கடந்த 2008 – 2009ஆம் ஆண்டுகளில் கொழும்பு வெள்ளவத்தை மற்றும் அதன் புறநகரப் பகுதிகளில் 11 தமிழ் இளைஞர்களை கடத்தி காணாமல் செய்தமை தொடர்பாக, கடற்படையின் முக்கிய அதிகாரி ஒருவரை கைதுசெய்வதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த குற்றப்புலனாய்வுப் பிரிவினர், கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக ஏற்கனவே 5 கடற்படை அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், பிரதான …
Read More »அரசாங்கத்துடன் இறுக்கமான போக்கையே கடைப்பிடிக்கின்றோம்: சம்பந்தன்
காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் அரசாங்கத்துடன் இறுக்கமான போக்கையே கடைப்பிடிக்கின்றோம் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சிக்கு இன்று (புதன்கிழமை) விஜயம் செய்த எதிர்க்கட்சித் தலைவர், அங்கு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை சந்தித்த போதே இவ்வாறு குறிப்பிட்டார். காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவினர்கள் தொடர்பில் ஆதங்கத்தை வெளியிட்ட உறவுகள், அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்து இப்பிரச்சினைக்கு தீர்வை பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து, அரசாங்கத்துடன் இவ்விடயம் தொடர்பாக …
Read More »யுத்தம் முடிந்தும் யுத்தகாலக் கஷ்டங்களுடனேயே வாழ்ந்துவரும் மக்கள்!
கிழக்கில் யுத்தம் முடிந்து 10 வருடங்கள் கடந்து விட்ட போதும் ஏறாவூர்ப்பற்று பதுளை வீதியை அண்டி வாழும் மக்கள் முடிவின்றித் தொடரும் யுத்தகால அவலங்களுடனேயே வாழ்ந்து வருவது ஆய்வறிக்கைகளில் கண்டறியப்பட்டுள்ளது என ‘சொன்ட்’ அமைப்பு அறிவித்துள்ளது. குறித்த பகுதியில் வாழும் மக்களின் நிலை தொடர்பில், ‘சொன்ட்’ அமைப்பின் மட்டக்களப்பு மற்றும் மன்னார் மாவட்ட திட்ட இணைப்பாளர் தர்மரெட்னம் விஜயகுமார் இந்த ஆய்வறிக்கையை இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ளார். இந்த ஆய்வறிக்கையில் குறித்து …
Read More »மொசூல் நகரில் மனைவி-குழந்தைகளை மனித கேடயமாக்கி உச்சக்கட்ட போரில் ஈடுபட்ட ஐ.எஸ்.தீவிரவாதிகள்
ஈராக் நாட்டின் மொசூல் நகரில் உள்ள ஐ.எஸ்.தீவிரவாதிகள் தங்களது மனைவி, குழந்தைகளை மனித கேடயமாக்கி இராணுவத்துடன் உச்சக்கட்ட போரில் ஈடுபட்டு வருகின்றனர். ஈராக்கில் பெரும் நிலப்பரப்பை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஐ.எஸ். தீவிரவாதிகள் ராணுவத்தின் கடும் தாக்குதலால் ஒவ்வொரு பகுதியாக இழந்து வந்தனர். கடைசியாக அவர்கள் வசம் மொசூல் நகரம் இருந்தது. அதை மீட்பதற்காக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஈராக் படைகள் போர் தொடுத்தன. 9 மாத தீவிர …
Read More »தென்னாப்பிரிக்கா: காட்டில் இருந்து தப்பி ஊருக்குள் புகுந்த 4 சிங்கங்கள்
தென்னாப்பிரிக்காவில் காட்டில் இருந்து தப்பிய 4 சிங்கங்கள் ஊருக்குள் புகுந்தது கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தென்னாப்பிரிக்காவில் உள்ள குருகர் என்ற இடத்தில் 12 ஆயிரம் சதுர கி.மீட்டர் பரப்பளவு கொண்ட அடர்ந்த காடு உள்ளது. இங்கு சிங்கம் உள்பட பல்வேறு உயிரினங்கள் வாழ்கின்றன. சுமார் 1,500-க்கும் மேற்பட்ட சிங்கங்கள் அங்கு வசிக்கின்றன. இவற்றில் 4 ஆண் சிங்கங்கள் காட்டில் இருந்து தப்பி ஊர் பகுதிக்குள் புகுந்து விட்டன. …
Read More »மகாத்மா காந்தியின் கையொப்பத்துடன் கூடிய பென்சில் ஓவியம்: 32,500 பவுண்டுகளுக்கு ஏலம் போனது
”உண்மையே கடவுள்’ என்ற மகாத்மா காந்தியின் கையொப்பத்துடன் கூடிய பென்சில் ஓவியம் 32,500 பவுண்டுகளுக்கு ஏலம் போனது. தனது வாழ்நாளில் இந்த ஓவியத்துக்குதான் அவர் வெகுநேரம் அமர்ந்து ’போஸ்’ கொடுத்தார் என்பது குறிப்பிட்டத்தக்கது. 1931-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற வட்டமேஜை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மகாத்மா காந்தி லண்டன் நகருக்கு சென்றிருந்தார். நகரின் கிழக்கு பகுதியில் உள்ள கிங்ஸ்லி ஹால் என்ற இடத்தில் அவர் தங்கியிருந்தபோது அவரை ஒவியமாக தீட்ட …
Read More »புதிய அரசமைப்பு மிகவும் அவசியம்! – சிங்கள மக்களுக்குப் பாதிப்பு ஏதுமில்லை என்கிறது ஐ.தே.க.
