மலேரியா நோய்க்கான காவி நுளம்புகள் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு பரவுவதற்கான அபாயமுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சரினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “2016ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் மலேரியா அற்ற நாடாக உலக சுகாதார நிறுவனத்தினால் இலங்கைக்கு சான்றிதழ் வழங்கப்பட்டிருந்தது. இதனால் இலங்கை பெருமை கொண்டிருந்தது. ஆனாலும் அண்மையில் மன்னார் மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை …
Read More »வவுனியா, இரட்டைப் பெரியகுளத்தில் விசமிகளால் மயானத்திற்கு தீ வைப்பு!
வவுனியா இரட்டைப் பெரியகுள மயானத்திற்கு விசமிகளால் இன்று (செவ்வாய்க்கிழமை) தீ வைக்கப்பட்டுள்ளது. வவுனியா ஏ9 வீதிக்கருகில் அமைந்துள்ள இரட்டைப் பெரியகுள மயானத்திற்கே இன்று மதியம் தீ வைக்கப்பட்டதில் மயானம் முழுவதும் எரிந்து நாசமாகியுள்ளது. இந்நிலையில் இதனை அவதானித்த இரட்டைப் பெரியகுளப் பிரிவுப் பொலிஸார் வவுனியா நகரசபைத் தீயணைப்பு பிரிவினருக்கு தகவல் அளித்துள்ளனர். இதனை அடுத்து உடன் விரைந்த நகரசபை தீயணைப்புப் பிரிவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயினை அருகில் இருந்த …
Read More »மலையகத்தில் வைத்திய சேவைகள் முடக்கம்
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று காலை 8 மணி முதல் மீண்டும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ளதாள் மலையகத்தில் வைத்திய சேவைகள் முடக்கம். வைத்திய பீட மாணவ செயற்குழுவின் ஏற்பாட்டாளர் ரயன் ஜயலத்தை கைது செய்வதற்கு முற்பட்ட சந்தர்ப்பத்தில் ஏற்பட்ட நிலை தொடர்பில் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தும், சைட்டம் நிறுவனத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் மலையகத்தில் உள்ள சில வைத்தியசாலைகளில் சில வைத்தியர்கள் கடமையில் ஈடுப்பட்டிருந்தாலும், சில …
Read More »இம்மாத இறுதிக்குள் கேப்பாப்பிலவு காணிகள் விடுவிக்கப்பட வேண்டும்! – ஜனாதிபதிக்கு சம்பந்தன் அவசர கடிதம்
முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்பிலவில் காணிகள் விடுவிக்கப்படும் என்று ஒரு மாதத்துக்கு முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய வாக்குறுதியை மீளவும் நினைவூட்டிய எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், அந்தக் காணிகள் மாத இறுதிக்குள் விடுவிப்பதற்கு உடன் நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைத்துள்ள அவசர கடிதத்திலேயே அவர் மேற்படி கோரிக்கையை முன்வைத்துள்ளார். அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:- “கடந்த மே மாதம் 18ஆம் திகதி நானும் நாடாளுமன்ற உறுப்பினர் …
Read More »காணாமல்போனோர் குறித்தும் ஜனாதிபதிக்கு சம்பந்தன் கடிதம்!
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயம் தொடர்பிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் அவசர கடிதம் அனுப்பிவைத்துள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- “காணாமல்போனவர்களுடைய விடயம் மிகவும் பாரதூரமான ஒரு விடயம் என்பதையும், இப்பிரச்சினைக்கான தீர்வைக் கோரி வடக்கு, கிழக்கில் காணாமல்போனவர்களின் குடும்ப உறவினர்களால் பல மாதகாலமாகப் போராட்டங்கள் நடாத்தப்பட்டு வருவதையும் தாங்கள் அறிவீர்கள். இந்தக் குடும்பங்களில் அதிகம் பேர் தமது உறவினர்களைப் பாதுகாப்புப் படையினரிடம் கையளித்தவர்கள் அல்லது தமது உறவினர்கள் பாதுகாப்புப் …
Read More »நல்லூர் சம்பவம் தொடர்பில் அரசு விழிப்பாகவே இருக்க வேண்டும்! – மஹிந்த கூறுகின்றார்
யாழ்.நல்லூரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பில் அரசு ஆழகாக சிந்தித்துச்செயற்படவேண்டும் எனக் கூறியுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, விடுதலைப்புலிகள் அமைப்பு உருவாகும் காலப்பகுதியில் இவ்வாறான சம்பவங்களே வடக்கில் இடம்பெற்றன எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். அம்பாந்தோட்டை, வீரகெட்டிய பகுதியில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர், நல்லூர் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் குறித்து ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு:- “யாழ்ப்பாணத்தில் பொலிஸ்அதிகாரிகள் இருவர் …
Read More »நீதிபதி இளஞ்செழியன் மீதான தாகுத்தல்: மல்வத்து பீடமும் கடும் கண்டனம்!
யாழ்ப்பாணம் மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மீதான தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாக, பௌத்த மக்களின் முக்கிய பீடங்களில் ஒன்றான மல்வத்து பீடம் தெரிவித்துள்ளது. “இந்த ஆட்சியில் நீதித்துறை சுயாதீனமாகச் செயற்பட வேண்டும். ஆயுதங்களால் அதனை அச்சுறுத்தி அடிபணிய வைக்க முடியாது. இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் உடன் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். தாக்குதலாளிகள் சட்டத்தின் முன்நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்” என்று மல்வத்து பீடம் குறிப்பிட்டுள்ளது.
Read More »அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று மீண்டும் பணிப்பகிஷ்கரிப்பு!
சைட்டம் எனப்படும் மாலபே தனியார் வைத்திய கல்லூரியை பொதுவுடமையாக்குமாறு கோரி அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று மீண்டும் பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டத்தில் குதித்துள்ளது. இன்று காலை 8 மணிமுதல் நாட்டின் அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படும். மாலபே தனியார் வைத்திய கல்லூரியை அரசுடமையாக்குமாறு கோரி அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தொடர்ச்சியாக கடந்த மாதம் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்திருந்தது. எனினும், இம்மாத ஆரம்பத்தில் மீண்டும் பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொள்வதாக அரச …
Read More »டெல்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகளுக்கு போனில் மிரட்டல்: அய்யாக்கண்ணு பேட்டி
போராட்டத்தை கைவிடாவிட்டால் டெல்லியில் இரவு தூங்கும் போது லாரியை ஏற்றி கொலை செய்து விடுவோம் என்று தமிழக விவசாயிகளுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த தமிழக விவசாயிகள் 100-க்கும் மேற்பட்டோர் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் …
Read More »என்.எல்.சி. தலைமை அலுவலகத்தை தொழிலாளர்கள் முற்றுகையிட முயற்சி: வேல்முருகன் உள்பட 1000 பேர் கைது
26 நாட்கள் வேலை வழங்க வலியுறுத்தி என்.எல்.சி. தலைமை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் 1,000 பேரை போலீசார் கைது செய்தனர். நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். சுரங்கம் 1-ஏ பகுதியில் வேலை பார்க்கும் ஒப்பந்த தொழிலாளர்களின் வேலை நாட்களை 26-ல் இருந்து 19 நாட்களாக என்.எல்.சி. நிர்வாகம் குறைத்தது. இதனை …
Read More »