வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் சற்றுமுன் குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகியுள்ளார். பிரபல ரக்பி வீரர் வஸீம் தாஜூதீனின் கொலை தொடர்பான விசாரணைக்காகவே அவர் அழைக்கப்பட்டுள்ளார். மேலும், நிதி மோசடி குறித்த விசாரணைக்காக மஹிந்தவின் மகன் ரோஹித்த, சற்றுமுன் நிதிக்குற்ற தடுப்புப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார். மஹிந்த குடும்பத்திடம் இன்று புலனாய்வுப் பிரிவு விசாரணை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு எதிரான விசாரணைகளை தீவிரப்படுத்துவதற்கு அரசாங்கம் …
Read More »எல்லையில் நிலவும் அசாதாரண சூழல்
இந்தியா – ரஷ்யா நாடுகளின் முப்படைகள் இணைந்து அக்டோபர் மாதம் மாபெரும் போர் பயிற்சியில் ஈடுபடுகின்றன. இந்தியா முதல் முறையாக அண்டை நாட்டுடன் இணைந்து முப்படைகளின் போர் பயிற்சிகளை ரஷ்யாவில் மேற்கொள்ள உள்ளது. ரஷ்யாவுடன் இணைந்து இந்திரா என்ற பெயரில் வரும் அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை மாபெரும் போர் பயிற்சியில் ஈடுபடவுள்ளது. இந்த கூட்டுப் பயிற்சியில் இரு நாடுகளின் தரைப்படை, …
Read More »தினகரன் நிதானத்தை இழந்து கருத்து தெரிவிக்க கூடாது
தமிழக அரசை கவிழ்க்க நினைப்பது பெரும் துரோகம் எனக் கூறியுள்ள அமைச்சர் ஜெயக்குமார், தினகரன் எப்போதும் நிதானத்தை இழந்து கருத்து தெரிவிக்க கூடாது என தெரிவித்துள்ளார். சென்னை பட்டினப்பாக்கத்தில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “அரசை கவிழ்க்க நினைப்பது பெரும் துரோகம் அதை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள். நிதானத்தை இழந்து கருத்து தெரிவிக்கக் கூடாது. எந்த சூழ்நிலையிலும் டிடிவி தினகரன் நிதானத்தை இழந்துவிடக்கூடாது. தினகரனின் குடும்ப …
Read More »வடகொரியாவுடன் இறக்குமதியை நிறுத்திக் கொள்ளும் சீனா
வடகொரியாவுடன் இறக்குமதி செய்த பொருட்களை செப்டம்பர் 5-ம் தேதியுடன் நிறுத்திக் கொள்ள இருப்பதாக சீனா கூறியுள்ளது. வடகொரியாவுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த புதிய பொருளாதாரத் தடைக்கும் ஐ. நா பாதுகாப்பு சபையிலுள்ள 15 நாடுகள் ஒப்புதல் வழங்கியது. இதனைத் தொடர்ந்து வடகொரியாவுடனான இறக்குமதியை நிறுத்திக் கொள்ள இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது. இதுகுறித்து சீனா தரப்பில், “ஐக்கிய நாடுகளின் தடையை மீறி அணுஆயுத ஏவுகணை சோதனைகளை மேற்கொண்ட வடகொரியாவுடனான இறக்குமதியை …
Read More »கடும் எதிர்ப்பையும் மீறி வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை
வடகொரியா தொடர்ந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த ஜுலை மாதத்தில் மட்டும் இரண்டு முறை ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டுள்ளது. இதனால் வடகொரியா இந்த மாதமும் சோதனை நடத்தினால் வியப்பதற்கில்லை என்று அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏ-வின் இயக்குநர் மைக் போம்போ கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து பேசிய அவர், அமெரிக்க அதிபர் டிரம்ப் போருக்கு தயாராக இருப்பதாக கூறியதால், வடகொரியா ஆகஸ்ட் மத்தியில் குவாம் …
Read More »ஆல்கஹாலை உற்பத்தி செய்யும் கோல்டன் பிஷ்
