Sunday , October 19 2025
Home / செய்திகள் (page 388)

செய்திகள்

News

யாழ். நீதிபதி இளஞ்செழியன் தமிழ்தேசத்தின் சொத்து

உலகத்திற்கு மனிதாபிமானத்தை கற்றுக் கொடுத்த நீதிபதி இளஞ்செழியன் தமிழ்தேசத்தின் சொத்து என த.தே.மக்கள் முன்னணியின் மட்டுமாவட்ட அமைப்பாளர் தருமலிங்கம் சுரேஸ் தெரிவித்துள்ளார். யாழில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தினை கண்டித்து அவர் இன்று விடுத்துள்ள ஊடக அறிக்கையின் மூலமாகவே இதனைக் கூறியுள்ளார். மேலும், யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மீது நடத்தப்பட்டிருக்கும் தாக்குதலானது மிகவும் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய ஒர் விடயம் எனவும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. …

Read More »

வவுனியாவில் வாள்வெட்டு: ஒருவர் படுகாயம்

வவுனியா, சமனங்குளம் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். வவுனியா, ஆச்சிபுரம் பகுதியில் வசிக்கும் சுப்பிரமணியம் சத்தியசீலன் (வயது – 27) என்பவருக்கும் அப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலருக்கும் இடையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மோதல் ஏற்பட்டுள்ளது. இதன்போது வெட்டுக் காயங்களுக்கு உள்ளாகிய சத்தியசீலன், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த …

Read More »

முல்லைத்தீவு மாவட்டத்தில் 2,296 மாற்றுத்திறனாளிகள்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் 2,296 மாற்றுத்திறனாளிகள் வசித்து வருவதாக மாவட்ட செயலகப் புள்ளிவிபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியேறிய மக்களில் பல்வேறு தேவையுடைய மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களில், கரைத்துரைப்பற்று பிரதேச செயலர் பிரிவில் 444 மாற்றுத்திறனாளிகளும், புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவில் 707 மாற்றுத்திறனாளிகளும், ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவில் 311 மாற்றுத்திறனாளிகளும், துணுக்காய் பிரதேச செயலர் பிரிவில் 443 மாற்றுத்திறனாளிகளும், மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவில் 316 …

Read More »

சொந்த இடத்தில் அகதி வாழ்க்கை: வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

வவுனியா தாலிக்குள மக்கள் தமக்கு வீட்டுத்திட்டம் வழங்கப்பட வேண்டும் எனக் கோரி இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த பிரதேசத்தில் கடந்த பத்து வருடங்களாக வசித்து வருகின்ற போரினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த சுமார் முப்பது குடும்பங்களுக்கும், உப குடும்பங்களுக்கும் இதுவரை வீட்டுத்திட்டம் வழங்கப்படவில்லை என்பது சுட்டிக்காட்டப்படத்தக்கது. இதேவேளை, போரினால் பாதிக்கப்பட்டு உடைமைகள் அனைத்தையும் இழந்து அகதி வாழ்வு வாழ்ந்த பின்னர் இங்கு குடியேறியிருந்த நிலையில் கூட, தற்போது வரை எமக்கு …

Read More »

எரிபொருள் விநியோகம் இன்றுமாலை முதல் வழமைக்குத் திரும்பும்

எரிபொருள் விநியோகம் இன்றுமுதல் வழமை நிலைமைக்கு திரும்பும் என்று அரசு தெரிவித்தது. இன்று இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் ராஜித சேனாரட்ன மேலும் தெரிவித்ததாவது, வேலைநிறுத்தம் தொடர்பாக அரசு பொது மக்களின் நலனைக்கருத்திற்கொண்டு மேற்கொண்டுள்ள அத்தியாவசிய சேவைகள் தொடர்பான சட்டத்தை, வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டோர் படித்துப்பார்த்து செயற்படவேண்டும். வேலைப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள் தொடர்பில், அரசு அத்தியாவசிய சேவையாக எரிபொருள் விநியோககத்தை …

Read More »

