Sunday , October 19 2025
Home / செய்திகள் (page 398)

செய்திகள்

News

2020இல் ஜனாதிபதியாக கோட்டா: அச்சமடைகின்றது தேசிய அரசு! – அதனாலேயே அவரைக் கைதுசெய்ய திட்டம் என்கிறார் மஹிந்தானந்த எம்.பி.

“2020ஆம் ஆண்டில் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப்போகின்றார் என்ற பயத்தின் காரணமாக அவரைக் கைதுசெய்து சிறையிலடைப்பதற்கு தேசிய அரசு திட்டமிட்டுள்ளது.”  – இவ்வாறு மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளவை வருமாறு:- “மஹிந்த அணிக்கான செல்வாக்கு நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டு வருவதால் அந்தச் செல்வாக்கை எப்படியாவது குறைத்துவிடுவதற்கு தேசிய அரசு திட்டமிடுகின்றது. அந்தச் செல்வாக்குக்குப் பயந்துதான் உள்ளூராட்சி சபைத் தேர்தலை …

Read More »

அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் டிரம்புக்கு எதிராக கண்டன தீர்மானம்

அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு விவகாரத்தில் நடைபெற்று வரும் விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்துவதாக கூறி அதிபர் டிரம்ப் மீது செனட் சபையில் கண்டன தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு விவகாரத்தில் நடைபெற்று வரும் விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்துவதாக கூறி அதிபர் டிரம்ப் மீது செனட் சபையில் கண்டன தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷியாவின் தலையீடு இருந்ததாக எழுந்துள்ள புகார் தொடர்பாக விசாரணை …

Read More »

தேர்தல் தோல்வியை அறிந்ததும் கண்ணீர் விட்டு அழுத இங்கிலாந்து பெண் பிரதமர்

தேர்தல் முடிவு எதிர் மறையாக வந்தபோது அதை தாங்கி கொள்ள முடியாமல் இங்கிலாந்து பிரதமர் தெரசா மே கண்ணீர் விட்டு கதறி அழுதார். இங்கிலாந்தில் கடந்த மாதம் (ஜூன்) 8-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடந்தது. 2 ஆண்டுகள் இருக்கும் போதே பிரதமர் தெரசா மே முன்கூட்டியே தேர்தல் நடத்தினார். தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பில் கூடுதல் மெஜாரிட்டியுடன் தெரசா மே ஆட்சியை பிடிப்பார் என்று முடிவு வெளியானது. ஆனால் எதிர்பார்த்தது போன்று …

Read More »

மனித உரிமை ஆர்வலர் இறுதி சடங்கில் பங்கேற்க நோபல் பரிசு கமிட்டி தலைவருக்கு சீனா அனுமதி மறுப்பு

சீனாவில் சிறை தண்டனை விதிக்கப்பட்டு புற்றுநோயால் மரணமடைந்த மனித உரிமை ஆர்வலர் இறுதி சடங்கில் பங்கேற்க நோபல் பரிசு கமிட்டி தலைவருக்கு சீனா தூதரகம் அனுமதி மறுத்துள்ளது. மனித உரிமை ஆர்வலர் இறுதி சடங்கில் பங்கேற்க நோபல் பரிசு கமிட்டி தலைவருக்கு சீனா அனுமதி மறுப்பு ஆம்ஸ்டர்டாம்: சீனாவில் ஜனநாயகம் தொடர்பான ‘சார்ட்டெர் 8’ என்ற நூலை கடந்த 2009-ஆம் ஆண்டு வெளியிட்ட காரணத்துக்காக அந்நாட்டின் பிரபல எழுத்தாளரான லியு …

Read More »

முல்லைத்தீவு நீதிமன்றத்தின் தடை உத்தரவை மீளாய்வு செய்ய உத்தரவு

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டு முல்லைத்தீவு நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட உத்தரவை மீளாய்வு செய்யுமாறு வவுனியா மேல் நீதிமன்றம் பணித்துள்ளது. அதன்படி வழக்கு கோவையை மீளாய்விற்கு வவுனியா மேல் நீதிமன்றிற்கு அனுப்புமாறு கோரப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் வண.பிதா. எழில்ராஜன் அவர்களால் முள்ளிவாய்க்கால் கிழக்கு சின்னப்பர் தேவாலயத்திற்கு அருகாமையில் நடத்தப்படவிருந்த நினைவு தின நிகழ்வை தடை செய்து, மத நிகழ்வுகளை மட்டும் நடத்துவதற்கு அனுமதித்து முல்லைத்தீவு நீதிமன்றம் கட்டளை …

Read More »

