பாகிஸ்தானில் ஆயில் டேங்கர் லாரி தீப்பற்றிய விபத்தில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 175 ஆக உயர்ந்துள்ளது. பலர் தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். பாகிஸ்தானின் கராச்சி நகரில் இருந்து லாகூர் நோக்கி கடந்த 25-ம் தேதி பெட்ரோல் டேங்கர் லாரி, பஞ்சாப் மாகாணத்தின் பஹவல்பூர் நகர் அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால், லாரியிலிருந்த பெட்ரோல் சாலையில் சிந்தி ஆறாக ஓடியது. இதையறிந்த, அப்பகுதியை சுற்றியுள்ள கிராம மக்கள் பெட்ரோலை பிடிக்க பாட்டில்கள் …
Read More »தடைசெய்யப்பட்ட 6 முஸ்லிம் நாடுகள் விசா பெற அமெரிக்கா புதிய நிபந்தனை
சிரியா, லிபியா, உள்ளிட்ட 6 முஸ்லிம் நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் நுழைய அதிபர் டிரம்ப் அரசு ‘விசா’ தடை விதித்தது. அதே போன்று அகதிகள் நுழையவும் தடை விதிக்கப்பட்டது. அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில் இதற்கு அமெரிக்க கோர்ட்டுகள் தடை விதித்துள்ளன. இந்த நிலையில் தடை செய்யப்பட்ட 6 நாடுகளை சேர்ந்தவர்கள் ‘விசா’ பெற டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு புதிய நிபந்தனைகளையும், வழிகாட்டுதல் முறையையும் விதித்துள்ளது. அதன்படி தடை …
Read More »பதவி விலக வலியுறுத்தி போராட்டம்: பிரேசில் அதிபர் மாளிகை மீது காரை மோதி தாக்குதல்
ஊழல் குற்றச்சாட்டு காரணமாக பிரேசில் அதிபர் மாளிகை மீது காரை வேகமாக மோதி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரேசில் நாட்டின் அதிபராக மைக்கேல் டெமர் பதவி வகித்து வருகிறார் ஊழல் குற்றச்சாட்டு காரணமாக இவர் பதவி விலக வலியுறுத்தி போராட்டங்கள் நடந்து வருகின்றன. தலைநகர் பிரேசிலியாவில் அதிபர் மாளிகை உள்ளது. இந்த நிலையில் நேற்று மாளிகையின் முன் பக்க மெயின் ‘கேட்’ மீது கார் மூலம் …
Read More »அதிகார பகிர்வு தொடர்பாக மக்களே தீர்மானிக்க வேண்டும்: பிரதமர்
அதிகாரப் பகிர்வு தொடர்பான இறைமையதிகாரம் மக்களையே சாருமென குறிப்பிட்டுள்ள பிரதமரும் அரசியல் யாப்பு நடவடிக்கைக் குழுவின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க, இதுகுறித்து மக்களே தீர்மானிக்க வேண்டுமென தெரிவித்துள்ளார். உத்தேச அரசியல் யாப்பு தொடர்பாக பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற செயலமர்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். புதிய அரசியல் யாப்பில் பௌத்த மதத்திற்கான முன்னுரிமை நீக்கப்படாதென மீண்டும் வலியுறுத்திய பிரதமர், அதே சந்தர்ப்பத்தில் ஏனைய …
Read More »வித்தியா கொலைக்கு பெருமளவு வெளிநாட்டுப்பணம் கைமாற்றப்பட்டுள்ளது : பதில் சட்டமா அதிபர்
யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையானது, சர்வதேச அளவில் திட்டமிடப்பட்டு, பல கோடி ரூபாய் கைமாற்றப்பட்டு இடம்பெற்ற ஒரு சதியென்றும், அதற்கு வித்தியா பலிக்கடா ஆகியுள்ளார் என்றும் ட்ரயல் அட் பார் தீர்ப்பாயத்தின் முன்னிலையில் பதில் சட்டமா அதிபர் டப்புள்ள டி லிவேரா சாட்சியமளித்துள்ளார். வித்தியா கொலை வழக்கின் சாட்சியப்பதிவு யாழ். மேல் நீதிமன்றத்தில் நேற்று (புதன்கிழமை) மூன்று நீதிபதிகள் கொண்ட சிறப்பு அமர்வில் நடைபெற்று வருகின்றது. இதில் சாட்சியமளித்த …
