Monday , October 20 2025
Home / செய்திகள் (page 405)

செய்திகள்

News

அமெரிக்காவுடனான உறவு வலுப்பெற்றுள்ளது: ஜனாதிபதி மைத்திரி

இலங்கைக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மேலும் வலுவடையும் என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நம்பிக்கை வெளியிட்டுள்ளார். அமெரிக்கா இன்று (செவ்வாய்க்கிழமை) தமது சுதந்திர தினத்தை கொண்டாடுகின்ற நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு அனுப்பி வைத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மேலும் உத்வேகம் பெறும் என குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி, அரசியலமைப்பு அங்கீகரிக்கப்பட்ட காலத்திற்கு முன்பிருந்தே அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு …

Read More »

ஜனாதிபதி செயலாளராக ஒஸ்டின் பதவிப்பிரமாணம்

ஜனாதிபதியின் செயலாளராக, இலங்கையின் மூத்த அரச உத்தியோகத்தர் ஒஸ்டின் பெர்ணான்டோ பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் அவர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. புதிய செயலாளரின் பணி, அரச சேவைக்கு பலம் சேர்க்கும் வகையில் அமையுமென ஜனாதிபதி தமது டுவிட்டர் வலைப்பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் செயலாளராக பதவி வகித்து வந்து பீ.பி.அபேகோன் கடந்த மாதம் 30ஆம் திகதி …

Read More »

தடுமாறாத தமிழர்களுக்கு தலைமை ஏற்பது யார்? – யாழில் கலந்துரையாடல்

‘தடுமாறாத தமிழர்களிற்கு தலைமை ஏற்பது யார்?’ எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 9ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கருத்துப்பகிர்வு கலந்துரையாடலொன்று நடைபெறவுள்ளது. மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் கலைத்தூது மண்டபத்தில் இந்த கருத்துப் பகிர்வு இடம்பெறவுள்ளதாக மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்தார். குறித்த கருத்துப்பகிர்வு குறித்து அவர் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்- ”இன விடுதலைக்கான அரசியல் பயணத்தில் தமிழ் மக்கள் பல்வேறு விதமான …

Read More »

மட்டக்களப்பில் ஆயிரம் இளைஞர்களுக்கு உற்பத்தித் தொழிற்துறைக்கான பயிற்சி: ஸ்ரீபத்மநாதன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஒரு வருட காலப்பகுதியில் சுமார் ஆயிரம் இளைஞர்களுக்கு உற்பத்தித் தொழிற்துறைக்காக பயிற்சியளிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி வறுமை ஒழிப்புப் பிரிவின் குழுத் தலைவர் ஆர். ஸ்ரீபத்மநாதன் தெரிவித்தார். இலங்கை மத்திய வங்கி வறுமை ஒழிப்புப் பிரிவினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கான தொழில் வழிகாட்டல் பயிற்சி நெறிகள் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே இன்று (செவ்வாய்க்கிழமை) இதனைத் தெரிவித்துள்ளார். …

Read More »

விண்ணில் செலுத்திய சீன ராக்கெட் வெடித்து சிதறி விபத்து

ஷிஜியான்-18 என்னும் செயற்கைகோளுடன் ‘லாங் மார்ச்-5 ஒய் 2’ என்ற நவீன தொழில் நுட்பம் கொண்ட சீன ராக்கெட் விண்ணில் பாய்ந்த சிறிது நேரத்திலேயே வெடித்து சிதறியது. அதிக எடை கொண்ட அதி நவீன ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்துவதற்கான சோதனைகளை சீனா அவ்வப்போது நடத்தி வருகிறது. அந்நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் நேற்று காலை ஷிஜியான்-18 என்னும் செயற்கைகோளுடன் ‘லாங் மார்ச்-5 ஒய் 2’ என்ற நவீன தொழில் நுட்பம் …

Read More »

சிக்கிம் மாநில இந்திய பகுதியை சீனாவுடன் சேர்த்து வரைபடம்: மத்திய அரசு கடும் அதிர்ச்சி