ஈழத்தமிழர்களின் நினைவிடத்தை நிஜமாக்கிய ஓவியர் வீரசந்தானத்திற்கு அஞ்சலி

தஞ்சை ‘முள்ளிவாய்க்கால் முற்றம்’ என்னும் ஈழத்தமிழர்களின் நினைவிடத்தை அமைப்பதில் பெரும் பங்காற்றிய மறைந்த, ஓவியர் வீரசந்தானத்திற்கு அரசியல் தலைவர்களும், திரைத்துறையினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். உலகத் தமிழர்கள் நெஞ்சில் நீங்கா இடம்பிடித்த தமிழ் பற்றாளரும் சிறந்த ஓவியருமான வீரசந்தானம் மூச்சுத்திணறலால் அவதிப்பட்டுவந்த நிலையில் சென்னை தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பலனில்லாமல் நேற்றுமுன்தினம் (புதன்கிழமை) உயிரிழந்தார். தமிழ்நாட்டுக்காகவும் தமிழீழத்துக்காகவும் சமரசமின்றி ஓயாது போராடிய இவர், ஆயுத விடுதலைப் போராட்டத்தை ஆதரிப்பதிலும் மிகவும் …

Read More »

கர்ப்பிணிகளுக்கு சுகாதாரமற்ற போஷாக்கு உணவு வழங்கப்படுவதாக முறைப்பாடு

இறக்காமம் பிரதேச செயலகத்தினால் கர்ப்பிணிகளுக்கு வழங்கப்பட்டுவரும் போஷாக்கு உணவுப் பொருட்கள் தரமற்றதாகவும், சுகாதாரத்துக்கு கேடு விளைவிக்கக் கூடியதாகவும் உள்ளதாகத் தெரிவிக்கப்படும் முறைப்பாடு தொடர்பில், உரிய நடவடிக்கை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. நேற்று வியாழக்கிழமை இறக்காமம் பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டத்தின் போதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதன்போது, இறக்காமம் பிரதேச செயலகத்தினால் கர்ப்பிணிகளுக்கு வழங்கப்பட்டுவரும் போஷாக்கு பொதி தொடர்பான முறைகேடுகள் தொடர்பில், இணைத்தலைவரான பொறியியலாளர் எஸ்.எல் மன்சூர் சபையில் முன்வைத்தார். அண்மைக்காலமாக வழங்கப்பட்டுவரும் …

Read More »

இலங்கை பங்களாதேஷ் இடையே 12 ஒப்பந்தங்கள் கைச்சாத்து

இலங்கை மற்றும் பங்களாதேஷ் நாடுகளுக்கிடையே 12 புதிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. பங்களாதேஷிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், பங்களாதேஷ் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பின்போதே இவ் உடன்பாடுகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. முதலாவது ஒப்பந்தம் இரு நாடுகளின் தரக்கட்டுப்பாட்டு நிறுவனங்களுக்கிடையே தரக் கட்டுப்பாடு தொடர்பாக கைச்சாத்திடப்பட்டது. அதில், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் அந்நாட்டின் கைத்தொழில்துறை அமைச்சர் ஆகியோர் கைச்சாத்திட்டனர். இதேவேளை, பொருளாதார ஒத்துழைப்புக்களை மேம்படுத்தல், விவசாய ஒத்துழைப்புக்கள், …

Read More »

பருத்தித்துறையில் மீன்பிடித்துறைமுகம் அமைப்பதற்கு எதிர்ப்பு!

பருத்தித்துறை, கொட்டடி பகுதியில் மேலதிக துறைமுகம் ஒன்றினை அமைப்பதற்கு மீனவ குடும்பங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அத்துடன், தமது தொழில் பாதிக்கப்படுமெனவும் மாற்று இடத்தில் துறைமுகத்தினை அமைப்பதற்கான இடத்தினை தெரிவு செய்யுமாறும் வலியுறுத்தியுள்ளனர். துறைமுக அபிவிருத்தி தொடர்பாக கடற்றொழில் அமைச்சு மற்றும் துறைமுக அபிவிருத்தி திணைக்களம் உட்பட ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் இணைந்து பருத்தித்துறை, கொட்டடி சனசமூக நிலையத்தில் மீனவ சங்கங்கள், மீனவ …

Read More »

பப்புவா நியூ கினியாவில் பயங்கர நிலநடுக்கம் : சுனாமி எச்சரிக்கை இல்லை

பப்புவா நியூ கினியாவின் ரபாயுல் நகரத்தில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நில நடுக்கத்தால் உயிர்ச்சேதமோ, பெரிய அளவில் பொருட்சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை தென் பசுபிக் நாடுகளில் ஒன்றான பப்புவா நியூ கினியாவின் ரபாயுல் நகரத்தில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.7 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. நில நடுக்கத்தால் உயிர்ச்சேதமோ, பெரிய அளவில் பொருட்சேதமோ ஏற்பட்டதாக …

Read More »