பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகி தொடர்ச்சியாக 40 வருட கால சேவையைப் பூர்த்திசெய்தமைக்காக வாழ்த்துத் தெரிவிக்கும்வகையில் நடைபெற்ற விசேட நாடாளுமன்ற அமர்வை பொது எதிரணியான மஹிந்த அணியும், ஜே.வி.பியும் புறக்கணித்தன. நாடாளுமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை முற்பகல் 10.30 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. சபாநாயகர் அறிவிப்பு முடிவடைந்த பின்னர், பிரதமருக்கு வாழ்த்துகளைத் தெரிவிக்கும் பிரேரணையை முன்வைத்து சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல உரையாற்றினார். …
Read More »ரவி பதவி விலகவேண்டுமென கபே அமைப்பும் வலியுறுத்து!
பிணைமுறி மோசடி விவகாரத்தில் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ள அமைச்சர் ரவி கருணாநாயக்க உடனடியாகத் தனது பதவியை இராஜிநாமா செய்து ஆணைக்குழுவின் விசாரணைகளுக்கு இடமளிக்க வேண்டுமென கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- “பிரச்சினை உருவாகியுள்ள இந்த வேளையில் அவர் தொடர்ந்தும் அமைச்சுப் பதவியில் இருப்பது விசாரணைகளுக்குப் பாதகமாக அமையும். ஜனாதிபதியின் தலைமையிலான இந்த அரசுக்கு வாக்களித்த 62 இலட்ச மக்களின் …
Read More »2050-ம் ஆண்டில் கண் பார்வையற்றோர் எண்ணிக்கை 11½ கோடியாக உயரும்: ஆய்வில் தகவல்
2050-ம் ஆண்டு சர்வதேச அளவில் கண் பார்வையற்றோரின் எண்ணிக்கை 11 கோடியே 50 லட்சம் ஆக அதிகரிக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. சர்வதேச அளவில் தற்போது 3 கோடியே 60 லட்சம் கண் பார்வையற்றோர் உள்ளனர். இந்த நிலையில் 2050-ம் ஆண்டில் அவர்களது எண்ணிக்கை 11 கோடியே 50 லட்சம் ஆக உயரும் அபாயம் உள்ளது. இங்கிலாந்தில் உள்ள ஏஞ்சிலியா ருக்சின் பல்கலைக் கழகத்தை சேர்ந்த நிபுணர்கள் சர்வதேச அளவில் …
Read More »விசா விதிகள் தளர்வு: புதிய குடியுரிமை சட்டத்தின் மூலம் படித்த இந்தியர்களுக்கு டிரம்ப் சலுகை
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ‘எச் 1-பி’ விசா மீதான கட்டுப்பாடுகளை மாற்றி அமைத்ததால், புதிய குடியுரிமை சட்டத்தின் மூலம் படித்த இந்தியர்களுக்கு சலுகைகள் கிடைக்கும். அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்ற பிறகு ‘எச்1பி’ விசாவில் அதிரடியாக மாற்றம் கொண்டுவந்தார். அதன் மூலம் அமெரிக்காவுக்கு பணிக்கு செல்வோர் பல கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இந்த நிலையில் ‘ரெய்ஸ்’ என்ற பெயரில் சீரமைக்கப்பட்ட அமெரிக்க புதிய குடியுரிமை சட்டம் …
Read More »யாழ். வன்முறைகளுக்கு வடக்கு மாகாண சபையும் பொறுப்பு! – தவராசா
யாழ்.நகரில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் அசம்பாவிதங்களுக்கு வடக்கு மாகாண சபையும் பொறுப்புக் கூற வேண்டும் என வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா அறிக்கை ஒன்றின் ஊடாக தெரிவித்துள்ளார். ஒரு சில நபர்களின் வன்முறைச் செயற்பாட்டினை வைத்துக் கொண்டு யாழ்ப்பாண மக்கள் வன்முறையை நோக்கிச் செல்கிறார்கள் என தெற்கில் பிரசாரம் முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். அதே போல் புனர்வாழ்வு பெற்ற ஏறத்தாழ பன்னீராயிரம் முன்னாள் விடுதலைப் புலிப் …
Read More »அரசாங்கத்தில் புயலை கிளப்பியுள்ள அமைச்சர் ரவி விவகாரம்!
