Sunday , October 19 2025
Home / செய்திகள் (page 378)

செய்திகள்

News

அரசாங்கத்தின் செயற்பாடுகள் போதுமானதல்ல: சம்பந்தன்

காணாமல் போனோர் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கு, அரசாங்கம் மேற்கொண்டுள்ள முன்னெடுப்புக்கள் போதுமானதல்லவென எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஸ்கொட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளடங்கலாக, பிரித்தானிய அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு, எதிர்க்கட்சித் தலைவரை இன்று (புதன்கிழமை) சந்தித்தது. இதன்போதே, எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அத்தோடு, காணிகளை விடுவித்தல் மற்றும் புதிய அரசியல் யாப்பு உருவாக்கப் பணிகளும் மந்த கதியிலேயே செல்கின்றதென எதிர்க்கட்சித் தலைவர் …

Read More »

வடக்கு மாகாண தமிழரசுக் கட்சியினரை அவசர கூட்டத்துக்கு இன்று கொழும்புக்கு சம்பந்தன் அழைப்பு!

போரில் 150,000 மக்கள் கொல்லப்பட்டனர்: இரா சம்பந்தன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட வடக்கு மாகாண சபையில் அமைச்சரவை விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அந்த மாகாண சபையின் இலங்கைத் தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் 16 பேரையும் இன்று புதன்கிழமை மாலை 5 மணிக்கு கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நடைபெறும் அவசர கூட்டமொன்றில் பங்குபற்றுவதற்கு வருமாறு கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அழைத்துள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரான மாவை சேனாதிராஜா சார்பில் அவரது செயலாளர் இந்தக் கூட்டம் தொடர்பான …

Read More »

வவுனியாவில் கோர விபத்து! – ஒருவர் பலி; மூவர் படுகாயம்

வவுனியாவில் நேற்று இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மூவர் படுகாயமடைந்தனர். வவுனியா இ.போ.ச. சாலைக்கு முன்பாக பிற்பகல் 1.45 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. கொழும்பு விமானநிலையத்திலிருந்து வவுனியா நோக்கி வந்த ஹையேஸ் வாகனமும், கொழும்பு நோக்கிச் சென்ற ஹன்ரர் ரக வாகனமும் விபத்துக்குள்ளாகின. சுவிஸ் நாட்டைச் சேர்ந்த காந்தன் (வயது – 56) என்பவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இவர் ஹையேஸ் வாகனத்தைச் செலுத்தி வந்தார் என்று கூறப்பட்டது. …

Read More »

அமைச்சர் ரவிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதிக்கப்படுமா? இல்லையா? – சபாநாயகர் தீர்மானம் நாளை அறிவிப்பு

வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள முடியுமா அல்லது இல்லையா என்பது தொடர்பில் சபாநாயகர் கரு ஜயசூரிய தனது முடிவை நாளை வியாழக்கிழமை நாடாளுமன்றத்துக்கு அறிவிக்கவுள்ளார். இது விடயம் குறித்து சட்டமா அதிபரிடம் ஆலோசனை பெறப்பட்டே தீர்மானம் அறிவிக்கப்படும் என்று அவர் நேற்றுத் தெரிவித்தார். நாடாளுமன்றம் நேற்றுப் பிற்பகல் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. சபாநாயகர் அறிவிப்பு, பொதுமனுத் தாக்கல், வாய்மூல …

Read More »

ரவி குறித்து ஜனாதிபதியின் முடிவு இரண்டு வாரத்தில் வெளியாகும் என்கிறது சு.க.

