இந்தியாவும் சீனாவும் நேரடி பேச்சுவார்த்தை மூலம் எல்லைப் பதற்றத்தை தணிக்க வேண்டும் என அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது. சிக்கிம் எல்லை அருகே இந்தியா-சீனா-பூடான் நாடுகள் சந்திக்கும் முச்சந்திப்பான டோக்லாம் பகுதியில் சீன ராணுவம் மேற்கொண்ட சாலைப் பணிகளை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளுக்கு ஏற்படும் பாதுகாப்பு அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு இந்திய ராணுவம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு …
Read More »ஜெருசலேமில் தொடரும் வன்முறை சம்பவங்கள்: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டம் நாளை கூடுகிறது
இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையில் நடந்து வரும் வன்முறை சம்பவங்கள் குறித்து, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் ஆலோசனை கூட்டம் நாளை நடைபெறுகிறது. இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே நீண்ட நெடுங்காலமாக பகை நிலவி வருகிறது. ஆக்கிரமிப்பு பாலஸ்தீன பகுதிகளில், குறிப்பாக கிழக்கு ஜெருசலேம் உள்ளிட்ட பகுதிகளில் இஸ்ரேல் வலுக்கட்டாயமாக குடியிருப்புகளை அமைத்து வருகிறது. இதை தடுத்து நிறுத்தக்கோரி, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கடந்த டிசம்பர் மாதம் ஓட்டெடுப்பு மூலம் தீர்மானம் …
Read More »ஆஸ்திரேலியா: ஓரினச் சேர்க்கையாளர் திருமணத்துக்கு அங்கீகாரம் – தபால் ஓட்டு முறைக்கு மந்திரி
ஓரினச் சேர்க்கையாளர் திருமணத்துக்கு அங்கீகாரம் அளிப்பது தொடர்பாக தபால் ஓட்டு முறையை நடத்தலாம் என ஆஸ்திரேலியா நாட்டின் மூத்த மந்திரி தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் ஓரினச் சேர்க்கை திருமணத்துக்கு ஆதரவு பெருகி வருகிறது. இதைதொடர்ந்து, அந்த திருமணங்களை அரசு அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. பொதுமக்களின் இந்த கோரிக்கைக்கு மந்திரிகளில் சிலரும் ஆதரவு அளித்து வருகின்றனர். கடந்த ஆண்டு பொதுமக்களிடம் நடத்திய கருத்துக் கணிப்பில், ஓரினச் சேர்க்கையாளர் திருமணத்துக்கு …
Read More »யாழ். துப்பாக்கிச் சூட்டுச்சம்பவம் நீதித்துறை மீதான தாக்குதல்: சிவஞானம்
நீதிபதி இளஞ்செழியன் மீது மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதல் முயற்சியானது யாழ்ப்பாண மாவட்டத்தினதும், நீதித்துறை மீதும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாகவே பார்க்கப்படவேண்டும் என வட.மாகாணசபை அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “நல்லூர் கந்தசுவாமி ஆலய தென்மேற்கு வீதியில் வைத்து நேற்று (சனிக்கிழமை) மாலை யாழ்ப்பாண மாவட்ட மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் அவர்களை இலக்குவைத்து நடத்தப்பட்ட …
Read More »யாழ். துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவருக்கு பொலிஸ் தலைமையகத்தில் அஞ்சலி!