மத்திய வங்கியின் முறிகள் விநியோகத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அர்ஜூன் அலோசியஸிற்கும் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கும் நெருங்கிய தொடர்புகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றமை, அரசாங்கத்தில் பாரிய சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது. இந்நிலையில், இப்பிரச்சினை தொடர்பாக ஜனாதிபதி மைத்திரியின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது. அமைச்சர் ரவியை பதவி நீக்குவது அல்லது உரிய நடவடிக்கை எடுப்பது தொடர்பாக, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சில உறுப்பினர்கள் ஜனாதிபதியுடன் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவ்வாறாறில்லாவிட்டால், அமைச்சருக்கெதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிக்க …
Read More »வவுனியாவில் மக்கள் குடியிருப்புக்களில் குரங்குகளின் அட்டகாசம்!
வவுனியா நகரப்பகுதியை அண்டியுள்ள மக்கள் குடியிருப்புக்களில் நுழையும் குரங்குகளால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிா்நோக்குவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். வவுனியா நகரை அண்மித்துள்ள கற்குழி, குட்செட்வீதி, வைரவபுளியங்குளம், உள்வட்ட வீதி, வவுனியா நகரம், குருமன்காடு உள்ளிட்ட பகுதிகளே குரங்குகளின் தொல்லைகளுக்கு ஆளாகியுள்ளன. குறித்த பகுதிகளுக்கு நாளாந்தம் வந்து செல்லும் குரங்குகள் அப்பகுதியில் உள்ள மக்களது வசிப்பிடங்களில் புகுந்து அவர்களது ஆடைகள், வீட்டு வளவில் உள்ள பொருட்கள், பயன்தரு மரங்களில் உள்ள …
Read More »மன்னாரில் சக்தி வாய்ந்த வெடி பொருட்கள் மீட்பு!
மன்னார் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாப்பாமோட்டை பிரதேச காட்டுப்பகுதியில் இருந்து இன்று (வெள்ளிக்கிழமை) காலை சக்தி வாய்ந்த வெடி பொருட்கள் சிலவற்றை பாதுகாப்புத்தரப்பினர் மீட்டுள்ளனர். அடம்பன் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் கிராம அலுவலகர் ஊடாக பாப்பாமோட்டை காட்டுப்பகுதியில் வெடிக்காத நிலையில் உள்ள வெடி பொருட்கள் தொடர்பில் மன்னார் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த நிலையில் மன்னார் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைவாக குறித்த வெடி பொருட்கள் …
Read More »சீன கடற்படையின் பாரிய மிதக்கும் மருத்துவமனை சிறிலங்கா வருகிறது
சீன கடற்படையின் மிக நவீனமான மருத்துவமனைக் கப்பலான, ஆர்க் பீ்ஸ் நல்லெண்ணப் பயணமாக நாளை மறுநாள் சிறிலங்காவுக்கு வரவுள்ளது. இந்தக் கப்பல் எதிர்வரும் 9ஆம் நாள் வரை கொழும்பு துறைமுகத்தில் தரித்து நிற்கும் என்று சீன தூதரகம் அறிவித்துள்ளது. எதிர்வரும் 8ஆம் நாள், இந்த மிதக்கும் மருத்துவமனையில் இலங்கையர்களுக்கு இலவச மருத்துவ உதவிகள் வழங்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்க் பீ்ஸ் கப்பல், சீனாவினால் கட்டப்பட்ட மிகப் பெரிய மருத்துவமனைக் கப்பல் என்பது …
Read More »அரசை வீழ்த்த மஹிந்த அணி சதித் திட்டம்! – சஜித் தெரிவிப்பு
“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டுவரும் சதி நடவடிக்கைகளை முறியடிப்பதற்காகவே எரிபொருள் விநியோகம் அத்தியாவசிய சேவையாக மாற்றப்பட்டுள்ளது” என்று அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். இது தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு அவர் மேலும் கூறியதாவது:- “நாம் படையினரை அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரமே பயன்படுத்துகிறோம். ஆனால், நாம் அவர்களைக் கூலித் தொழிலாளிகள்போல் பயன்படுத்துகிறோம் என்று பஸில் ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார். அவர்களின் ஆட்சியில் படையினர் எவ்வளவு கேவலமாக …
Read More »