முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மூன்றாவது மகனான ரோஹித ராஜபக்ஷவிடம் பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு (எவ்.சி.ஐ.டி.) நேற்று 6 மணி நேரம் விசாரணை நடத்தியது. சீனாவின் உதவியுடன் ஏவப்பட்ட சுப்ரீம் செட் 1 செய்மதி விவகாரத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி பற்றி வாக்குமூலம் பெறுவதற்காகவே அவர் அழைக்கப்பட்டிருந்தார். அவருக்கு ஆதரவு வழங்கும் வகையில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவும் எவ்.சி.ஐ.டி வளாகத்துக்குச் சென்றிருந்தார். முன்னாள் எம்.பிக்களான …
Read More »நெடுவாசல் மக்கள் சுதந்திர தினத்தில் உண்ணாவிரதம் ?
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, நெடுவாசல் பகுதி மக்கள் 126வது நாளாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் புதுக்கோட்டை, தஞ்சை உள்ளிட்ட டெல்டா பகுதியில் எரிவாயு எடுக்க ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதைத்தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள நெடுவாசல், நல்லாண்டார்கொல்லை, வாணக்கன்காடு, கோட்டைக்காடு உள்ளிட்ட கிராமங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், சுதந்திர தினமான …
Read More »நல்லாட்சி அரசுக்கு அழுத்தம் கொடுத்து கொழும்பில் இன்று மாபெரும் போராட்டம்!
“நல்லாட்சி அரசு அமையப்பெற்று இரண்டு வருடங்கள் கடந்துள்ள நிலையில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. அதனை நிறைவேற்ற உடனடியாக நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.” – இவ்வாறு அரசை வலியுறுத்தி கொழும்பு விகாரமாதேவி பூங்காவுக்கு முன்னால் இன்று மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 2015ஆம் ஆண்டு ஆட்சிமாற்றத்துக்காக பொது வேட்பாளராக நிறுத்தப்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கைகோத்து நாடு தழுவிய ரீதியில் சோபித தேரர் தலைமையிலான சிவில் அமைப்புகள் பிரசாரத்தை மேற்கொண்டன. அந்தச் சிவில் …
Read More »சீனாவின் அடாவடி வர்த்தகம் தொடர்பாக விசாரணை நடத்த டொனால்ட் டிரம்ப் அதிரடி உத்தரவு
அமெரிக்காவின் அறிவுசார் சொத்துரிமை சட்டத்தை மீறியவகையில் சீனா நடத்திவரும் ’டூப்ளிகேட்’ மற்றும் ’கோல்மால்’ வர்த்தக நடைமுறைகள் தொடர்பாக விசாரணை நடத்துமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகளின் பலத்தை வைத்து அமெரிக்காவை மிரட்டிவரும் வட கொரியாவை கண்டிக்க தவறிய சீனா, வட கொரியாவின் போக்குக்கு ஆதரவு தெரிவித்து வருவது அமெரிக்க அரசுக்கு அதிருப்தியையும் எரிச்சலையும் ஏற்படுத்தியுள்ளது. வடகொரியாவுக்கு ஆதரவாக செயல்பட்டுவரும் சீனாவை தனது கைப்பிடிக்குள் …
Read More »வெள்ளத்தால் சீர்குலைந்த நேபாளத்துக்கு 10 லட்சம் டாலர் நிதியுதவி செய்வதாக சீனா அறிவிப்பு
மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் சீர்குலைந்துள்ள நேபாள நாட்டுக்கு 10 லட்சம் அமெரிக்க டாலர்கள் நிதியுதவி செய்ய சீனா முன்வந்துள்ளது. நேபாள நாட்டில் கடந்த வெள்ளிக்கிழமையில் இருந்து தொடர்ந்து மழை பெய்து வருகிறது, மழையினால் 27 மாவட்டங்கள் வெள்ளக்காடாக காணப்படுகின்றன. ரப்தி மற்றும் புதிரப்தி ஆறுகளில் வெள்ளநீர் கரை புரண்டு ஓடுகிறது. கரை கடந்து வெளியேறிய வெள்ளநீர் அரித்துச் சென்றதால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால், தாழ்வான பகுதிகளில் …
Read More »மூன்று மணித்தியாலயங்கள் சிராந்தியிடம் துருவி துருவி விசாரணை
பிரபல ரக்பி வீரர் வஸீம் தாஜூதீனின் கொலை தொடர்பான வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் சிராந்தி ராஜபக்ஷ குற்றப்புலனாய்வு பிரிவில் இன்று முன்னிலையாகி இருந்தார். இன்று காலை 11 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை விசாரணை நடைபெற்றுள்ளது. சுமார் மூன்று மணித்தியாலயம் நடைபெற்ற இந்த விசாரணையின் போது வஸீம் தாஜூதீனின் கொலை தொடர்பான பல்வேறு கேள்விகள் குற்றப்புலனாய்வு பிரிவில் தொடுக்கப்பட்டதாகவும் அதற்கு அவர் பதில் …
Read More »இந்தியாவின் 71ஆவது சுதந்திர தின நிகழ்வு
இந்தியாவின் 71ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் இலங்கைக்கான இந்திய தூதுவர் தரஞ்ஜித் சிங் சந்து தலைமையில் நேற்று கொழும்பில் அமைந்துள்ள இந்திய தூதுவரின் இல்லத்தில் நடைபெற்றது.
Read More »தமிழ் மக்களின் காணிகளை முஸ்லிம் மக்கள் அபகரிக்கின்றனர்: சுமணரத்ன தேரர்
தமிழ் மக்களுடைய காணிகளை முஸ்லிம் அமைப்புக்கள் அத்துமீறி கைப்பற்றுவதாகவும் அதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட சிங்கள தமிழ் இன விழிப்புணர்வுக்கான அமைப்பு தொடர்பான ஊடகவியலாளர் மகாநாடு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மங்களராமய விகாரையில் இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். வாழைச்சேனை முறாவோடை சக்தி வித்தியாலயத்தின் விளையாட்டு …
Read More »தமிழர்கள் தொடர்ந்தும் இன சுத்திகரிப்புக்கு உள்ளாக்கப்படுகின்றனர்: தர்மலிங்கம் சுரேஸ்
யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் தமிழர்கள் கலாச்சார, மொழி, பொருளாதார ரீதியில் சுரண்டப்படுவதாகவும் நில அபகரிப்பின் மூலம் தமிழ் இனத்தின் மீதான இன சுத்திகரிப்பு தொடர்ந்தும் இடம்பெற்றுவருகின்றது என்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டு மாவட்ட இணைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்துள்ளார். செஞ்சோலை படுகொலை நீதிகோரலும் 11ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வும் மட்டக்களப்பு தாண்டவன்வெளி கூட்டுறவ சங்க மண்டபத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே …
Read More »நம்பிக்கையில்லா பிரேரணைக்கு மகாநாயக்கர்கள் எதிர்ப்பு!
நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு, பௌத்த உயர்பீட மகாநாயக்கர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அரசாங்கத்தின் செயற்பாடுகளை விமர்சிப்பதோடு, கட்சியின் கொள்கைகளுக்கு எதிராக செயற்படுவதாக குறிப்பிட்டு, விஜயதாசவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டுவரும் முனைப்பில் ஐ.தே.க.வின் பின்வரிசை உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையிலேயே, இதற்கு மகாநாயக்கர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அமைச்சர் விஜயதாச தொடர்பில் கட்சிக்குள் அண்மைய காலமாக பாரிய சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், விஜயதாசவை வெளியேற்றுவது ஏனைய அணிகளுக்கு சாதகமாக …
Read More »