புதிய அரசமைப்பு நாட்டுக்கு மிகவும் அவசியமாகும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான கபீர் ஹாசீம் தெரிவித்தார். “பெரும்பான்மைச் சிங்கள மக்களுக்கும் நாட்டுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் புதிய அரசமைப்பு தயாரிக்கப்படமாட்டாது. சிங்கள மக்களைப் பாதுகாக்கும் வகையில்தான் அரசமைப்பு தயாரிக்கப்படும்” என்றும் அவர் குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:- “இன்னும் புதிய அரசமைப்பு தயாரிக்கப்படவில்லை. அதில் அடங்கப்போகின்ற விடயங்கள் பற்றி எதுவும் தெரியாமல் பொய்யான …
Read More »ஆட்சிக் கவிழ்ப்புக்குரிய நேரம் நெருங்கிவிட்டது!
“அரசியல், பொருளாதாரம் என அனைத்து வழிகளிலும் அரசு ஆட்டங்கண்டுள்ளதால் விரைவில் ஆட்சிமாற்றமொன்று ஏற்படுவதற்குரிய சாத்தியம் பிரகாசமாகவே தென்படுகின்றது” என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மஹிந்த ஆதரவு அணியான பொது எதிரணியின் தலைவர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். பாரிய நிதிமோசடி குறித்து விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று ஆஜராகி வாக்குமூலம் அளித்த பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “சிறுபிள்ளைபோல் செயற்படும் …
Read More »மன்னாரில் நுளம்பை கட்டுப்படுத்தும் இரசாயனத்திற்கு எதிர்ப்பு!
மன்னாரில் மலேரியா நுளம்பை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் ‘அபேற்’ எனப்படும் இரசாயனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. மாதர் சங்கங்களின் பிரதிநிதிகள் இணைந்து இன்று (செவ்வாய்க்கிழமை) காலை மேற்படி கண்டன ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். மன்னாரில் டெங்கு மற்றும் மலேரியா நுளம்பின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த கிணறுகளினுள் போடப்படும் ‘அபேற்’ எனும் இரசாயன கலவையினால் நிலத்தடி நீர் மாசடையும் எனவும் குறித்த நடவடிக்கையை நிறுத்துமாறு …
Read More »இளைஞன் கொலை தொடர்பில் பக்கசார்பற்ற விசாரணை அவசியம்: மனித உரிமைகள் ஆணைக்குழு
யாழ். பருத்தித்துறை துன்னாலை இளைஞனின் படுகொலை தொடர்பான பொலிஸ் விசாரணை பக்கச்சார்பின்றி நடைபெற வேண்டும் என்பதில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கவனமான உள்ளதென ஆணைக்குழுவின் யாழ். அலுவலக இணைப்பாளர் ரி.கனகராஜ் தெரிவித்துள்ளார். இச் சம்பவம் தொடர்பான பொலிஸாரின் நடவடிக்கைகள் தொடர்ந்தும் கண்காணிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். துன்னாலை பகுதிக்கு விஜயம் செய்த ஆணைக்குழுவின் உறுப்பினர்கள், கொலையுண்ட இளைஞனின் குடும்பத்தாரிடம் தகவல்களை கேட்டறிந்ததோடு, பொலிஸ் நிலையத்திற்கும் சென்று தகவல்களை திரட்டியுள்ளனர். …
Read More »