Friday , August 29 2025
Home / செய்திகள் (page 51)

செய்திகள்

News

தீவிரமாக பரவிவரும் டெங்கு

தீவிரமாக பரவிவரும் டெங்கு

தீவிரமாக பரவிவரும் டெங்கு மினுவாங்கொடை தொகுதிக்குட்பட்ட பல பிரதேசங்களில், டெங்குக் காய்ச்சல் மிகத் தீவிரமாகப் பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் மினுவாங்கொடையின் , நில்பனாகொடை, கோப்பிவத்தை, பொல்வத்தை, கல்லொழுவை போன்ற பகுதிகளில் இது வரைக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். குறித்த நோயாளிகள் கம்பஹா மாவட்ட வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் கம்பஹா, நீர்கொழும்பு, ராகம வைத்தியசாலைகளில் தற்போது இட …

Read More »

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நிறைவு

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல்

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நிறைவு 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் செய்யும் நடவடிக்கையானது தற்போது நிறைவடைந்துள்ளதாக தெரிவிகபட்டுள்ளது. அந்தவகையில் கட்டுப் பணம் செலுத்தப்பட்ட 41 வேட்பாளர்களில் 35 பேர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இதேவேளை தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் தொடர்பில் எதிர்ப்பு தெரிவிப்பதற்கு 11.10 முதல் 11.45 வரையான காலப் பகுதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இதுவரை இரண்டு எதிர்ப்புகள் மட்டுமே …

Read More »

தேர்தல் செயலகத்தில் மஹிந்த

தேர்தல் செயலகத்தில் மஹிந்த

தேர்தல் செயலகத்தில் மஹிந்த ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்யும் காலம் நிறைவடைந்துள்ள நிலையில் பொதுஜக பெரமுனவின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ வருகை தந்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பொதுஜக பெரமுனவின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ வேட்புமனுவை தாக்கல் செய்துள்ள நிலையில் மஹிந்த வருகை தந்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் 35 வேட்பாளர்கள் இன்று வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.     …

Read More »

சிவாஜிலிங்கத்திற்கு தொலைபேசி மூலமாக கொலை மிரட்டல்

சிவாஜிலிங்கத்திற்கு

சிவாஜிலிங்கத்திற்கு தொலைபேசி மூலமாக கொலை மிரட்டல் தொலைபேசி மூலமாக கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். கொழும்பில் உள்ள தேர்தல்கள் செயலகத்தில் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கொலை அச்சுறுத்தல் காரணமாக தான் தொலைபேசி இணைப்பை துண்டித்துள்ளதாகவும் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். எனினும் தாம் இருக்கும் இடத்தை கண்டறிந்து எச்சரிக்கை விடுத்தால் அதனை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் …

Read More »

இன்று ஒரே மேடையில் கூடவுள்ள ஜனாதிபதி வேட்பாளர்கள்

இன்று ஒரே மேடையில் கூடவுள்ள ஜனாதிபதி வேட்பாளர்கள்

இன்று ஒரே மேடையில் கூடவுள்ள ஜனாதிபதி வேட்பாளர்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் ஒரே மேடையில் உறுதிமொழி பெறும் நிகழ்ச்சி ஒன்று இன்று நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்வை மார்ச் 12 இயக்கம் மற்றும் எப்ரியல் இளைஞர் வலையமைப்பு இணைந்து ஏற்பாடு செயதுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று அதிகாரி ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் முன்னணி வேட்பாளர்களை தெரிவு செய்து சுகததாச மைதானத்திற்கு அழைத்து மக்களைப் …

Read More »

ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் ரணிலிற்கு சிறை உறுதி

ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் ரணிலிற்கு சிறை உறுதி

ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் ரணிலிற்கு சிறை உறுதி நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்­பட்டால் தான் சிறை­செல்ல நேரிடும் என்­பதை அறிந்தே பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்க கோத்­த­பாய ராஜ­பக் ஷ­விற்கு எதி­ராக பல சட்ட சிக்­கல்­களை ஏற்­ப­டுத்­தி­யுள்ளதாக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மஹிந்த யாப்பா அபே­வர்­தன தெரி­வித்துள்ளார். எனினும் தாம் அனைத்து சவால்­க­ளையும் எதிர் கொண்டு மாற்று வழி­களை பிர­யோ­கித்து ஜனா­தி­பதி தேர்­தலில் வெற்றி பெறுவோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பொது­ஜன பெர­மு­னவின் …

Read More »

சஜித்தின் முதல் அதிரடி அறிவிப்பு !

சஜித்தின் முதல் அதிரடி அறிவிப்பு

சஜித்தின் முதல் அதிரடி அறிவிப்பு ! எந்த சந்தர்ப்பத்திலும் நாட்டின் அரச நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்பட மாட்டாது என ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி ​வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். தனது ஆட்சியின் கீழ் நட்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை புதிய பொருளாதார திட்டத்தின் கீழ் பராமரித்துச் செல்ல நடவடிக்கை எடுப்பபேன். அரச நிறுவனங்கள் ஒருபோதும் நட்டமடைய கூடாது என்பதற்காக விசேட திட்டங்கள் தன்னிடம் இருப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். …

Read More »

இன்று யாழில் வீடு புகுந்து வாள்வெட்டுக்குழு அட்டகாசம்

இன்று யாழில் வாள்வெட்டுக்குழு அட்டகாசம்

இன்று யாழில் வீடு புகுந்து வாள்வெட்டுக்குழு அட்டகாசம் தென்மராட்சி மட்டுவில் சந்திரபுரம் பகுதியிலுள்ள வீடொன்றில் நுழைந்து வாள்வெட்டுக் குழு அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது. இன்று அதிகாலை நுழைந்த நான்கு பேரடங்கிய குழு வீட்டின் கேற் வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மேட்டார் சைக்கிள் உட்பட வீட்டின் ஐன்னல் கண்ணாடிகளையும் அடித்து நொருக்கியுள்ளது. இதனையடுத்து வீட்டில் இருந்தவர்கள் கூக்குரல் எழுப்பியதையடுத்து குறித்த ஆயுதக் கும்பல் தப்பித்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இச் சம்பவம் தொடர்பில் …

Read More »

இன்று மைத்திரியின்யின் இறுதி முடிவு

இன்று மைத்திரியின்யின் இறுதி முடிவு

இன்று மைத்திரியின்யின் இறுதி முடிவு அனைத்து ஸ்ரீ.ல.சு.க அமைப்பாளர்களை இன்று கொழும்பிற்கு வரவழைக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்துள்ளார். இன்று நண்பகல் 12.00மணிக்கு ஜனாதிபதி இல்லத்தில் நடைபெறவுள்ள விசேட கூட்டத்திற்காக இவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீ.ல.சு.க.வின் நடவடிக்கைகள் குறித்து இந்த கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தகவ்கள் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதற்கமைய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கா அல்லது ஐக்கிய தேசிய முன்னணியிற்காக தமது ஆதரவை …

Read More »

சமல் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கப்போவதாக அறிவிப்பு

சமல் ஜனாதிபதித் தேர்தலில்

சமல் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கப்போவதாக அறிவிப்பு முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் குமார வெல்கமவும் எதிர்வரும் ஜனாதிபத் தேர்தலில் போட்டியிடப்போவதாகத் தெரிவித்து பாராளுமன்ற செயலாளர் நாயகத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரஜாவுரிமை வழக்கில் அவருக்கு எதிராக தீர்ப்பு வருமாயின் சமல் ராஜபக்ஷ தேர்தலில் போட்டியிடுவார் என்ற நிலை உருவாகியுள்ளது. இதேவேளை …

Read More »