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷிய தலையீடு: டிரம்ப் மருமகனிடம் எம்.பி.க்கள் விசாரணை

கடந்த ஆண்டு நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷியாவின் தலையீடு இருந்ததாக எழுந்த குற்றச்சாட்டு அடிப்படையில் டிரம்ப் மருமகனிடம் விசாரணை நடத்த அமெரிக்க பாராளுமன்றம் முடிவு செய்து உள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ந் தேதி நடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷியாவின் தலையீடு இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதாவது அப்போது டிரம்புக்கு (தற்போதைய ஜனாதிபதி) ஆதரவாக ரஷியா செயல்பட்டதாக கூறப்பட்டது. இதுபற்றி அமெரிக்காவின் புலனாய்வுத்துறை விசாரணை நடத்தி …

Read More »

சிரியா போராளிகளுக்கு அமெரிக்கா நிதியுதவி செய்தது வீண்வேலை – டிரம்ப் பாய்ச்சல்

சிரியாவில் அதிபரின் ஆட்சிக்கு எதிராக இயங்கி வரும் போராளிகளுக்கு அமெரிக்கா நிதியுதவி செய்தது ஆபத்தான வீண்வேலை என அதிபர் டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டில் பங்கேற்க சென்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்துப் பேசினார். அப்போது, சிரியா நாட்டின் தெற்கு பகுதியில் போர் பதற்றத்தை தணிப்பதற்கு செய்ய வேண்டிய சமாதான முயற்சிகள் தொடர்பாக இருவரும் ஆலோசனை …

Read More »

சாகலவுடனான கலந்துரையாடலின் பின்னர் போராட்டத்தை கைவிட்ட வைத்தியர் சங்கம்

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று பிற்பகல் அமைச்சர் சாகல ரட்ணாயக்கவுடன் நடத்திய கலந்துரையாடலின் பின்னர் மாலை 4 மணியுடன் பணிப்பகிஷ்கரிப்பை வைவிடுவதாக அறிவித்துள்ளது. மருத்துவ பீடத்தின் செயற்பாட்டாளர் சங்கத்தின் செயற்பாட்டாளரான ரயன் ஜயலத்தை கைதுசெய்வதற்கு அரசு முன்னெடுத்த நடவடிக்கையை கண்டித்தே அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்திருந்தது. இந்நிலையில், அமைச்சர் சாலக ரட்ணாயக்கவுடனான கலந்துரையாடலில் பின்னர் கூடிய வைத்தியர் சங்கத்தின் செயற்குழுக் கூட்டத்தில் பணிப்பகிஷ்கரிப்பை நேற்றைய …

Read More »

நீதிபதி இளஞ்செழியன் மீதான படுகொலை முயற்சிக்கு த.வி.கூ. கண்டனம்

நீதிபதி இளஞ்செழியன் மீது மேற்கொள்ளப்பட்ட படுகொலை முயற்சியை தமிழர் விடுதலைக் கூட்டணி மிக வன்மையாக கண்டிப்பதாக, கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். நீதிபதி இளஞ்செழியனின் வாகனம் மீது கடந்த சனிக்கிழமை நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தொடர்பில் அவர் வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, ”குறித்த சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதுடன், தன்னுயிரை அர்ப்பணித்த பொலிஸ் அதிகாரியின் அகால மரணத்தால், துயருற்று இருக்கும் அன்னாரின் குடும்பத்துக்கு …

Read More »

ஹம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்குவது தொடர்பான திருத்தப்பட்ட ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்குவது தொடர்பான அமைச்சரவை பத்திரம் இன்று (செவ்வாய்க்கிழமை) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது. இதன்போதே குறித்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை துறைமுக திட்டத்தின் மூலம் தொழிற்பேட்டை ஒன்று அமைவது மாத்திரமன்றி நேரடியாகவும், மறைமுகமாகவும் பல்வேறு வேலைவாய்ப்புகளை உருவாக்கப்படவுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனமொன்றுக்கு குத்தகைக்கு வழங்குவது …

Read More »