிய புகாரை உளவுத்துறை இயக்குனர் மறுப்பு தனது டெலிபோன் பேச்சு ஒட்டு கேட்டதாக ஒபாமா மீது அதிபர் டிரம்ப் கூறிய புகாரை உளவுத்துறை இயக்குனர் “ஜேம்ஸ் கோமே” மறுத்துள்ளார். அமெரிக்காவின் புதிய அதிபராக பதவி ஏற்றுள்ள டொனால்டு டிரம்ப் தினமும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். 7 முஸ்லிம் நாடுகளுக்கு விசா தடை, மெக்சிகோ எல்லையில் தடுப்பு சுவர், எச்.1பி …
Read More »பறவை காய்ச்சல் பீதி – அமெரிக்காவில் இருந்து இறைச்சிக் கோழி இறக்குமதிக்கு செய்ய தென் கொரியா அரசு தடை
பறவை காய்ச்சல் பீதி – அமெரிக்காவில் இருந்து இறைச்சிக் கோழி இறக்குமதிக்கு செய்ய தென் கொரியா அரசு தடை அமெரிக்காவில் உள்ள பிரபல நிறுவனத்தின் கோழிப் பண்ணையில் பறவை காய்ச்சல் பரவியதால் அமெரிக்காவில் இருந்து இறைச்சிக் கோழி இறக்குமதிக்கு செய்ய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. தென் கொரியா நாட்டில் உள்ள கோழிப் பண்ணைகளில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திடீரென பறவை காய்ச்சல் தொற்று ஏற்பட்டது. படுவேகமாக பரவிய …
Read More »காணி அனுமதிப்பத்திரத்தை வழங்குமாறு பன்னங்கண்டி மக்கள் போராட்டம்
காணி அனுமதிப்பத்திரத்தை வழங்குமாறு பன்னங்கண்டி மக்கள் போராட்டம் குடியிருப்பு காணிக்கான நிரந்தர அனுமதிப்பத்திரத்தை வழங்குமாறும் நிரந்த வீட்டுத்திட்டத்தை வழங்குமாறும் வலியுறுத்தி, கிளிநொச்சி – பன்னங்கண்டி கிராம மக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பசுபதிப்பிள்ளை கிராமத்தின் முன்பாக பன்னங்கண்டி கிராம மக்கள் நேற்றுமுன்தினம் முன்னெடுத்த குறித்த போராட்டம், மூன்றாவது நாளாக இன்றும் மேற்கொள்ளப்படுகின்றது. பன்னங்கண்டி பகுதியில் 3 பிரிவுகளாக வசித்துவரும் மக்கள் நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து சென்று, …
Read More »ஸ்ரீலங்கா அரசாங்கத்தை காப்பாற்றவே கால அவகாசம் – கஜேந்திரகுமார்
ஸ்ரீலங்கா அரசாங்கத்தை காப்பாற்றவே கால அவகாசம் – கஜேந்திரகுமார் சுமந்திரன் போன்றவர்கள் ஸ்ரீலங்காவிற்கு கால அவகாசத்தை வழங்க வேண்டும் எனக் கோருவது அரசாங்கத்தைக் காப்பாற்றும் நோக்கமே என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றஞ்சாட்டியுள்ளார். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட, இனப்படுகொலைக்கு உள்ளான தமிழ் மக்களுக்கு நீதி கோருகின்ற நோக்கத்தோடு, முன்வைக்கின்ற கருத்தாக இருக்க முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 7 ஆவது …
Read More »தமிழர்களின் பண்பாடும் பொருளாதாரமும் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றன – பத்மினி சிதம்பரநாதன்
தமிழர்களின் பண்பாடும் பொருளாதாரமும் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றன – பத்மினி சிதம்பரநாதன் தமிழ் மக்களின் பண்பாடு, கலாசாரம், பொருளாதாரம் என்பன திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருகின்றதென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதன் தெரிவித்துள்ளார். யாழில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வருடாந்த மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்குறித்தவாறு தெரிவித்தார். முன்னைய தலைவர்கள் இலட்சியத்துடனும் நேர்மையுடனும் மக்களை வழிநடத்தியதாகவும், மக்களும் அவர்களுடன் கைகோர்த்திருந்ததாகவும் பத்மினி சிதம்பரநாதன் மேலும் …
Read More »அமெரிக்கா – பனாமா நகர கோர விபத்தில் 16 பேர் உயிரிழப்பு
அமெரிக்கா – பனாமா நகர கோர விபத்தில் 16 பேர் உயிரிழப்பு அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள பனாமா நகரம் அருகே செங்குத்தான பள்ளத்தாக்கு வழியாக சென்ற பஸ் சாலையை விட்டு விலகி ஆற்றுப் பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்த கோர விபத்தில் தோட்டத் தொழிலாளர்கள் 16 பேர் பரிதாபமாக பலியாகினர். அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள கோக்லே மாகாணத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் பழம் பறிக்கும் வேலைக்காக …
Read More »இந்தோனேசியாவுக்கு பறந்த மைத்திரி
இந்தோனேசியாவுக்கு பறந்த மைத்திரி இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் ஆரம்பமாகியுள்ள இந்து சமுத்திர பிராந்திய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரி இன்று (திங்கட்கிழமை) காலை 7.30 மணியளவில் அந்நாட்டிற்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். அரச தலைவர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெறும் இம் மாநாட்டில், ஜனாதிபதி மைத்திரி நாளைய தினம் பங்கேற்கவுள்ளார். அதனைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளின் அரச தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார். அத்தோடு, இந்தோனேசிய ஜனாதிபதியையும் சந்திக்கவுள்ளார். இதேவேளை, …
Read More »