பாகிஸ்தானுக்கு ராணுவ நிதியுதவி வழங்குவதற்கு புதிய நிபந்தனைகளை அமெரிக்க பாராளுமன்றம் விதித்துள்ளது. இதுதொடர்பாக சட்டத்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. தீவிரவாத தடுப்பு மற்றும் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் கூட்டணி நாடுகள் மேற்கொண்ட செலவுகளை அந்த நாடுகளுக்கு அமெரிக்கா திருப்பி அளித்து வருகிறது. இதற்காக பட்ஜெட்டில் தனியாக நிதியும் ஒதுக்கப்படுகிறது. இந்த நிதியுதவியை குறைக்க டிரம்ப் தலைமையிலான புதிய அரசு முடிவு செய்தது. இந்நிலையில், அமெரிக்க ராணுவ அதிகாரச் சட்டத்தில் …
Read More »நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம் : கிழக்கு முதல்வர்
கிழக்கு மாகாணத்துக்கான நிதி ஒதுக்கீடுகளை வழங்குவதில் மத்திய அரசாங்கம் கையாளும் பாரபட்சப் போக்கினால் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதில் பல்வேறு தடங்கல்களை எதிர் கொள்வதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார். மத்திய அரசினால் ஒதுக்கப்படவேண்டிய நிதி வழங்கப்படாமையினால் மாகாணத்தில் எதிர்நோக்கப்படும் பொதுவான பின்னடைவுகள் குறித்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போது இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ”வருடத்தின் அரையாண்டும் கடந்து விட்ட போதிலும் …
Read More »தலைமன்னாருக்கான ரயில் சேவைகள் இடைநிறுத்தம்!
கொழும்பு கோட்டைக்கும் தலைமன்னாருக்கும் இடையிலான ரயில் சேவைகள் நாளை (திஙகட்கிழமை) முதல் எதிர்வரும் 23ஆம் திகதி வரை இடைநிறுத்தப்படும் என ரயில்வே கட்டுப்பாட்டுப் பிரிவு அறிவித்துள்ளது. இதன்படி, கொழும்பிலிருந்து பயணிக்கும் ரயில் மதவாச்சி வரை சேவையில் ஈடுபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மதவாச்சி மற்றும் செட்டிக்குளம் பகுதிக்கு இடையில் உள்ள பழைய பாலத்தை அகற்றி விட்டு புதிய பாலம் அமைக்கப்படுவதன் காரணமாகவே தலைமன்னாருக்கான புகையிரத சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக புகையிரத போக்குவரத்து அத்தியட்சகர் …
Read More »தலைநகரில் 28 ஆவது வீர மக்கள் தினம் அனுஷ்டிப்பு!
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) 28 ஆவது வீர மக்கள் தினம் கொழும்பில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது. கொழும்பில் அமைந்துள்ள தலைமைக் காரியாலயத்தில், அதன் நிர்வாகச் செயலாளர் எம். பத்மநாதன் தலைமையில் இந்த நிகழ்வு இடம் பெற்றது. ஆரம்ப நிகழ்வாக நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு கழகத்தின் செயலதிபர் அமரர் கே. உமாமகேஸ்வரனின் உருவப்படத்திற்கு மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு மௌன அஞ்சலியும் மலரஞ்சலியும் செலுத்தப்பட்டன. இந்நிகழ்வில் கட்சி உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள் …
Read More »போட்டுக் கொடுத்தார் அட்மிரல் கரன்னகொட – சிறிலங்கா கடற்படை அதிகாரிகள் பலர் விரைவில் கைது
சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட வழங்கிய தகவல்களின் அடிப்படையில், சிறிலங்கா கடற்படையைச் சேர்ந்த மேலும் பலர் அடுத்து வரும் வாரங்களில் கைது செய்யப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது. 2008-2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 11 தமிழர்கள் கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்டமை தொடர்பாக, சிறிலங்கா கடற்படையின் முன்னாள் ஊடகப் பேச்சாளரான கொமடோர் டி.கே.பி.தசநாயக்க குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் …
Read More »வடக்கு அமைச்சர் டெனீஸை நீக்க முதல்வர் முடிவு! – நடவடிக்கை எடுப்பேன் என்று ரெலோவுக்கு அவர் அறிவிப்பு
வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரனை, தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) கோரிக்கையின் பிரகாரம் பதவி நீக்கம் செய்வதற்கு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நடவடிக்கை எடுத்துள்ளார். வடக்கு மாகாண சபையின் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மற்றும் கல்வி அமைச்சர் த.குருகுலராஜா ஆகியோரை பதவி நீக்கியதால் தோன்றிய சர்ச்சை அடங்குவதற்குள்ளேயே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 13ஆம் திகதி, தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் ந.சிறீக்காந்தாவினால் வடக்கு மாகாண முதலமைச்சருக்குக் …
Read More »மைத்திரி, ரணிலுடன் அடுத்த வாரம் கேப்பாப்பிலவு மக்கள் நேரில் பேச்சு!