Read More »அமைச்சு பதவியை நிராகரித்த சிவாஜிலிங்கம்
வடக்கு மாகாண அமைச்சு பதவியை பொறுப்பேற்குமாறு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் விடுத்த கோரிக்கையை நிராகரித்ததாக மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்த தெரிவித்த அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ”கடந்த 14ஆம் திகதிக்கு முன்னதாகவே முதலமைச்சர் என்னை அழைத்து அமைச்சு பொறுப்புக்களை ஏற்க முடியுமா என கேட்டிருந்தார். ஆனால் அந்த கோரிக்கைக்கு நான் நிராகரித்துள்ளேன். நான் …
Read More »வடக்கு மாகாண அமைச்சர்களாக அனந்தி மற்றும் சர்வேஸ்வரன் நியமனம்
வடக்கு மாகண புதிய அமைச்சர்களாக அனந்தி சசிதரன் மற்றும் கந்தையா சர்வேஸ்வரன் ஆகியோர் முதலமைச்சரினால் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் 3 மாதத்திற்கு தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார். வடக்கு மாகாண முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களுடன் நடைபெற்ற சந்திப்பின் பின்னர் முதலமைச்சர் ஊடகங்களுக்கு தெரிவித்தார். விவசாய அமைச்சு முதலமைச்சரின் கீழும், அதன் பிரிவில் இருந்த கூட்டுறவு மற்றும் சமூக சேவைகள் மகளிர் விவகார அமைச்சுக்கள் அனந்தி சசிதரனுக்கும், …
Read More »வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர் சந்திப்பில் மோடியை காப்பாற்றிய அதிகாரி
அமெரிக்க வெள்ளை மாளிகையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு இக்கட்டான சூழல் ஏற்பட்ட போது அவரை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் காப்பற்றினார். அமெரிக்கா சென்ற பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்பை சந்தித்து பேசினார். அதன் பின்னர் இரு நாட்டு தலைவர்களும் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் உள்ள ரோஸ்கார்டனில் கூட்டாக நிரூபர்களுக்கு பேட்டி அளித்தனர். அதற்காக பிரதமர் நரேந்திர மோடி, பத்திரிகை குறிப்புகள் எடுத்து …
Read More »‘கூகுள்’ நிறுவனத்துக்கு ரூ.17 ஆயிரம் கோடி அபராதம்: ஐரோப்பிய யூனியன் விதித்தது
நம்பிக்கைக்கு மாறான வகையில் செயல்பட்டதற்காக கூகுள் நிறுவனத்துக்கு ரூ.17 ஆயிரத்து 220 கோடியை (240 கோடி யூரோ) அபராதமாக ஐரோப்பிய யூனியன் விதித்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த கூகுள் நிறுவனம் உலகின் மிகப் பிரபலமான தேடு பொறியாக உள்ளது. அது நம்பிக்கைக்கு எதிராக செயல்பட்டதாக கூறி ஐரோப்பிய யூனியன் அந்நிறுவனத்துக்கு 240 கோடி யூரோ (ரூ.17 ஆயிரம் கோடி) அபராதமாக விதித்துள்ளது. இது குறித்து ஐரோப்பிய யூனியன் தலைவர் மார்கரெட் வெஸ்டேஜர் …
Read More »யாழ். மயிலிட்டி 50 ஏக்கர் காணி விடுவிப்பு
யாழ். மயிலிட்டி பிரதேசத்தில் 50 ஏக்கர் காணி எதிர்வரும் ஜுலை 3ஆம் திகதி படையினரால் விடுவிக்கப்படும் என்று இராணுவ ஊடகப்பேச்சாளர் பிரிகேடியர் ரொசான் செனவிரத்ன தெரிவித்தார். இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். எதிர்வரும் ஜுலை மாதம் 3ஆம் திகதி யாழ்ப்பாணம் மயிலிட்டி பிரதேசத்தில் 50 ஏக்கர் காணி விடுவிக்கப்படவுள்ளது. இதற்கான நடவடிக்கையை அரசு …
Read More »