யாழ். கோப்பாய் பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சந்தேகத்தின் பேரில், மேலும் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். யாழ்.பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் இன்று (வியாழக்கிழமை) இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். யாழ். நல்லூர் அரசடி வீதியைச் சேர்ந்த முத்து எனப்படும் யோகராசா சதீஸ் மற்றும் கோப்பாய் பகுதியைச் சேர்ந்த அருள்சீலன் பிரட்றிக் தினேஸ் ஆகிய இருவமே கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு, அதனைத் தொடர்ந்து நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக யாழ். பாதுகாப்புப் …
Read More »யாழில் முப்படைகள் களமிறக்கப்படுவதை ஏற்கவே முடியாது! – கூட்டமைப்பு திட்டவட்டம்
“யாழ். குடாநாட்டில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவங்களைக் காரணங்காட்டி முப்படைகளைப் பாதுகாப்புக்குப் பயன்படுத்துவதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் ஏற்காது.” – இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். நேற்றுமுன்தினம் யாழ்ப்பாணம் சென்றிருந்த பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதை அடுத்து முப்படையினரும் கடமையில் ஈடுபடுத்தப்படுவர் என்று கூறியிருந்தார். அது தொடர்பில் கருத்துத் …
Read More »வடக்கில் தாக்குதல் ஆரம்பமே! – போகப் போக அவை அது அதிகரிக்கும் என்கிறார் மஹிந்த
“தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் ஆரம்பமாகும்போது பொலிஸார் மீதுதான் முதலில் தாக்குதல் நடத்தினார்கள். வடக்கில் தற்போது நடைபெறும் சம்பவங்கள் வெறும் ஆரம்பம் மட்டுமே. போகப் போக இன்னும் நடக்கும்.” – இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். கோப்பாய் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இரண்டு பொலிஸ் அலுவலர்கள் மீது கடந்த ஞாயிற்றுக்கிழமை வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. இவ்வாறானதொரு நிலையில், கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், …
Read More »கேப்பாப்பிலவு காணி விடுவிப்பு: அக்கறையோடு ஜனாதிபதி செயற்படுகிறார் என்கிறார் ஒஸ்டின் பெர்னாண்டோ!
முல்லைத்தீவு, கேப்பாப்பிலவு காணி விடுவிப்பு விடயம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அக்கறையோடு செயற்படுகின்றார் அவரின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். கேப்பாப்பிலவில் இராணுவம் வசமுள்ள மக்களின் காணிகளை ஒரு மாதத்துக்குள் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதிக்கு கடந்த வாரம் அனுப்பிய கடிதத்தில் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் குறிப்பிட்டிருந்தார். இந்தக் கடிதத்துக்கு ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ பதில் அனுப்பியுள்ளார். அதிலேயே அவர் மேற்கண்டவாறு …
Read More »காணி விடுவிப்பு: தீர்வு கிடைக்கும்வரை தொடர்ந்து பேசுவோம் என்கிறார் சம்பந்தன்!
“கேப்பாப்பிலவு காணி விடுவிப்பு விடயம் தொடர்பில் தீர்வொன்றைப் பெறும் முகமாக ஜனாதிபதி, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் இராணுவத் தளபதி ஆகியோருடனான கலந்துரையாடல்களை நாம் தொடர்ந்தும் மேற்கொள்ளுவோம்” என்று எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். மேற்படி காணி விடுவிப்பு விடயம் தொடர்பில் ஜனாதிபதியின் நிலைப்பாட்டைத் தெரிவித்து எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனுக்கு செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ கடிதம் அனுப்பியுள்ளார். இது தொடர்பில் வினவியபோதே இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு …
Read More »அமைச்சுப் பதவியை உடனடியாக இராஜிநாமா செய்க! – ரவியிடம் பந்துல வலியுறுத்து
அமைச்சர் ரவி கருணாநாயக்க உடனடியாக தனது அமைச்சுப் பதவியை இராஜிநாமா செய்யவேண்டும் என்று மஹிந்த அணியான பொது எதிரணி வலியுறுத்தியுள்ளது. கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொது எதிரணியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- “முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பெற்றுக்கொண்ட கடனை அடைப்பதாகக் கூறி இவர்கள் செய்த வேலை என்ன? அது பாரிய கொள்ளையாகும். வரலாற்றில் …
Read More »மனதில் வஞ்சத்தினை வைத்துக் கொண்டு நல்லிணக்கம் பேச முடியாது: நஸீர் அஹமட்
மக்களின் மனதில் வஞ்சத்தினை வைத்துக் கொண்டு நல்லிணக்கத்தினைப் பேச முடியாது என கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார். திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற தேசிய நல்லிணக்க நிகழ்ச்சித்திட்டம் தொடா்பான நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ”இன்னுமொரு இனத்தினை நசுக்கும் விரோத மனப்பான்மையைக் கொண்டிருக்கும் மக்களால் நல்லிணக்கத்தினை ஏற்படுத்த முடியாது. அதேவேளை ஒரு சிலரின் …
Read More »கருணாவின் மாற்று தமிழ் சக்தி கனவு பலிக்காது: முபீன்
தனியொரு மாற்று தமிழ் சக்தியாக உருவாகுவதற்கு முன்னாள் பிரதியமைச்சரான விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணா அம்மான் முயற்சிப்பது, நிறைவேறாத பகற்கனவாகுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான யு.எல்.எம்.என்.முபீன் தெரிவித்துள்ளார். தமிழர்களை முஸ்லிம்களிடம் இருந்து மீட்பதற்கான போராட்டத்தில் வடக்கு கிழக்குத் தமிழர்கள் இணைந்துகொள்ள வேண்டுமென, அண்மையில் கருணா அம்மான் கருத்துத் தெரிவித்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முபீன் வெளியிட்டுள்ள அறிக்கை …
Read More »தேர்தலை பிற்போடுவது கிழக்கின் சிறுபான்மையினருக்கு சாதகமாகிவிடும்: பசீர் சேகுதாவூத்
கிழக்கு மாகாண சபை தேர்தலை ஒத்திவைப்பதானது, பெரும்பாண்மை சமூகத்திற்கு சாதகமான நிலையை ஏற்படுத்துமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார். தேர்தல் ஒத்திவைக்கப்படும் காலங்களில் அதன் ஆட்சி சிங்களவர்களின் கைகளுக்குச் செல்வதால், அவர்கள் நினைத்ததை அக் காலப்பகுதிக்குள் நிறைவேற்றிக்கொள்வார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கிழக்கு மாகாண சபையின் ஆட்சிக்காலம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நிறைவடையவுள்ள நிலையில், அதற்கான தேர்தலை உடன் நடத்துமாறு வலியுறுத்தப்பட்டு …
Read More »பெற்றோலிய தொழிற்சங்க வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது!
ஜனாதிபதியுடன் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடல் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளமையை அடுத்து வேலை நிறுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக பெற்றோலிய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இதனை அடுத்து இன்று மேற்கொள்ளவிருந்த பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கையை மேற்கொள்ளாமல் இருக்க பெற்றோலிய தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன. இதேவேளை, தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டும் விடயங்கள் தொடர்பில் சீன நிறுவனத்துடன் கலந்தாலோசித்து குறித்த ஒப்பந்தத்தில் சேர்ப்பதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இதன்போது குறிப்பிட்டதாக அந்த சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.
Read More »