வறட்சியான காலநிலை காரணமாக 12 மாவட்டங்களில் 8 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது. பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார். இதேவேளை, வறட்சியான காலநிலையுடன் கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் கீழுள்ள 14,000 இற்கும் அதிகமான குளங்கள் வற்றியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்திள் நீர் முகாமைத்துவ பிரிவின் தலைவர் பிரபாத் விதாரண கூறினார். …
Read More »உள்ளூராட்சி சபைத் தேர்தல் சட்டமூலத்தை இவ்வாரத்துக்குள் நிறைவேற்றுமாறு மஹிந்த அணி காலக்கெடு! –
உள்ளூராட்சி சபைத் தேர்தல் குறித்த திருத்தச் சட்டமூலத்தை இவ்வாரத்துக்குள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி துரிதகதியில் தேர்தலை நடத்த அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மஹிந்த அணியான பொது எதிரணி வலியுறுத்தியது. நாடாளுமன்றம் நேற்றுப் பிற்பகல் ஒரு மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. தினப்பணிகள் முடிவடைந்த பின்னர், நிலையியல் கட்டளையின் 23/2இன் கீழான கேள்விநேரத்தில், “உள்ளூராட்சி சபைத் திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளபோதிலும், அது தொடர்பான விவாதம் இவ்வாரம் நடத்தப்படுவதற்குரிய …
Read More »குப்பையுடன் மனித உடல் அவயங்களும் கொட்டப்படுவதால் நாடாளுமன்றில் சர்ச்சை
குப்பைகளுடன் மனித உடல் அவயங்களும் முத்துராஜவெலயில் கொட்டப்படுவதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் பைசல் முஸ்தபா நேற்று நிராகரித்தார். நாடாளுமன்றம் நேற்றுப் பிற்பகல் ஒரு மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. தினப்பணிகள் முடிவடைந்த பின்னர் நிலையியல் கட்டளையின் 23/2 இன்கீழ் குப்பைப் பிரச்சினை தொடர்பில் விசேட கூற்றொன்றை விடுத்த தினேஷ் குணவர்தன எம்.பி., “கழிவுகள் வீதிகளில் கொட்டப்பட்டுள்ளன. அவை அகற்றப்படவில்லை. இதனால் …
Read More »பல்டி அடித்தது வைத்தியர் சங்கம்! கைவிடப்பட்டது பணிப்பகிஷ்கரிப்பு!!
நாடுதழுவிய ரீதியில் இன்றுமுதல் தொடர்ச்சியாக மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த பணிப்பகிஷ்கரிப்பை ஒருவார காலத்துக்கு ஒத்திவைத்திருப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்தது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தால் நேற்றுக் கொழும்பில் ஏற்பாடுசெய்யப்படிருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு கூறப்பட்டது. அங்கு மேலும் தெரிவிக்கப்பட்டதாவது:- “சைட்டம் எனப்படும் மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியை அரசுடமையாக்குமாறு கோரி அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தொடர்ச்சியாக முன்னெடுத்துவரும் போராட்டத்தின் ஒருபகுதியாக நாளை (இன்று) முதல் மேற்கொள்ளப்படவிருந்த நாடுதழுவிய …
Read More »புதிய அரசமைப்பு: அஸ்கிரிய பீடத்தின் எதிர்ப்பானது தமிழர் மீதான பல்குழல் தாக்குதல்! – சபையில் சிறிதரன் எம்.பி. சீற்றம்
“புதிய அரசமைப்புக்கு அஸ்கிரிய பீடம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ள நிலையில், இது தமிழர் மீதான பல்குழல் தாக்குதலாகும்” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற தேருநர்களைப் பதிவுசெய்தல் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “நாவற்குழியில் சிங்கள மக்கள் வாழவே இல்லை. இருந்தும் அங்கு வலுக்கட்டாயமாக …
Read More »தேசிய அரசுடன் மஹிந்த இணைந்தால் நல்லதாம்! – அமைச்சர் வசந்த
