செஞ்சோலைப் படுகொலையின் 11ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் எதிர்வரும் திங்கட்கிழமை (14-08-2016) இடம்பெறவுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் கஜேந்திரன் தெரிவித்துள்ளார். மேற்படி நிகழ்வுகள் வள்ளிபுனம், முல்லைத்தீவில் (தாக்குதலுக்கு உள்ளான செஞ்சோலை வளாக வீதி) இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில் செஞ்சோலை சிறுமிகள் காப்பகம் மீது கடந்த 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14ம் திகதியன்று ஸ்ரீலங்கா வான் படையினர் நடாத்திய குண்டுத் …
Read More »வவுனியா வளாகத்தின் சர்வதேச ஆய்வு மாநாடு
வவுனியா வளாகத்தின் சர்வதேச ஆய்வு மாநாடு நாளை (09.08.2017) நடைபெற உள்ளதாக வவுனியா வளாக முதல்வர் கலாநிதி த.மங்களேஸ்வரன் தெரிவித்தார். இன்று (செவ்வாய்க்கிழமை) வவுனியா வளாகத்தில் ஊடகவியலாளர்களுடன் நடைபெற்ற சந்திப்பின் போதே குறித்த ஆய்வு மாநாடு நாளை காலை 9.00 மணிக்கு பம்பைமடுவில் அமைந்துள்ள வியாபார கற்கைகள் பீடத்தில் இடம்பெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இதுபற்றி குறிப்பிடுகையில், நாளை சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி க.கோப்பெரும்தேவியின் ஏற்பாட்டில் சர்வதேச ஆய்வு …
Read More »சிறிலங்காவின் அடுத்த வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன?
சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சராக, திலக் மாரப்பன விரைவில் நியமிக்கப்படுவார் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க விரைவில் பதவி விலகுவார் என்றும், அதையடுத்து, திலக் மாரப்பன அந்தப் பதவிக்கு நியமிக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது. மத்திய வங்கி பிணை முறி விற்பனை முறைகேடு தொடர்பாக ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அவரை பதவி விலகுமாறு பல்வேறு தரப்புகளும் அழுத்தம் கொடுத்து வருகின்றன. …
Read More »யாழ்.குடாநாட்டில் தொடரும் கைதுவேட்டையை உடன் நிறுத்துங்கள்! – ஜனாதிபதி, பிரதமரிடம் கூட்டமைப்பு வலியுறுத்து
“யாழ்.குடாநாட்டில் இளைஞர்களைக் குறிவைத்து பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினரின் கைதுவேட்டை சில தினங்களாகத் தொடர்கின்றது. இதனை உடன் நிறுத்துவதற்கு ஜனாதிபதியும் பிரதமரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” – இவ்வாறு வலியுறுத்தினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன். “யாழ்ப்பாணத்தின் தற்போதைய நிலைவரங்கள் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் இவ்வாரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சு நடத்தும். அதன்போதும் இந்தக் கோரிக்கையை நாம் நேரில் விடுக்கவுள்ளோம்” எனவும் …
Read More »பரபரப்பான சுழ்நிலையில் இன்று கூடுகின்றது நாடாளுமன்றம்! – நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து ஆளும், எதிர்க்கட்சிகள் ஆலோசனை
வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையால் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறும் நாடாளுமன்ற அமர்விலும் அது குறித்து சூடான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாடாளுமன்றம் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடவுள்ளது. அதற்கு முன்னர் சபாநாயகர் தலைமையில் கட்சித் தலைவர்கள் கூட்டமும் இடம்பெறவுள்ளது. இது முக்கியத்துவமிக்க சந்திப்பாகக் கருதப்படுகின்றது. வழமையாக நாடாளுமன்றம் ஆரம்பமாவதற்கு …
Read More »வடக்கு அமைச்சரவை மாற்றத்தின்போது புளொட்டுக்குரிய பதவி யாருக்கு?
மாற்றியமைக்கப்படும் வடக்கு மாகாண அமைச்சரவையில் புளொட் அமைப்புக்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட்டால், அந்தக் கட்சி சார்பில் யாருக்கு அதனை வழங்குவது என்பதில் குழப்பம் தோன்றியுள்ளது. வடக்கு மாகாண சபையின் அமைச்சரவை விரைவில் மாற்றியமைக்கப்படும் என்றும், இதன்போது, புளொட்டுக்கு அமைச்சுப் பதவி வழங்கப்படும் என்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்திருந்தார். புளொட் அமைப்புக்கு அமைச்சுப் பதவி கிடைக்கப் பெற்றால் அந்தக் கட்சி சார்பில் யாரை நியமிப்பது என்பதில் குழப்பம் தோன்றியுள்ளது …
Read More »வடக்கு அமைச்சரவையில் அனந்தி, சர்வேஸ்வரனின் பதவிகள் நிரந்தரமாகும்!
வடக்கு மாகாண புனர்வாழ்வு, மகளிர் விவகாரம், கூட்டுறவு அமைச்சராக நியமிக்கப்பட்ட திருமதி அனந்தி சசிதரன் மற்றும் கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்ட க.சர்வேஸ்வரன் இருவருக்கும் பதவிகள் நிரந்தரமாக்கப்படும் என்று தெரிகின்றது. மூன்று மாதங்களுக்கு மட்டும் தற்காலிகமாகவே அவர்களுக்குப் பதவி வழங்கப்படுவதாக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அறிவித்திருந்தார். எனினும், மாகாண சபையின் எஞ்சிய காலப் பகுதிக்கும் அவர்கள் அமைச்சர்களாகத் தொடர்வார்கள் என்று கூறப்படுகின்றது. வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் …
Read More »விக்கிக்குக் கீழ் அமைச்சராக இருப்பதற்கு விரும்பவில்லை! – பதவி விலகிய சத்தியலிங்கம் தெரிவிப்பு
வடக்கு மாகாண சுகாதா அமைச்சர் ப.சத்தியலிங்கம் பதவி விலகியுள்ளார். அரசியல் உள்நோக்கத்துடனேயே அமைச்சரவையிலிருந்து தன்னை வெளியேற்ற வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எடுத்துள்ளார் என்பதைத் தன்னால் புரிந்துகொள்ள முடிவதால் அவருக்குக் கீழ் ஓர் அமைச்சராக இருக்க விரும்பவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். “கட்சியின் தீர்மானத்துக்கு கட்டுப்பட்டு நான் எனது பதவியிலிருந்து விலகுகின்றேன்” என்று தெரிவித்து வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு தனது பதவி விலகல் கடிதத்தை அவர் …
Read More »கமல்ஹாசனின் அரசு மீதான ஊழல் குறித்த விமர்சனத்தை நான் வரவேற்கிறேன்
அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பதால் தனது படங்களுக்கு வரிவிலக்கு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதாக தயாரிப்பாளரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
Read More »டாடா ஸ்டீல் நிர்வாக இயக்குநரின் ஆண்டு சம்பளம்
டாடா ஸ்டீல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் (இந்தியா மற்றும் தென் கிழக்கு ஆசியா) டி.வி. நரேந்திரனின் கடந்த நிதி ஆண்டு சம்பளம் ரூ.8.17 கோடியாக இருக்கிறது.
Read More »