தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்குமிடையிலான சந்திப்பு இந்த வார இறுதியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது பெரும்பாலும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஒருநாள் கொழும்பில் இருவரும் சந்தித்துப் பேசுவர் என அறியமுடிகின்றது முதலமைச்சர் விக்னேஸ்வரன் எதிர்வரும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கொழும்பில் நிற்பார் எனக் கூறப்படுகின்றது. அந்தவேளையில், பெரும்பாலும் சனி அல்லது ஞாயிற்றுக்கிழமையன்று கொழும்பு இசுப்பத்தான வீதியிலுள்ள சிரேஷ்ட சட்டத்தரணி கனக ஈஸ்வரனின் இல்லத்தில் இந்தச் …
Read More »சர்வகட்சிப் பேரவையை அமைக்கிறார் மைத்திரி!
புதிய அரசமைப்புத் தொடர்பில் பெளத்த மகா நாயக்க தேரர்கள் சுமத்திய குற்றச்சாட்டுக்களைத் தொடர்ந்து சர்வகட்சிப் பேரவை ஒன்றைக் கூட்டுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. அரசமைப்புப் பேரவையாக மாறியுள்ள நாடாளுமன்றத்தில் உருவாக்கப்படும் புதிய அரசமைப்பு வரைவுத் திட்டத்திற்குச் சர்வகட்சிப் பேரவையின் ஊடாக அனுமதி பெற்றுக் கொள்ள ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார் என்றும் – அரசமைப்பு யோசனைகள் தயாரிக்கப்பட்டதும் சர்வ கட்சிப் பேரவை கூட்டப்படும் என்றும் கூறப்பட்டது. நாடாளுமன்றைப் பிரதிநிதித்துவம் …
Read More »இலங்கை வருகிறார் ஆஸி. வெளிவிவகார அமைச்சர் ஜூலி!
ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிசப் இந்த வாரம் இலங்கைக்கு வருகை தரவுள்ளார். இலங்கை வரும் அவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் முக்கிய அமைச்சர்கள் சிலரையும் சந்திக்கவுள்ளார். இரு தரப்பு பாதுகாப்பு மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் அவர் பேச்சுகளில் ஈடுபடவுள்ளார். டெங்குக் காய்ச்சலைத் தடுக்க ஆஸ்திரேலியா வழங்கும் உதவி குறித்தும் ஜனாதிபதியுடன் …
Read More »அரசியல் தீர்வு, பொருளாதார நிலைமை தொடர்பில் சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சருடன் பேசவுள்ளேன்! – சம்பந்தன் தெரிவிப்பு
இலங்கைக்கு நேற்றிரவு பயணம் மேற்கொண்ட சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் விவியன் பாலகிருஷ்ணன் கொழும்பில் இன்று முக்கிய சந்திப்புகளை நடத்தவுள்ளார். இரண்டு நாட்கள் பயணமாக கொழும்புவந்த அவருக்கு கட்டுநாயக்க விமானநிலையத்தில் நேற்றிரவு வரவேற்பளிக்கப்பட்டது. இன்று பிற்பகல் ஒரு மணியளவில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவை அவர் சந்திக்கவுள்ளார். இந்தச் சந்திப்பையடுத்து இவ்விரு அமைச்சர்களும் இணைந்து கூட்டு ஊடகவியலாளர் மாநாடொன்றை நடத்தவுள்ளனர். அதன்பின்னர் பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் …
Read More »அரசின் மூன்றிலிரண்டு பெரும்பான்மையை தகர்த்தெறிய மஹிந்த இராஜதந்திர வியூகம்!
