Sunday , October 19 2025
Home / செய்திகள் (page 392)

செய்திகள்

News

உள்ளூராட்சி தேர்தலில் சிறுபான்மைக் கட்சிகள் யானைச் சின்னத்திலேயே களமிறங்கும்! – கூட்டமைப்பு , ஜே.வி.பி. தனிவழிப்பயணம்

உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்வரும் டிசம்பரில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில், அத்தேர்தலை எதிர்கொள்வதற்காக பிரதான கட்சிகள் தயாராகி வருகின்றன. குறித்த தேர்தல் கலப்பு முறையிலேயே நடைபெறவுள்ளதுடன், அதற்குரிய திருத்தச் சட்டமூலம் அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. ஆளுங்கட்சியின் பிரதான பங்காளியான ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய தேசிய முன்னணி என்ற கூட்டமைப்பின்கீழ் யானைச் சின்னத்தில் களமிறங்கவுள்ளது. சிறுகட்சிகள் பல ஐ.தே.கவுடன் கைகோர்க்கவுள்ளன. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், …

Read More »

வடக்கு மாகாண சபை விவகாரம்: சம்பந்தன் – விக்கி சந்திப்புக்கு இன்னும் திகதி முடிவாகவில்லை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட வடக்கு மாகாண சபையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் குறித்து கலந்து பேசித் தீர்ப்பதற்காக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் இந்த வார இறுதியில் சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப் பட்ட போதிலும் இதுவரை அந்தச் சந்திப்புக்கான ஒழுங்குகள் இறுதிசெய்யப்பட வில்லை. இருவருக்கும் பொதுவான நண்பரான ஜனாதிபதி சட்டத்தரணி கனகஈஸ்வரனின் பங்கு பற்றுதலுடன் இந்தச் சந்திப்பு நடைபெறுகின்றமையை சம்பந்தன் விரும்புகின்றார் எனக் கூறப்படுகின்றது. சட்டத்தரணி …

Read More »

தீவிரவாதத்தை ஒழிக்க புதிய பாதுகாப்பு அமைப்பை உருவாக்கும் சவூதி அரேபியா

எல்லை தாண்டிய தீவிரவாதத்தை முறியடிக்க உள்துறை அமைச்சகத்தில் இருந்து பிரித்து புதிய பாதுகாப்பு அமைப்பை உருவாக்க சவூதி அரேபியா மன்னர் சல்மான் உத்தரவிட்டுள்ளார். எல்லை தாண்டிய தீவிரவாதத்தை முறியடிக்க உள்துறை அமைச்சகத்தில் இருந்து பிரித்து புதிய பாதுகாப்பு அமைப்பை உருவாக்க சவூதி அரேபியா மன்னர் சல்மான் உத்தரவிட்டுள்ளார். சவூதி அரேபியாவின் மன்னர் சல்மான் தலைமையிலான கேபினட் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், எல்லை தாண்டிய தீவிரவாதம் உள்ளிட்ட விவகாரங்களை கையாள்வதற்காக …

Read More »

உளவு மற்றும் தீவிரவாத குழுவுடன் தொடர்பு: குவைத்தில் இருந்து ஈரான் தூதர்கள் வெளியேற்றம்

உளவு மற்றும் தீவிரவாத குழுவுடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறி குவைத்தில் இருந்து 15 ஈரான் தூதர்கள் வெளியேற்றப்பட்டனர். குவைத்தில் 2015-ம் ஆண்டில் தீவிரவாத தாக்குதல் நடந்தது. அந்த வழக்கில் கடந்த ஆண்டு தீர்ப்பளிக்கப்பட்டது. அதில் 24 பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டது. தீவிரவாத தாக்குதல் நடத்தவும், உளவு வேலை பார்க்க இவர்களுக்கும் ஈரான் தூதரக அதிகாரிகள் மற்றும் ஹிஸ்புல்லா தீவிரவாதிகளுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. இதை தொடர்ந்து குவைத்தில் இருந்து …

Read More »

நடைபயிற்சியின்போது ஏற்பட்ட பாசத்தால் நாயை தத்தெடுத்த ராணி எலிசபெத்

நடைபயிற்சியின்போது ஏற்பட்ட பாசத்தால் நாயை தத்தெடுத்து இங்கிலாந்து ராணி எலிசபெத் பராமரித்து வருகிறார். இங்கிலாந்து ராணி எலிசபெத்துக்கு நாய்களின் மீது பிரியம் அதிகம். எனவே அவர் 3 நாய்களை வளர்க்கிறார். அந்த நாய்களுடன் நடைப்பயிற்சி மேற்கொள்வார். அப்போது முன்னாள் விளையாட்டு வீரர் பில் பென்விக் என்பவரும் தனது விஸ்பா என்ற கார்ஜி இன நாயுடன் நடைபயிற்சி செய்து வருவார். அந்த நாயின் மீது ராணி எலிசபெத் பாசம் வைத்தார். இந்த …

