Saturday , October 18 2025
Home / செய்திகள் (page 390)

செய்திகள்

News

இந்தோனேசியாவில் போதை பொருள் கடத்தல்காரர்களை சுட்டுத்தள்ள அதிபர் உத்தரவு

இந்தோனேசியாவில் போதை பொருள் கடத்தல்காரர்களை சுட்டுத்தள்ளுங்கள் என்று சட்ட அமலாக்கல் பிரிவினருக்கு அதிபர் ஜோகோ விடோடோ உத்தரவிட்டார். இந்தோனேசியாவில் அந்த நாட்டின் அதிபர் ஜோகோ விடோடோ போதை பொருள் கடத்தல்காரர்களை ஒடுக்குவதற்கு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார். இந்த நிலையில், அங்கு நடந்த ஒரு நிகழ்ச்சியில் அவர் அரசியல் கட்சித்தலைவர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர், கைது செய்யும்போது எதிர்ப்பு தெரிவித்தால் போதை பொருள் கடத்தல்காரர்களை சுட்டுத்தள்ளுங்கள் என்று சட்ட …

Read More »

ஆப்கானிஸ்தான்: காபூலில் நடந்த கார் குண்டு வெடிப்பில் 24 பேர் பலி

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடைபெற்ற கார் குண்டு வெடிப்பு தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 24 பேர் பலியாகினர். ஆப்கானிஸ்தான் நாட்டின் காபூலின் மேற்குப் பகுதியில் ஷியா ஹசாரா பிரிவினர் அதிகம் வசித்து வருகின்றனர். இன்று காலை அந்த பகுதியில் பொதுமக்கள் வழக்கம்போல் தங்கள் பணிகளுக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது தற்கொலைப்படை தீவிரவாதி ஒருவன், வெடிகுண்டுகளை நிரப்பிய காரை பொதுமக்கள் மீது மோதச் செய்தான் இந்த திடீர் தாக்குதலில் சம்பவ …

Read More »

மெட்ரோ ரெயிலுக்காக சீனா பூமிக்கு அடியில் 31 மாடி ரெயில் நிலையம் கட்டுகிறது

சீனாவின் சாங்கிங் மாகாணத்தில் மெட்ரோ சுரங்க ரெயில் நிலையத்தில் பூமிக்கு அடியில் 94 மீட்டர் உயரத்தில் ரெயில் நிலையம் கட்டப்பட்டு வருகிறது. அங்கு 31 அடிக்கு மாடிகள் கட்டப்படுகிறது. ரெயில் போக்குவரத்தில் சீனா அதிவேகமாக முன்னேறி வருகிறது. புல்லட் ரெயில், சுரங்க பாதை ரெயில், பறக்கும் ரெயில் என சாதனை படைத்து வருகிறது. இந்த நிலையில் மெட்ரோ சுரங்க பாதை ரெயிலில் பூமிக்கு அடியில் அதிக ஆழத்தில் பல அடுக்குமாடி …

Read More »

யாழ். துப்பாக்கிச் சூடு: சந்தேக நபரை பிடிக்க இரு விசேட குழுக்கள்

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டதாக கருதப்படும் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரை கைது செய்வதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில், சிவில் உடையுடன் கூடிய இரண்டு விசேட விசாரணைக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் 30 இற்கும் மேற்பட்டவர்களிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதாகவும், 2 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும், சூப்பாக்கிச் சூட்டுடன் …

Read More »

நீதிபதியை இலக்கு வைத்த துப்பாக்கிச்சூடு: ஏற்றுக்கொள்ள முடியாது என்கிறார் சபூர்தின்

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்டதாக கருதப்படும் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என மன்னார் மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் சிரேஸ்ட சட்டத்தரணி எம்.எம்.சபூர்தின் தெரிவித்தார். குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைக் கண்டித்து இன்று (திங்கட்கிழமை) மன்னார் மாவட்ட சட்டத்தரணிகள் பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொண்டனர். இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “சனிக்கிழமை மாலை நல்லூரில் நீதவான் இளஞ்செழியனை …

Read More »

அர்ஜூன் அலோசியசின் தொடர்பாடல் சாதனங்களை புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்க உத்தரவு

