முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சம்மாந்துறைப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான ஏ.எம்.நௌசாத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்துகொள்ளுமாறு அக்கட்சியின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் வேண்டுகோள் விடுத்துள்ளார் என்று நம்பகரமாகத் தெரியவருகின்றது. சம்மாந்துறைப் பிரதேசத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கான ஆதரவு மிகவும் பின்னடைந்து காணப்படும் நிலையில் எதிர்வரும் தேர்தல்களை எதிர்நோக்கும் வகையில் முன்னாள் எம்.பி. நௌசாத்தை கட்சியில் இணைப்பதற்கு அமைச்சர் ஹக்கீம் விரும்பியுள்ளார். அந்தவகையில் ஏ.எம்.நௌசாத்துடன் மு.காவினர் பேச்சில …
Read More »சம்பந்தனுடன் கைகோக்க மஹிந்த தரப்பினர் ஆர்வம்! – நாமல் ஊடாக சமிக்ஞை
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் அதன் தலைவர் இரா.சம்பந்தனுடனும் நெருங்கிய அரசியல் தொடர்பாடல்களை மேற்கொள்வதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விரும்புகிறார் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன. அதன் ஒரு வெளிப்பாடாக சம்பந்தனின் கருத்தை வரவேற்கும் டுவிட்டர் செய்தி ஒன்று மஹிந்த ராஜபக்ஷவின் மகனான நாமல் எம்.பியினால் தமிழில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் கொழும்பில் ஒரு நூல் வெளியீட்டு விழாவில் பங்குபற்றிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் …
Read More »உள்ளூராட்சி தேர்தல் தாமதமானது தனது தவறல்ல என்கிறார் முஸ்தபா! – நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கும் அஞ்சவில்லையாம்
உள்ளூராட்சி சபைத் தேர்தல் தாமதமாவதற்கு தானே காரணமென ஒருசில தரப்புகளிலிருந்து வெளிவரும் குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், அத்தேர்தலைத் தாமதிக்கவேண்டுமென்ற நோக்கமோ நிர்ப்பந்தமோ தனக்குக் கிடையாது எனவும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு அவர் மேலும் கூறியுள்ளதாவது:- “தேர்தல் தாமதமாவதற்குத் நானே காரணம் என்பதால் எனக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றைக் கொண்டுவர ஒருசிலர் முயற்சிசெய்து வருகின்றபோதிலும் …
Read More »148 மில்லியன் ரூபா கிடைத்தால் இராணுவக்கட்டுப்பாட்டில் உள்ள காணி விடுவிக்கப்படும்
முல்லைத்தீவு வில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 111 ஏக்கர் காணி விரையில் விடுவிக்கப்பட இருப்பதாக இராணுவப்பேச்சாளர் பிரிகேடியர் ரொசான் செனவிரத்ன தெரிவித்தார். முல்லைத்தீவிலுள்ள இராணுவத்தின் தலைமையகம் உள்ளிட்ட பகுதிகளை வேறு இடத்தில் அமைப்பதற்கு புனர்வாழ்வு ,மீள்குடியேற்றம், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் ரி.என்.சுவாமிநாதன் வழங்குவதாக கூறிய 148 மில்லியன் ரூபா கிடைத்தபின்னர் இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார். நேற்றைய தினம் கிளிநொச்சியில் 38 …
Read More »பிரச்சினைகள் தீர இந்தியா-சீனா நேரடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: அமெரிக்கா வலியுறுத்தல்
‘பிரச்சினைகள் தீர இந்தியாவும், சீனாவும் நேரடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்’ என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. இந்தியா-சீனா இடையே எல்லை பிரச்சினை இருந்து வருகிறது. சிக்கிம் எல்லையில் டோக்லாம் பகுதியில் சீனராணுவம் ரோடுபோட முயன்றது. அதை இந்தியா தடுத்து நிறுத்தியது. அதை தொடர்ந்து இருநாடுகளும் அங்கு தங்களது ராணுவத்தை நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் அங்கு கடந்த 50 நாட்களாக பதட்டம் நிலவுகிறது. இந்த நிலையில் காஷ்மீரில் லடாக் பகுதியில் புகழ் பெற்ற …