லிவர்பூல், ஒஸ்லோ பல்கலைக்கழகத்தின் தலைமையிலான ஆராய்ச்சி குழு நடத்திய ஆய்வில் தங்க மீன்கள் மற்றும் க்ருஷியன் கார்ப் என்ற மீன்களின் 100 மில்லி லிட்டர் இரத்தத்தில் 50 மில்லி கிராம் அளவுக்கு ஆல்கஹாலை உற்பத்தி செய்வதைக் கண்டறிந்துள்ளனர். பொதுவாக மீன்கள் நீரில் கரைந்துள்ள ஆக்ஸிஜனை சுவாசித்து உயிர் வாழ்கின்றன. ஆக்ஸிஜன் இல்லையென்றால் இறந்துவிடும். ஆனால் ஆக்ஸிஜன் இல்லாத சூழலிலும் மீன்கள் உயிர் வாழும் திறன் உடையது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்காகவே …
Read More »எடப்பாடி முதலமைச்சரானது ஒரு விபத்து
எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றோர் அமர்ந்திருந்த முதலமைச்சர் பதவியில், எடப்பாடி பழனிசாமி அமர்ந்திருப்பது ஒரு விபத்து என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். பதவி இருக்கும் காரணத்தால், சிலர் ஆடுவதாக கூறிய அவர், அவர்கள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவார்கள் என்றும் கூறியுள்ளார். அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளரான டிடிவி தினகரன் தலைமையில், மதுரையில் இன்று எம்ஜிஆர் நூற்றாண்டு விழா மதுரையில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு மதுரையில் டிடிவி தினகரன் செய்தியாளர்களைச் …
Read More »இட்லி மாவுக்கு ஜிஎஸ்டி வரி குறைக்க கோரிக்கை
பாக்கெட் செய்யப்பட்ட இட்லி, தோசை மாவுக்கான ஜிஎஸ்டி குறைக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இட்லி மாவு 18 சதவிகித வரி பிரிவில் வரும் நிலையில், இதை 12 சதவிகித பிரிவில் கொண்டு வர ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. வறுகடலைக்கான ஜிஎஸ்டி வரியை 12ல் இருந்து 5 சதவிகிதமாக குறைக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதோடு சாம்பிராணி, களிமண் சிலைகள், பிரார்த்தனை மெத்தை ஆகியவற்றுக்கான வரியையும் குறைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் எஸ்யுவி …
Read More »சசிகலா நினைத்திருந்தால் டிசம்பர் 5ம் தேதியே முதல்வராகி இருப்பார்
மதுரை மாவட்டம் மேலூரில் அதிமுக அம்மா அணி சார்பில் டிடிவி தினகரன் தலைமையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தங்க தமிழ்ச்செல்வன், செந்தில்பாலாஜி உள்ளிட்ட 14 எம்எல்ஏக்களும், நவநீதகிருஷ்ணன் உள்ளிட்ட 5 எம்பிகளும் பங்கேற்றனர். இந்த விழாவில் பேசிய டிடிவி தினகரன், 1977ஆம் ஆண்டு ஊழல் குற்றச்சாட்டால் கருணாநிதியால் எம்ஜிஆர் கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டார். ஆனால் அதன்பிறகு மக்கள் கருணாநிதியை ஒதுக்கி வைத்தனர். ஏழை எளிய …
Read More »எம்எல்ஏக்களை ஒளித்து வைப்பவர்கள் ஒழிக்கப்படுவார்கள்
எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவிற்கு வரத்தயாராக இருந்த எம்எல்ஏக்களை கடத்திச் சென்று ஒளித்து வைத்தவர்கள் ஒழிக்கப்படுவார்கள் என அம்மா அணியின் துணைப்பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டி உள்ளார். மதுரை மாவட்டம் மேலூரில் அதிமுக அம்மா அணி சார்பில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய டிடிவி தினகரன் ‘இது நமது ஆட்சி. இந்த ஆட்சிக்கு எந்தக் காரணத்தைக் கொண்டும் பங்கம் வராது. ஆட்சி செய்பவர்களுக்கு மடியிலே கணம் உள்ளது. ராணுவ …
Read More »