சட்டை அணியாமல் வெற்று உடம்புடன் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் ஏரியில் மீன் பிடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவுகிறது. ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் (64). இவர் பன்திறமை கொண்டவர். பல்வேறு சாகச நிகழ்ச்சிகளில் ஈடுபடுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். சமீபத்தில் கடந்த 1-ந்தேதி முதல் 3-ந்தேதிவரை கடும் குளிர் நிறைந்த சைபீரியாவில் 3 நாள் விடுமுறையை கழித்தார். அப்போது தைவர் பகுதியில் உள்ள மலை ஏரியில் …
Read More »ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசப்பட்ட துக்கதினம்: ஜப்பானில் இன்று அனுசரிக்கப்பட்டது
இரண்டாம் உலகப் போரின்போது 1945-ம் ஆண்டு ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் அணுகுண்டு வீசப்பட்ட 72-ம் ஆண்டு துக்கதினம் இன்று ஜப்பானில் அனுசரிக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போரின்போது, உலகின் முதல் அணுகுண்டாக கருதப்படும் ‘லிட்டில் பாய்’ குண்டை ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா நகரின் மீது அமெரிக்கா 6-8-1945 அன்று வீசியது. இரும்பைக் கூட உருக வைக்கும் 4000 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் குண்டு வீசப்பட்ட இடத்தின் அருகிலிருந்த அத்தனையும் பஸ்பமாகின. சுமார், …
Read More »ரவிக்கு ஜனாதிபதி – பிரதமர் அழுத்தம்?
வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவை பதவி விலகுமாறு ஜனாதிபதி மைத்திரி மற்றும் பிரதமர் ரணில் ஆகியோர் அழுத்தம் கொடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிணை முறி விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அர்ஜூன் அலோசியஸூடன் ரவி கருணாநாயக்க தொடர்புகளை பேணி வந்துள்ளதாகவும், சில வரப்பிரசாதங்களை பெற்றுக்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. முறிகள் விநியோகம் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ரவி கருணாநாயக்கவிடம் …
Read More »கிழக்கு மாகாண சபையை தமிழ் மக்கள் கைப்பற்றவேண்டும்: கருணா
அனைத்து தமிழ் மக்களும் அணிதிரண்டு கிழக்கு மாகாண சபையைக் கைப்பற்றவேண்டும் என தமிழர் ஜக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் கருணா தெரிவித்தார். தமிழர் ஜக்கிய சுதந்திர முன்னணிக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் நேற்று (சனிக்கிழமை) மட்டக்களப்பு கல்லடியில் உள்ள கட்சித் தலைமையத்தில் இடம்பெற்றது. இதன் போது ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையிலேயே கருணா இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ”தமிழ் மக்கள் அரசியல் விழிப்படையவேண்டும். எங்களுடைய …
Read More »பளை பிரதேசக் காடுகளில் ஆபத்தான வெடிபொருட்கள்!
கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவிலுள்ள காடுகளில் ஆபத்தான வெடிபொருட்கள் காணப்படுவதாக வன வளப் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தங்களது பிரதேச எல்லைக்குட்பட்ட காடுகளில் பரிசோதனைக்காகச் சென்ற போதே அங்கு ஆபத்தான வெடிபொருட்கள் காணப்படுவதனை அவதானித்துள்ளனர். குறித்த பகுதிகளில் வெடிக்காத நிலையில் காணப்படும் வெடிபொருட்கள் மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் எவ்வேளையிலும் ஆபத்தை ஏற்படுத்தலாம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே உரிய தரப்பினர் இவற்றை அடையாளம் கண்டு, அவற்றை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் …
Read More »யுத்தம் முடிவடைந்தும் மக்கள் பின்தங்கிய நிலையிலேயே உள்ளனர்: மகேஸ்வரன்
மட்டு.மாவட்டத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் எவ்வித அபிருத்தியும் அடையாது இன்னமும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது என ஜக்கிய தேசிய கட்சி மட்டு.அமைப்பாளர் வி.மகேஸ்வரன் தெரிவித்தார். ஜக்கிய தேசிய கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட தலைமைக் காரியாலயம் கல்லடியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ”இந்த மாவட்டத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரதேசங்கள் எவ்வித அபிருத்தியும் அடையாது …
Read More »ஹஜ் யாத்திரிகர்கள் விடுமுறை பெறுவதில் இருந்த சிக்கலுக்கு தீர்வு: நஸீர் அஹமட்
கிழக்கு மாகாண ஆசிரியர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் ஹஜ் யாத்திரை செல்வதற்காக விடுமுறை பெறுவதில் இருந்த சிக்கலுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்தார். இது தொடர்பாக கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகமவுடன் தான் பிரத்தியேகமான பேச்சுவார்த்தை நடத்தியதன் பயனாக இந்த விவகாரத்திற்கு சுமுகமான தீர்வைக் காண ஆளுநர் உறுதியளித்துள்ளதாக முதலமைச்சர் மேலும் தெரிவித்தார். கிழக்கு மாகாண ஆசிரியர்கள் மற்றும் …
Read More »ஜனாதிபதியும் பிரதமரும் கூட்டாகச் செயற்படவேண்டும்! – சம்பந்தன் கோரிக்கை
“தேசிய இனப்பிரச்சினையும், பொருளாதாரப் பிரச்சினையும் ஒன்றோடொன்று தொடர்புபட்டுள்ளன. ஆகேவ, இவ்விரண்டு பிரச்சினைகளுக்கும் உரியவகையில் தீர்வுகண்டு நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக ஜனாதிபதியும், பிரதமரும் தொடர்ந்தும் இணைந்து செயற்படவேண்டும்.” – இவ்வாறு பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்தார். அத்துடன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை துணிச்சல்மிக்க அரசியல் தலைவரென பாராட்டிய அவர், தமிழ் மக்களின் சார்பாக வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டார். நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு …
Read More »மூவின மக்களுக்கும் பாகுபாடின்றி அரசியல் தீர்வு முன்வைக்கப்படும்! – ரணில் உறுதி
“தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களுக்குத் துளியளவேனும் பாகுபாடு காட்டாத வகையிலான அரசியல் தீர்வொன்றை இந்த நாடாளுமன்றத்துக்குள் அடையவேண்டும்” எனப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை அரசியல் வாழ்வில் 40 வருடங்களை நிறைவுசெய்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாழ்த்துகளைத் தெரிவிக்கும் பிரேரணை மீதான விவாதம் நடைபெற்றது. இந்தப் பிரேரணைக்கு நன்றி தெரிவித்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “எனது 40 வருடகால நாடாளுமன்ற …
Read More »புலிகளின் யோசனையை ஏற்றிருந்தால் 2005 இல் ஜனாதிபதியாகியிருப்பார் ரணில்! – ஹக்கீம் தெரிவிப்பு
விடுதலைப்புலிகளின் இடைக்கால அரசு யோசனையை ஏற்றிருந்தால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 2005ஆம் ஆண்டே ஜனாதிபதியாகியிருப்பார் என்றும், எனினும், நாட்டு நலனைக் கருத்தில்கொண்டு அத்திட்டத்தை அவர் நிராகரித்தார் என்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அரசியல் வாழ்வில் 40 வருடங்களை நிறைவுசெய்த பிரதமர் ரணிலுக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் மேலும் கூறியவை வருமாறு:- “1977 …
Read More »