புதிய அரசமைப்பை தேசிய அரசு கொண்டுவருவதைத் தடுக்கும்வகையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அணியினர் இராஜதந்திர வியூகங்களை வகுத்து நாட்டில் ஸ்திரமற்ற நிலையை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். நாடாளுமன்றில் தேசிய அரசின் மூன்றிலிரண்டு பெரும்பான்மையை உடைத்தெறிவதே இவர்களின் தற்போதைய பிரதான இலக்காகவுள்ளது எனவும் அரசியல் வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது. 2015ஆம் ஆண்டு பொது வேட்பாளராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போட்டியிட்டபோது புதிய அரசமைப்பொன்றைக் கொண்டுவருவதும், தேர்தல் முறைமையை மறுசீரமைப்பதுமே …
Read More »ஜெருசலேம்: துப்பாக்கிச் சூடு நடந்த பழைமையான மசூதி மீண்டும் திறப்பு – இஸ்லாமியர்கள் மகிழ்ச்சி
இஸ்ரேல் நாட்டின் தலைநகரான ஜெருசலேமில் பாலஸ்தீனியர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் போலீஸ் அதிகாரிகள் பலியானதால் மூடப்பட்ட அல் அக்ஸா மசூதி இன்று மீண்டும் திறக்கப்பட்டதால் அங்குள்ள இஸ்லாமியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாடுகளுக்கு இடையே அரை நூற்றாண்டு காலத்துக்கும் அதிகமாக தீராப்பகை நீடித்து வருகிறது. இஸ்ரேல் நாட்டை மீண்டும் தங்கள் வசப்படுத்த பாலஸ்தீனமும், பாலஸ்தீனத்தை முழுமையாக ஆக்கிரமித்து கொள்ள இஸ்ரேலும் முயன்று வருகின்றன. இதேபோல், இஸ்ரேல் நாட்டு …
Read More »வெனிசுலாவில் அதிபருக்கு எதிரான வாக்கெடுப்பில் பெண் சுட்டுக்கொலை
வெனிசுலாவில் அதிபருக்கு எதிரான வாக்கெடுப்பின் போது மர்ம நபர்கள் தீடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் பெண் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் அதிபர் நிகோலஸ் மதுரோவுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர் பதவி விலக வலியுறுத்துகின்றனர். இப்போராட்டம் கடந்த ஏப்ரல் முதல் நடைபெற்று வருகிறது. அதில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்கள் மற்றும் போலீஸ்- ராணுவம் நடத்திய தாக்குதல்களில் இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். …
Read More »ஆப்கானிஸ்தான் எல்லையில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் மீது பாக். ராணுவம் தாக்குதல் – குண்டுவீச்சு
ஆப்கானிஸ்தான் எல்லையில் பதுங்கி இருந்த ஐ.எஸ்.தீவிரவாதிகள் மீது பாகிஸ்தான் ராணுவம் குண்டுவீசி தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் தற்போது ஐ.எஸ்.தீவிரவாதிகளின் கை ஓங்கி வருகிறது. கடந்த 2 ஆண்டுகளில் பாகிஸ்தானில் பல தாக்குதல்களை நடத்தி உள்ளனர். அவர்கள் ஆப்கானிஸ்தானில் வலுவாக உள்ளனர். எல்லை தாண்டி வந்து பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தி விட்டு மீண்டும் ஆப்கானிஸ்தானுக்குள் சென்று விடுகின்றனர். எனவே, ஆப்கானிஸ்தான் எல்லையில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் …
Read More »எமது மண்ணில் இருந்து எம்மைத் துரத்தலாம் என நினைக்காதீர்கள்: ரவிகரன்
எமது மண்ணில் இருந்து எம்மைத் துரத்தலாம் என நினைத்து, இளைஞர்களின் மனநிலையினை மீண்டும் வேறு திசைகளுக்கு மாற்றாதீர்கள் என வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார். முள்ளியவளையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “எமது இளைஞர்கள் இன்று ஆக்கபூர்வமான வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். எமது இளைஞர்களின் பலத்தினை தெரிந்தவர்கள் இன்று அரசாங்கத்தில் இனவாதிகளாக இருக்கின்றார்கள். முல்லைத்தீவில் சாதித்த எமது …
Read More »ஜனாதிபதி- பிரதமரை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவு!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது. 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் காலத்தில், போலி ஆவணங்களை வெளியிட்ட குற்றச்சாட்டில் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைகள் இன்று இடம்பெற்றன. இந்த வழக்கில் முதலாம் மற்றும் இரண்டாவது சாட்சியாளர்களாக ஜனாதிபதியும், பிரதமரும் பெயரிடப்பட்டுள்ள நிலையில், அவர்களை நீதிமன்றத்தில் …
Read More »