Maithripala Sirisena

“சர்ச்சைக்குரிய பிணைமுறி மோசடி விவகாரம் மற்றும் சொகுசு வீடு தொடர்பில் விசாரணைகளில் சிக்கியுள்ள வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தொடர்பில்  இரண்டு வாரங்களில் தனது தீர்மானத்தை ஜனாதிபதி அறிவிப்பார்”  என்று விவசாய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன்  யாப்பா அபேவர்தன தெரிவித்தார். அரச விவசாய அபிவிருத்தி அமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- “பிணைமுறி மோசடி தொடர்பில் …

Read More »

பிணைமுறி மோசடிக்கான முழுப்பொறுப்பையும் ரணிலே ஏற்கவேண்டும்! – ஜே.வி.பியின் ரில்வின் சில்வா சுட்டிக்காட்டு 

இலங்கை மத்திய வங்கியின் பாரிய பிணைமுறி மோசடியில் சம்பந்தப்பட்டுள்ள ரவி கருணாநாயக்க உடனடியாகப் பதவி விலகுவதுடன் இந்த மோசடிக்கான முழுப்பொறுப்பையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே ஏற்கவேண்டுமென மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) பிரதம செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளவை வருமாறு:- “பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் மத்திய வஙகியின் ஆளுநர் பதவியை ரணில் விக்கிரமசிங்க தனது உயிர்த் தோழனான அர்ஜுன் மகேந்திரனுக்கு பெற்றுக்கொடுத்தார். அதன் …

Read More »

செப்டம்பரில் உலகம் அழிந்து விடும் : பிரபல ஆராய்ச்சியாளர் பரபரப்புத் தகவல்

அமெரிக்காவை சேர்ந்த டேவிட் மேடி (David Meade) என்ற விஞ்ஞான ஆராய்ச்சியாளர் பூமியில் மனித இனம் சந்திக்கும் கடைசி மாதம் ஓகஸ்ட் எனவும் செப்டம்பர் மாதத்தில் உலகம் அழிந்துவிடும் பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளார். பூமியில் இடம்பெறும் நிகழ்வுகளை வைத்து எதிர்காலத்தில் இடம்பெறப்போகும் சம்பவங்களை கணிப்பதில் வல்லவரான இவர் சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வில் ஒகஸ்ட் மாதம்தான் மனிதர்களின் கடைசி மாதம் எனவும், செப்டம்பர் மாதம் உலகம் அழிந்து விடும் எனவும் கணித்துள்ளார். …

Read More »

ஆளும்கட்சி தலைவர் பதவியில் இருந்து நவாஸ் ஷெரிப் நீக்கம் – தேர்தல் கமிஷன் உத்தரவு

ஊழல் வழக்கில் பதவி இழந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் ஆளும் ஆளும்கட்சி தலைவர் பதவியில் இருந்தும் நீக்குமாறு அந்நாட்டின் தலைமை தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தானில் பிரதமர் நவாஸ் ஷெரிப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது எழுந்துள்ள ‘பனாமா கேட்’ ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து சிறப்பு கூட்டு புலனாய்வுக்குழு அமைத்து விசாரணை நடத்த கடந்த மே மாதம் பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, பாகிஸ்தான் மத்திய புலனாய்வு அமைப்பான எப்.ஐ.ஏ.யின் …

Read More »

கென்யாவில் ஜனாதிபதி தேர்தல்: வன்முறை அச்சத்துக்கு மத்தியில் இன்று வாக்குப்பதிவு

கென்யாவில் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில் ஜனாதிபதியின் பதவிக்காலம் நிறைவடைய உள்ளதால், புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் தற்போதைய ஜனாதிபதியான உஹூரு கென்யாட்டா (55), மீண்டும் ஜனாதிபதி ஆகும் பொருட்டு களமிறங்கியுள்ளார். ஜூப்ளி கட்சியின் தலைவரான அவரை எதிர்த்து முன்னாள் பிரதமர் ரைலா …

Read More »

வித்தியா கொலை விவகாரம்: இரு அரசியல்வாதிகளிடம் வாக்குமூலம்!

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியாக கருதப்படும் சுவிஸ்குமார் தப்பிச்செல்ல உதவியமை தொடர்பாக, இரு அரசியல்வாதிகளிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ளதாக அரச சட்டத்தரணி நாகரட்னம் நிசாந்த் தெரிவித்துள்ளார். யாழில் கைதுசெய்யப்பட்ட சுவிஸ்குமார், கொழும்பிற்கு தப்பிச்சென்றமை தொடர்பான வழக்கு, யாழ். ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆஜராகிய அரச சட்டத்தரணி நாகரட்னம் நிசாந்த், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் …

Read More »