“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தத் தேசிய அரசுடன் இணைந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். நாட்டைத் துரிதமாக முன்னேற்றிவிடலாமே.” – இவ்வாறு ஆசைப்படுகின்றார் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க. இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- “இந்தத் தேசிய அரசில் அனைவரும் இணைந்து இந்த நாட்டின் அபிவிருத்திக்காக வேலை செய்யவேண்டிய கட்டத்தில் நாம் இருக்கின்றோம். முன்னாள் ஜனாதிபதி மஹிந்தகூட எம்முடன் இணையவேண்டும் என்றே நாம் விரும்புகின்றோம். மைத்திரி அணி, …
Read More »அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுக்கப்படும்: சிரியா எச்சரிக்கை
சிரியா மீது அமெரிக்கா படைகள் தாக்குதல் நடத்தினால், அமெரிக்காவுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று சிரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. சிரிய அதிபரான பசர் அல் ஆசாத்துக்கு எதிராக ஒரு பிரிவினர் போராடி வருவதால் அங்கு, 6 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அதிபருக்கு எதிராக புரட்சி படை ஒன்றும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த படைக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்து வருகிறது. அதே நேரத்தில் சிரிய அரசுக்கு ரஷியா ஆதரவாக உள்ளது. …
Read More »அடங்காத வடகொரியா: நீண்ட தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணை பரிசோதனை
ஜி-20 நாடுகளின் மாநாடு அடுத்த வாரம் நடைபெற உள்ள நிலையில், நீண்ட தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணையை வடகொரியா இன்று பரிசோதித்துள்ளதாக தென்கொரியா தெரிவித்துள்ளது. உலக நாடுகளின் கண்டனங்களை புறம் தள்ளி அடிக்கடி ஏவுகணை மற்றும் ராக்கெட் எஞ்சின்களை பரிசோதனை செய்யும் வடகொரியா, வடக்கு பியாங்கன் மாகாணத்தில் உள்ள பாங்யான் என்ற இடத்திலிருந்து இன்று காலை, சுமார் 930 கி.மீ பாய்ந்து சென்று இலக்கை குறிவைத்து தாக்கக்கூடிய ஏவுகணையை பரிசோதனை …
Read More »ஏவுகணை மூலம் அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் வடகொரியா: போர்க்கலை நிபுணர்கள் கணிப்பு
கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்கும் ஏவுகணை மூலம் அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் வடகொரியா இருப்பதாக, ஜப்பானைச் சேர்ந்த போர்க்கலை நிபுணர்கள் கணித்துள்ளனர். உலக நாடுகளின் கண்டனங்களை புறம் தள்ளி அடிக்கடி ஏவுகணை மற்றும் ராக்கெட் எஞ்சின்களை பரிசோதனை செய்யும் வடகொரியா, வடக்கு பியாங்கன் மாகாணத்தில் உள்ள பாங்யான் என்ற இடத்திலிருந்து இன்று காலை, சுமார் 930 கி.மீ பாய்ந்து சென்று இலக்கை குறிவைத்து தாக்கக்கூடிய ஹ்வாசாங்-14 …
Read More »வித்தியா கொலை விவகாரம்: மரபணு அறிக்கை தாக்கல்
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை தொடர்பான மரபணு அறிக்கை, யாழ். மேல் நீதிமன்ற சிறப்பு அமர்வில் பாரப்படுத்தப்பட்டுள்ளது. ட்ரயல் அட் பார் தீர்ப்பாயம் முன்னிலையில் நடைபெற்று வரும் குறித்த சாட்சியப் பதிவின் நான்காவது நாளான நேற்றைய தினம், மொறட்டுவ பல்கலைக்கழக கணினி விஞ்ஞான பீடத்தால் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட மரபணு அறிக்கை உட்பட வழக்குடன் தொடர்புடைய ஆவணங்கள் யாவும் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றினால் பாரப்படுத்தப்பட்டது. நேற்றைய தின சாட்சியப் பதிவுகள் இரவு 7 …
Read More »