விழுப்புரம் சென்ற, முதல்வர் பழனிசாமிக்கு, வழிநெடுகிலும், கட்சியினர் சிறப்பான வரவேற்பு அளித்தது, தினகரன் அணியினரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
Read More »தாய் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சொந்த தம்பியை சுட்டுக்கொன்ற 10 வயது சிறுவன்
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள மேற்கு மிப்ளின் நகரில் வசிக்கும் பெண்மணி தனது பாதுகாப்புக்காக உரிய அனுமதியுடன் துப்பாக்கி வைத்திருந்திருக்கிறார். நேற்று காலை அந்த பெண்ணின் இரு மகன்களும் வீட்டில் தனியாக இருந்துள்ளனர். அப்போது, 10 வயதான மூத்த மகன் தாய் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து தனது 6 வயது தம்பியின் தலையில் சுட்டுள்ளான். இதனையடுத்து, தனது தாய்க்கு போன் செய்து தம்பியை சுட்ட விவகாரத்தை கூறியுள்ளான். ரத்த வெள்ளத்தில் …
Read More »வித்தியா கொலை வழக்கு: விஜயகலாவிடம் விசாரணை
யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியா கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான சுவிஸ்குமாருக்கு உதவியதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டில், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனிடம் வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டுள்ளது. ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பிரகாரம், குற்றப்புலனாய்வு பிரிவினரால் நேற்று (புதன்கிழமை) மாலை பல மணிநேரங்கள் விஜயகலாவிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. குறித்த விசாரணை அறிக்கை, எதிர்வரும் 22ஆம் திகதி நடைபெறவுள்ள அடுத்த வழக்கு விசாரணையின் போது, ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும். மாணவி வித்தியா கொலையுண்ட …
Read More »தமிழ்நாட்டு போராட்டங்களுக்கு அஞ்சப்போவதில்லை: மஹிந்த அமரவீர
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறும் தமிழக மீனவர்களையும் தடுத்து வைக்கப்படும் படகுகளையும் விடுவிக்குமாறு தமிழ் நாட்டில் எவ்வித போராட்டங்கள் நடத்தப்பட்டாலும், அரசாங்கம் தனது கொள்கையிலிருந்து மாறுபடாதென மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். நேற்றைய (புதன்கிழமை) நாடாளுமன்ற அமர்விலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகளை கையாண்டு தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொள்வதால், கடல் வளம் பாதிக்கப்படுவதை அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார். அத்தோடு, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட …
Read More »அரசியல் சாசனத்தில் அடிப்படை கோரிக்கைகள் நிராகரிப்பு: சுரேஸ்
உத்தேச அரசியல் சாசனத்தில் தமிழ் மக்களின் அடிப்படை கோரிக்கைகள் பல நிராகரிக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரித்துள்ளார். வடக்கு கிழக்கு இணைப்பு மற்றும் சமஷ்டி கோரிக்கை என்பன நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு எதிராகவே முதலமைச்சர் விக்னேஸ்வரன் குரல்கொடுத்து வருகின்றார் என அவர் மேலும் தெரிவித்தார். யாழில் நேற்று (புதன்கிழமை) மாலை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான சந்தர்ப்பத்தில், வடக்கு …
Read More »கொக்குவில் வாள்வெட்டு – மற்றொருவரும் கைது
கொக்குவிலில் இரண்டு சிறிலங்கா காவல்துறையினர் மீது வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்ட குழுவைச் சேர்ந்த மற்றொருவரையும் நேற்று கைது செய்திருப்பதாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது. தெல்லிப்பழையைச் சேர்ந்த சந்திரநாதன் ரஜிதரன் என்பவரே பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையிலேயே, இவர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இவருடன் சேர்த்து, கொக்குவில் வாள்வெட்டுடன் தொடர்புபட்டிருந்த 11 பேரை இதுவரை கைது செய்திருப்பதாக சிறிலங்கா காவல்துறையினர் …
Read More »நைஜீரியா: 30 மீனவர்களை கொன்று போகோ ஹராம் தீவிரவாதிகள் அட்டூழியம்
நைஜீரீயா நாட்டில் ஆதிக்கம் செலுத்தி வரும் போகோ ஹராம் தீவிரவாதிகள் 30-க்கும் மேற்பட்ட மீனவர்களை சுட்டுக்கொன்றுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. கிருஸ்துவர்களும், முஸ்லிம்களும் சம அளவில் வாழ்ந்து வரும் நைஜீரியா நாட்டில் இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்று போக்கோ ஹரம் அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் ஆயுதமேந்திய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அங்குள்ள கிராமங்களுக்குள் கும்பலாக நுழையும் இவர்கள், அங்கு வசிக்கும் மக்களை ஈவிரக்கமின்றி சுட்டுக் கொன்று …
Read More »ராணுவ பயிற்சி எதிரொலி: அமெரிக்க தீவு மீது ஏவுகணை வீச வடகொரியா திட்டம்
அமெரிக்கா ராணுவ பயிற்சி மேற்கொள்ளும் குயாம் தீவு மீது நீண்ட தூரம் சென்று தாக்கும் க்வாசாங்-12 ஏவுகணையை வீசி தாக்க வடகொரியா திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. சமீப காலமாக வடகொரியா 5 தடவை ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது. ஜூலையில் 2 முறை கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை பரிசோதித்துள்ளது. அமெரிக்காவை குறிவைத்து இந்த சோதனை நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அமெரிக்காவின் தூண்டுதலின் பேரில் ஐ.நா. சபை பொருளாதார தடை …
Read More »மட்டக்களப்பில் மணல் அகழ்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்!
மணல் அகழ்வைக் கண்டித்தும், வனப் பகுதிகளில் மரம் வெட்டுவதை தடுக்குமாறு கோரியும் மட்டக்களப்பு – வேப்பவெட்டுவான் பகுதியில் ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது. குறித்த போராட்டம் நேற்று (செவ்வாய்க்கிழமை) இலுப்பையடிச்சேனை, வேப்பவெட்டுவான் மற்றும் பாலர்சேனை கிராம அபிவிருத்திச் சங்கங்களின் ஏற்பாட்டில் நடைபெற்றன. இது தொடர்பில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில், எமது பிரதேசத்தில் 45 பேருக்கு மணல் அகழ்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனை 9 மணல் வியாபாரிகள் நடத்துகின்றனர். நாங்கள் வறுமையில் வாடும் …
Read More »கடற்படையினர் வெளியேற வேண்டும்: மீனவர்கள்
தமது பூர்வீக பூமியான இரணைதீவை ஆக்கிரமித்து தங்கள் வீடுகளில் நிலைகொண்டுள்ள கடற்படையினர், அங்கிருந்து வெளியேறி அரச காணிகளுக்கு செல்லவேண்டுமென இரணைதீவு மக்கள் குறிப்பிடுகின்றனர். அருகிலுள்ள அரச காணிகளில் கடற்படையினர் குடியிருப்பதில் தமக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லையென்றும், தம்மை தமது சொந்த நிலத்தில் தொழில் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் இரணைதீவைச் சேர்ந்த அமிர்தநாதன் அந்தோனி என்ற மீனவர் குறிப்பிட்டுள்ளர். கொழும்பில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் பின்னர் நடத்தப்பட்ட செய்தியாளர் …
Read More »