மத்திய வங்கி முறி விசாரணை தொடர்பில் அர்ஜூன் அலோசியசின் கையடக்க தொலைபேசி மற்றும் மடிகணிணி உள்ளிட்ட தொடர்பாடல் உபகரணங்களை மத்திய புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் திறைசேரி முறி விநியோகம் தொடர்பிலான விசாரணை இன்று நடைபெற்றது. இதன் போது வழங்கப்பட்ட சாட்சிக்கு அமைவாகவே ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பிலான விசாரணைகள் முடியும் வரை, 2015 தொடக்கம் …

Read More »

பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு தொடர்ந்தும் உதவுவோம்: கனேடிய பிரதமர்

போரினால் பல துன்பங்களுக்கு முகம் கொடுத்த இலங்கைத் தமிழர்களுக்கு தமது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்வதாக கனேடிய பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடியா குறிப்பிட்டுள்ளார். கறுப்பு ஜூலையை முன்னிட்டு அவர் விடுத்துள்ள செய்தியின் மூலமாகவே இதனைக் கூறியுள்ளார். மேலும், இலங்கையில் பொறுப்புக் கூறலானது அவசியம் என ஜஸ்ட்டின் வலியுருத்தியுள்ளதோடு, பாதிக்கப்பட்ட மக்களின் துயர்நீக்க தொடர்ந்தும் கனடா தமது உதவிகளை வழங்கும் எனவும் தெரிவித்துள்ளார். 1983ஆம் ஆண்டு ஜுலையில் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட …

Read More »

இளஞ்செழியன் உட்பட அனைத்து நீதிபதிகளினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துக! – பொலிஸ்மா அதிபருக்கு ஜனாதிபதி பணிப்புரை 

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் பயணம்செய்தவேளை நேற்றுமுன்தினம் மாலை  நல்லூர் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தை வன்மையாகக் கண்டித்துள்ளார்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. அந்தச்  சம்பவத்தில் உயிரிழந்த பொலிஸ் அதிகாரி சரத் ஹேமச்சந்திரவின் மறைவுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவத்தையடுத்து நீதிபதி இளஞ்செழியனின் பாதுகாப்பு குறித்து கவனஞ்செலுத்தியுள்ள ஜனாதிபதி, அனைத்து நீதிபதிகளினதும் பாதுகாப்பு தொடர்பில் விசேட நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துமாறு பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். விசேட …

Read More »

மஹிந்த அணியின் அரச எதிர்ப்புத் தினமன்று தேசிய அரசு பிளவடையும் சாத்தியம்!

தேசிய அரசிலிருந்து விலகி  நாடாளுமன்றில் சுயாதீனமாக இயங்கப்போவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 18 உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் அறிவித்திருந்த நிலையில், இவர்களில் சிலர் கடந்த வாரம் கூட்டு எதிரணியுடன் இரகசிய சந்திப்பொன்றை நடத்தியுள்ளனர் எனத் தெரியவருகின்றது. தேசிய அரசை இரண்டாக பிளவுப்படுத்தும் நோக்கில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பலவழிகளிலும் நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றார். மக்கள் மத்தியிலும், நாட்டில் தொழிற்சங்கங்கள் மற்றும் சில அரச மற்றும் தனியார் தரப்பினருடன் அரசுக்கு ஏற்பட்டுள்ள முரண்பாடு …

Read More »

சம்பந்தன் – விக்கி சந்திப்பு! – கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுடனான பேச்சின் பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கை எனத் தீர்மானம் 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் வடக்கு மாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனுக்குமிடையிலான சந்திப்பு கொழும்பிலுள்ள ஜனாதிபதி சட்டத்தரணி கனகஈஸ்வரனின் இல்லத்தில் நேற்று நடைபெற்றது. இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட வடக்கு மாகாண சபையின் நிலைமைகள் தொடர்பில் கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுடன் சந்தித்துக் கலந்துரையாடிய பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது என இணக்கம் காணப்பட்டுள்ளது. அத்துடன், ஊழல், மோசடிகள் குறித்து தெரிவுக்குழு அமைக்கப்படவேண்டும் எனக் …

Read More »