Read More »

2025 வரை நல்லாட்சி அரசின் பயணத்தை எவராலும் நிறுத்தவே முடியாது! – அடித்துக் கூறுகின்றார் ராஜித

“நல்லாட்சி அரசு அதன் கோட்பாடுகளை முன்னோக்கிக் கொண்டுசெல்வதில் உறுதிபூண்டுள்ளது. எவரும் அச்சம்கொள்ளத் தேவையில்லை.” – இவ்வாறு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அத்துடன், இரண்டு பிரதான தேசியக் கட்சிகளும் இணைந்து அமைத்துக்கொண்ட தேசிய அரசு (நல்லாட்சி அரசு) 2020ஆம் ஆண்டுவரை தொடரும் எனவும், 2020ஆம் ஆண்டு தேர்தலின் பின்னர் 2025ஆம் ஆண்டுவரை ஒப்பந்தம் புதுப்பிக்கப்படும் என்றும் அவர் கூறினார். ஜப்பானிய வேலைத்திட்டத்தின்கீழ் கல்கமுவயில் அமைக்கப்படும் வைத்தியசாலையின் பணிகளை ஆரம்பித்துவைக்கும் …

Read More »

அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பான ராஜிதவின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது! – அருட்தந்தை சக்திவேல் தெரிவிப்பு  

தெற்கில் புரட்சியில் ஈடுபட்டவர்களை விடுதலைசெய்ததுபோல், அரசியல் கைதிகளையும் விடுவிக்கவேண்டும் எனத் தாம் அமைச்சரவை சந்திப்பில்  தெரிவித்தார் என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்திருக்கும் கருத்தை அரசியல் கைதிகளை விடுதலைசெய்வதற்கான தேசிய அமைப்பு வரவேற்றுள்ளது. இது தொடர்பாக கருத்து வெளியிட்ட அவ்வமைப்பின் ஏற்பாட்டாளர் அருட்தந்தை மா. சக்திவேல் கூறியவை வருமாறு:- “தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாஷைகள் மட்டுமல்ல, காணிப் பிரச்சினை, மீள்குடியேற்றம், காணாமற்போனோர் விடயங்கள் என்பவற்றில் தீர்க்கமான முடிவெடுக்க முடியாது. நல்லாட்சி …

Read More »

சு.கவின் மாநாட்டுக்கு மஹிந்த அணிக்கும் அழைப்பு!

“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 66ஆவது மாநாட்டு நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு மஹிந்த அணியான பொது எதிரணி உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படவுள்ளது”  என்று அக்கட்சியின் இளைஞர் அணியின் தலைவர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார். கடந்த வருடத்தைவிட சிறப்பாக நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் நாட்டுக்குத் தேவையான அதிமுக்கிய தீர்மானங்கள் பல பிரகடனப்படுத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிளவை சரிசெய்துகொள்வதற்கும், கட்சியின் பாரம்பரியத்தையும் கட்டுக்கோப்பையும் பாதுகாத்துக்கொள்வதற்கும் பொது எதிரணியினர் உட்பட …

Read More »

சு.கவின் 66ஆவது மாநாட்டை கொழும்பில் நடத்த ஏற்பாடு! – அமைச்சர் அமரவீர அறிவிப்பு

“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 66ஆவது மாநாட்டை மிகவும் பயனுள்ளதாக நடத்துவதற்கான ஏற்பாட்டை கட்சியின் மத்திய குழு முன்னெடுத்துவருகின்றது”  என்று மீன்பிடி அமைச்சரும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், “ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 65ஆவது மாநாடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் குருநாகலையில் கடந்த வருடம் சிறப்பாக நடைபெற்றது. இம்முறை 66ஆவது மாநாட்டை கொழும்பில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. செப்டெம்பர் மாதம் 2ஆம் …

Read More »

ஐ.தே.கவின் 71ஆவது ஆண்டு விழாவிலும் மைத்திரி பிரதம அதிதி!

செல்வநாயகம் ஒத்துழைத்திருந்தால் பிரபாகரன்

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 6ஆம் திகதி வரவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் 71ஆவது நிறைவுக் கொண்டாட்டத்துக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பிரதம அதிதியாக அழைப்பதற்கு முடிவெடுக்கப்பட்டிருப்பதாக சிறிகொத்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த செப்டெம்பர் மாதம் அக்கட்சியின் 70ஆவது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டம் பொரளை கெம்பல் மைதானத்தில் நடந்தபோதும் ஜனாதிபதி மைத்திரிபால அதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். கடந்த வாரம் நடைபெற்ற கட்சியின் நிறைவேற்றுக்குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது எனவும், …

Read More »