Read More »10000 முட்டைகளால் உருவான ராட்சத ஆம்லெட் – பெல்ஜியம் விழாவில் மக்கள் கொண்டாட்டம்
பெல்ஜியம் ஆண்டு விழாவில் மக்கள் 10000 முட்டைகளை கொண்டு ராட்சத ஆம்லேட் செய்து பகிர்ந்து உண்டது அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. பெல்ஜியம் நாட்டில் ஆண்டுதோறும் வசந்த காலத்தில் ஆண்டு விழா கொண்டாடப்படும். இந்த விழாவில் மக்கள் வித்தியாசமாக ஏதாவது செய்து கொண்டாடுவர். இந்த ஆண்டு பெல்ஜியத்தில் உள்ள மால்மேடி கிராமத்தில் உள்ள மக்கள் வித்தியாசமான முயற்சியில் ஈடுபட்டனர். அவர்கள் ராட்சத அளவில் ஆம்லெட் செய்து அதனை அனைவருக்கும் பகிர்ந்து வழங்க …
Read More »கிழக்கு மாகாணசபையை கலைத்து தேர்தலை நடத்த வேண்டும்: முஹம்மட் நஸீர்
கிழக்கு மாகாணசபையை அதன் காலம் முடிந்ததும் கலைத்து தேர்தலை நடத்த வேண்டும் என கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் தெரிவித்தார். தோப்பூர் பிரதேசத்தில் நேற்றையதினம் (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஆயுர்வேத மத்திய மருந்தகத்தின் திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “கிழக்கு மாகாணத்திற்கு அதிகாரம் கிடைக்காமல் கிழக்கு மாகாணசபையை நீடிக்கும் முடிவினை நல்லாட்சி அரசு எடுத்தமை ஏற்கக்கூடிய …
Read More »சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு எதிராக எவரும் கைநீட்ட முடியாது : சட்டத்தரணிகள் சங்கம் எச்சரிக்கை
“”சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு எதிராக கைநீட்டுவது தவறான செயற்பாடு என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது”. – இவ்வாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரும், ஜனாதிபதியின் சட்டத்தரணியுமான ரோஹன தி சில்வா தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, வெளிவிவகார அமைச்சராக இருந்த ரவி கருணாநாயக்கவை பிணைமுறி விவகாரத்தில் விசாரணைக்கு உட்படுத்தியமை குறித்து சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு கைநீட்டுவதும், சட்டமா அதிபர் திணைக்களத்தில் பணிப்புரியும் அதிகாரிகளை இழிவுப்படுத்தும் வகையில் …
Read More »’20’ குறித்து ஜனாதிபதி தலைமையில் கொழும்பில் இன்று விசேட கூட்டம்! – பிரதமர், கட்சித் தலைவர்கள் பங்கேற்பு
20ஆவது அரசமைப்பு திருத்தச் சட்டம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பில் இன்று விசேட கூட்டமொன்று நடைபெறவுள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட ஐக்கிய தேசிய முன்னணி அரசிலுள்ள பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் இதில் பங்கேற்கவுள்ளனர். அனைத்து மாகாண சபைகளுக்கும் ஒரே நாளில் தேர்தலை நடத்தும் வகையில், மாகாண சபைகளைக் கலைக்கும் அதிகாரத்தை நாடாளுமன்றத்துக்கும் வழங்கும் 20ஆவது அரசமைப்பு திருத்தச் சட்டவரைபை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவையில் …
Read More »’20’ ஆவது திருத்தம் தொடர்பில் ஆற அமர்ந்து ஆராய்ந்தே கூட்டமைப்பு முடிவெடுக்கும்! – சம்பந்தன் தெரிவிப்பு
“20ஆவது அரசமைப்பு திருத்தச் சட்டத்தை இன்னும் முழுமையாகப் படித்துப் பார்க்கவில்லை. இந்தச் சட்டதிருத்தம் தொடர்பில் எமது கட்சி கூடி ஆராய்ந்தே ஆதரிப்பதா? இல்லையா? என்ற முடிவை எடுக்கும்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். 9 மாகாண சபைகளுக்குமான தேர்தலை ஒரே நாளில் நடத்தும் யோசனையை உள்ளடக்கிய 20ஆவது அரசமைப்பு திருத்தச் சட்டவரைபு வர்த்தமானியில் அண்மையில் வெளியிடப்பட்டது. இந்தச் சட்டவரைபுக்கு பொது அமைப்புகள், …
Read More »