யாழில் இடம் பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த நீதிபதி மா. இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலரின் உடல் தற்போது யாழ். பொலிஸ் தலைமையகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஏராளமான பொதுமக்கள் வருகைத்தருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் சிலாபத்தைச் சேர்ந்த 51 வயதாகிய ஹேமரத்ன என்பவர் உயிரிழந்திருந்தார். இவர் கடந்த 17 வருடங்களாக நீதிபதி இளஞ்செழியனின் நம்பிக்கைக்குரியவராகவும், அவரது மெய்ப்பாதுகாவலராகவும் பணியாற்றியிருந்தார் …
Read More »சிறிலங்கா விடயத்தில் இந்தியா தவறிழைத்து விட்டது – சிவ்சங்கர் மேனன்
அண்டை நாடுகளைக் கைளும் விடயத்தில் இந்தியாவின் அணுகுமுறைகளில் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்றும், சிறிலங்கா விடயத்தில் இந்தியா தவறிழைத்து விட்டதாகவும், தெரிவித்துள்ளார் இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன். வெளிநாட்டு விவகாரங்களுக்கான இந்திய செய்தியாளர்களின் சங்கத்தில் நேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். “எமது அண்டை நாடுகளை கையாளும் முறையில் நாம் மாற்றங்களைச் செய்ய வேண்டிய தேவை உள்ளது. உங்களின் அண்டை நாடுகள், உங்களுக்கு மட்டுமே …
Read More »ஜப்பானிய போர்க் கப்பலில் சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்
கொழும்புத் துறைமுகத்தில் தரித்து நிற்கும் ஜப்பானிய கடற்படையின் போர்க்கப்பல்களை, சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன மற்றும் பாதுகாப்புச் செயலர் கபில வைத்தியரத்ன, சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன ஆகியோர் சென்று பார்வையிட்டனர். பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேரத்ன, ஜப்பானிய கடற்படையின் உலங்குவானூர்தி தாங்கி நாசகாரி கப்பலான இசுமோ மற்றும் சசகாமி ஆகிய போர்க்கப்பல்களுக்கு சென்று பார்வையிட்டார். இதன் போது சிறிலங்கா பாதுகாப்பு …
Read More »யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் பயணித்த வாகனம் மீது துப்பாக்கிச்சூடு! – மெய்ப்பாதுகாவலர்கள் இருவர் காயம்
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் பயணித்த வாகனம் மீது இனந்தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இதனால் நீதிபதி மா.இளஞ்செழியனின் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் இருவர் காயமடைந்துள்ளனர். யாழ்ப்பாணம் நல்லூர் – பின் வீதியில் இன்று மாலை 5.30 மணியளவில் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் பயணித்த வாகனத்தை வழிமறித்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இதன்போது நீதிபதி மா.இளஞ்செழியனின் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் …
Read More »பொது எதிரணியின் இறுதி அஸ்திரமாகிறார் கோட்டா! – மக்கள் செல்வாக்கை நாடிபிடித்துப் பார்க்க உள்ளூராட்சி தேர்தல் ஆய்வுக் களமாகின்றது
இலங்கையில் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்கு முயற்சித்துவரும் மஹிந்த அணியான பொது எதிரணி, இதற்கான தமது இறுதி அரசியல் அஸ்திரமாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவையே முழுமையாக நம்பியிருக்கின்றது எனத் தெரியவருகின்றது. இதன்படி மக்கள் மத்தியிலுள்ள அவருக்குள்ள செல்வாக்கை நாடிபிடித்துப் பார்ப்பதற்கான பரீட்சைக் களமாகவே உள்ளூராட்சி சபைத் தேர்தலை பொது எதிரணி கையாளும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதை உறுதிப்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்ட பொது எதிரணி உறுப்பினர் ஒருவர், கோட்டாபயவையும், …
Read More »புதிய அரசமைப்பு உருவாவதைத் தடுக்க மஹிந்த அணியினர் இருமுனைத் தாக்குதல்!
புதிய அரசமைப்பொன்றை இயற்றும் தேசிய அரசின் முயற்சியைத் தோற்கடிப்பதற்கு இருமுனைத் தாக்குதலை நடத்துவதற்கு மஹிந்த அணியான பொது எதிரணி தீர்மானித்துள்ளது. சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக பொது எதிரணி உறுப்பினர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்றுமுன்தினம் கூடினர். கொழும்பு, விஜயராம மாவத்தையில் அமைந்துள்ள மஹிந்தவின் இல்லத்தில் நடைபெற்ற மேற்படி சந்திப்பில், அரசமைப்பு மீளமைப்பு பணி, உள்ளூராட்சி சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலம், வெளிநாட்டுப் பிரமுகர்களில் இலங்கைப் …
Read More »