கேப்பாப்பிலவில் மண்மீட்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை அடுத்த வாரம் நேரில் சந்தித்து நீதி கோரப்போகின்றார்கள். இந்தச் சந்திப்புக்கான முயற்சிகளைத் தான் மேற்கொண்டுள்ளார் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். கேப்பாப்பிலவு மக்கள் 136 நாட்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். 138 குடும்பங்களுக்கு சொந்தமான 482 ஏக்கர் …
Read More »புதிய அரசமைப்புக்கு முன்னரே வருகின்றது தேர்தல் சட்டத் திருத்தம்! – உள்ளூராட்சித் தேர்தலை நடத்தும் திட்டத்துடன் தேசிய அரசு முயற்சி
புதிய அரசமைப்புக்கு முன்னதாகவே தேர்தல் திருத்தச் சட்டவரைபு நாடாளுமன்றத்துக்குக் கொண்டுவரப்படும் என்று கொழும்பு அரசியல் வட்டாரங்கள் எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளன. உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தும் நோக்குடனேயே இந்தச் சட்டவரைபைக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று அறியமுடிகின்றது. புதிய அரசமைப்பில் தொகுதிவாரிப் பிரதிநித்துவம் 60 சதவீதமும், விகிதாசாரப் பிரதிநிதித்துவம் 40 சதவீதமுமாகக் கலப்பு முறையில் நாடாளுமன்றத் தேர்தல் நடத்த இணக்கம் காணப்பட்டுள்ளது. மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை எந்த …
Read More »முஸ்லிம் கூட்டமைப்பில் இணைந்துகொள்ளுமா மு.கா?
கிழக்கு மாகாணத்தை மையப்படுத்தி ஆரம்பிக்கப்படவுள்ள முஸ்லிம் கூட்டமைப்பில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியையும் இணைத்துக்கொள்வதற்கான பேச்சுகள் இடம்பெறவுள்ளன எனத் தெரிவிக்கப்படுகின்றது. முஸ்லிம் கூட்டமைப்பை ஆரம்பிப்பதற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ், நல்லாட்சிக்கான தேசிய முன்னணி மற்றும் ஹசனலி தரப்பினர் கொள்கையளவில் இணக்கம் தெரிவித்துள்ள நிலையில், இறுதிக்கட்டப் பேச்சு எதிர்வரும் கிழமைகளில் கொழும்பில் இடம்பெறவுள்ளது. கொழும்பில் நடைபெறவுள்ள பேச்சு முடிந்ததன் பின்னர் ஸ்ரீலங்கா …
Read More »புதிய அரசமைப்பு அறவே வேண்டாம்! – நடவடிக்கைளை உடனே நிறுத்தக் கோருகிறார் எஸ்.பி.
“புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கான மக்கள் ஆணை இந்த அரசுக்கு இல்லை. மக்கள் ஆணை இல்லாத ஒரு செயலை எம்மால் செய்யமுடியாது. ஆகவே, புதிய அரசமைப்பை உருவாக்கும் முயற்சியை இத்தோடு நிறுத்திக்கொள்வதுதான் நல்லது.” – இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:- “புதிய அரசமைப்பொன்றைக் கொண்டுவருவதற்கான ஆணையை ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்களிடம் கோரின. ஆனால், எந்தக் …
Read More »