சீனா புதிதாக ஒரு வரை படத்தை வெளியிட்டுள்ளது. அதில், டோகாலா பகுதி சீனாவின் உள்ளடங்கிய பகுதி போல குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வரை படம் மத்திய அரசுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தியா, சீனா, பூட்டான் ஆகிய 3 நாடுகளின் எல்லை பகுதி ஒன்றிணையும் இடம் சிக்கிம் மாநிலத்தில் உள்ளது. டோகாலா என்று அழைக்கப்படும் இந்த இடம் சிக்கிம் மாநிலத்தின் உள்ளடக்கிய பகுதியாக இருக்கிறது. இங்கு இந்திய ராணுவம் பாதுகாப்பு …

Read More »

சீன ஆக்கிரமிப்பு கடற்பகுதியில் அமெரிக்க போர்க்கப்பல்

தென்சீன கடற்பகுதியில் அமைந்துள்ள சீன ஆக்கிரமிப்பு தீவை நெருங்கியபடி அமெரிக்க போர்க்கப்பல் பயணம் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்சீன கடற்பகுதியில் உள்ள தீவு கூட்டங்களுக்கு பல்வேறு நாடுகளும் சொந்தம் கொண்டாடி வருகின்றன. இந்நிலையில், பராசெல் தீவு கூட்டங்களில் ஒன்றான சிறிய பரப்பளவு கொண்ட டிரைடன் தீவை சீனா ஆக்கிரமித்துள்ளது. இந்த தீவு தங்களுக்கு சொந்தமென தைவான் மற்றும் வியட்நாம் நாடுகளும் கூறி வருகின்றன. தென்சீன கடல் பகுதி முக்கிய …

Read More »

தூதரக உறவு தடையை நீக்க கத்தாருக்கு 48 மணி நேர ‘கெடு’ நீட்டிப்பு: சவுதிஅரேபியா உள்ளிட்ட நாடுகள் அறிவிப்பு

தூதரக உறவுக்கான தடையை நீக்க கத்தாருக்கு சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் 48 மணி நேரம் ‘கெடு’ விதித்துள்ளன. சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பக்ரைன், எகிப்து ஆகிய 4 நாடுகள் கத்தார் நாட்டுடன் ஆன தூதரக உறவை கடந்த மாதம் (ஜூன்) 5 -ந் தேதி முதல் முறித்துக்கொண்டன. தீவிரவாதிகளுக்கு மறைமுகமாக பணஉதவி செய்வதாகவும், தங்களது எதிரிநாடான ஈரானுடன் உறவு வைத்திருப்பதாகவும் கூறி இந்த தடை விதிக்கப்பட்டது. …

Read More »

பிரான்சில் மசூதி அருகே மர்ம நபர்கள் சரமாரி துப்பாக்கி சூடு – 8 பேர் காயம்

பிரான்சில் மசூதி அருகே மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 8 பேர் காயம் அடைந்தனர். தெற்கு பிரான்சில் அவிக்னான் பகுதி உள்ளது. அங்கு அர்ராமா என்ற மசூதி உள்ளது. நேற்று இரவு 10.30 மணியளவில் மசூதியில் இருந்து பலர் வெளியே வந்த கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த 2 மர்ம வாலிபர்கள் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கிகளால் சரமாரியாக சுட்டனர். இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. துப்பாக்கி சூட்டில் …

Read More »

சர்வதேச நீதிபதிகள் இலங்கை வருவது உறுதி! – கூறுகின்றார் மஹிந்த

“நாட்டை இரண்டாகப் பிரிக்கும் புதிய அரசமைப்பும், படையினரைத் தண்டிக்கும் சர்வதேச நீதிபதிகள் குழுவும் வரப்போவது உறுதி” என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:- “பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்த எமது நாடு இன்று பயங்கரமான ஒரு நிலைமையை நோக்கிப் போய்க்கொண்டிருக்கின்றது. சர்வதேசத்தின் சதி வலைக்குள் சிக்கி நாடு இப்போது சீரழிந்துகொண்டிருக்கின்றது. நாட்டை இரண்டாகப் பிரிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. புதிய அரசமைப்பு நாட்டை இரண்டாகப் …

Read More »