ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் இருந்த தல் அபர் என்ற கடைசி நகரமும் நேற்று ராணுவத்தால் மீட்கப்பட்டது. ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆதிக்கம் மேலோங்கி இருந்த போது மொசூல் மற்றும் அதை சுற்றியுள்ள நகரங்கள் அவர்களது கட்டுப்பாட்டில் இருந்தது. தாங்கள் கைப்பற்றிய பகுதிகளை தன் நாடு ஆக அறிவித்து ஆட்சிசெய்து வந்தனர். அவர்களின் ஆதிக்கத்தை ஒடுக்க ஈராக் ராணுவத்துக்கு அமெரிக்கா கை கொடுத்தது. அதன் உதவியுடன ஐ.எஸ். தீவிரவாதிகள் வசம் இருந்த …
Read More »தென் கொரியா: கப்பல் கட்டும் தளத்தில் வெடி விபத்தில் சிக்கி 4 தொழிலாளர்கள் பலி
தென் கொரியா நாட்டில் உள்ள கப்பல் கட்டுமான நிறுவனத்தில் டேங்கர் வெடித்த விபத்தில் சிக்கிய நான்கு தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். தென் கொரியா நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள வர்த்தகப் பகுதியான ஜின்ஹானே என்ற நகரில் எஸ்.டி.எக்ஸ். ஆஃப்ஷோர் என்ற கப்பல் கட்டுமான நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்துக்கு கிரீஸ் நாட்டில் இருந்து கிடைத்த ஆர்டருக்காக 74 ஆயிரம் டன் கொள்ளளவு கப்பல் தயாரிக்கப்பட்டு வருகிறது. வரும் அக்டோபர் …
Read More »ஜனாதிபதியை சந்திக்கும் கட்சித் தலைவர்கள்
அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நாளை சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. மாகாண சபைத் தேர்தல்களை பிற்போட முயற்சிக்கப்படுகின்றமை குறித்து கட்சித் தலைவர்கள் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளனர். வடமத்திய, சப்ரகமுவ மற்றும் கிழக்கு மாகாண சபைகளின் ஆயுட்காலம் விரைவில் நிறைவடையவுள்ளது. இந்த நிலையில், தேர்தலை பிற்போடுவதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றமை குறித்து பல கட்சிகள் அதிருப்தி வெளியிட்டு வருகின்றன. எனவே, இது தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை கட்சித் தலைவர்கள் ஜனாதிபதியை சந்தித்து பேசவுள்ளதாக அமைச்சர் …
Read More »ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கட்சித்தாவல்கள் செப்டம்பரில்
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 14 உறுப்பினர்கள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இரண்டாம் வாரத்தில் மஹிந்த ராஜபக்ச அணியில் இணைந்து கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. குறிப்பாக செப்டம்பர் 8-16 திகதிகளுக்கு இடையில் இந்த இணைவு இடம்பெறலாம் என்று கூறப்படுகிறது. இதேவேளை மஹிந்த தரப்பின் 7 பேர் அரசாங்கத்தில் இணைந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நல்லிணக்க அரசாங்கத்தின் இரண்டு வருட பூர்த்தி வரும் நிலையில் இந்த நடவடிக்கைகள் எதிர்ப்பார்க்கப்படுகின்றன.
Read More »மஹிந்த முன்னதாகவே ஆட்சியை கலைத்தமைக்கான காரணம் இதுதான்: மட்டக்களப்பில் பிரதமர்
தாங்க முடியாதளவு கடன் சுமை இருந்த காரணத்தினாலேயே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஆட்சியை முன்னரகவே கலைத்தார் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 55 கோடி ரூபாய் பெறுமதியான அபிவிருத்தித் திட்டங்கள் அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வின் முதல் நிகழ்வாக இன்று ஏறாவூர் நகரத்தில் 120 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஏறாவூர் நகரசபைக் கட்டடத்தை பிரதமர் திறந்து வைத்தார். கிழக்கு மாகாண …
Read More »நல்லூர் திருவிழாவைக் கண்டு பிரம்மித்துப்போயுள்ள அமெரிக்க தூதுவர்
யாழ்.நல்லூர் திருவிழாவையும், அங்கு திரண்டுள்ள மக்களின் பக்தியையும் கண்டு இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அடுல் கெசாப் பிரம்மித்துப் போயுள்ளார். “யாழ். நல்லூர் ஆலயத்திற்கு வருகைத் தரும் பக்தர்களின் நம்பிக்கை, கலாச்சாரம் மற்றும் பக்தி என்பவை மிகவும் சிறப்பான ஒன்று” என தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார். வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழா இன்று சிறப்பாக நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Read More »பிரபாகரனுடன் அதிக நேரத்தைச் செலவிட முடியவில்லை! – வருந்துகிறார் எரிக் சொல்ஹெய்ம்
“தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் அதிக நேரத்தைச் செலவிட முடியாமல் போனதற்காக வருந்துகிறேன்.” – இவ்வாறு இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான பேச்சுக்களிலும், அமைதி முயற்சிகளிலும் நடுநிலையாளராகப் பங்கேற்ற எரிக் சொல்ஹெய்ம், சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார். விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் கொண்டிருந்த உறவு, நட்பு ரீதியானதா அல்லது அதனை விடவும் அதிகமானதா …
Read More »மஹிந்த அணியிலிருந்து விலகி எவரும் அரசுடன் இணையமாட்டர்! – நல்லாட்சியின் பகற்கனவு பலிக்காது என்கிறார் செஹான் சேமசிங்க
மஹிந்த அணியான பொது எதிரணியில் இப்போது பெரும் விரிசல் ஏற்பட்டிருக்கின்றது எனவும், வெகுவிரைவில் அந்த அணியிலுள்ள ஏழு உறுப்பினர்கள் விலகி அரசுடன் சேர்ந்துகொள்ளப்போகின்றனர் எனவும் வெளிவந்திருக்கும் செய்தி வெறும் கற்பனையே எனவும், இவ்வாறு அரசு அடிக்கடி காணும் பகற்கனவுகள் ஒருபோதும் பலிக்கப்போவதில்லை எனவும் பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது:- “ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் முன்னணியின் தலைவர் சாந்த பண்டார பொது …
Read More »இளநீர் குடிப்பது ஐ.தே.க; கோம்பை தின்பது நாமா? – சு.க. ஆவேசம்
“மத்திய வங்கி பிணைமுறி மோசடிக்கான பொறுப்பையோ அதனால் ஏற்பட்ட நட்டத்தையோ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்காது. ஐக்கிய தேசியக் கட்சியே ஏற்க வேண்டும்.” – இவ்வாறு மேல் மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:- “மத்திய வங்கி பிணைமுறி மோசடியானது நல்லாட்சிக்குப் பெரும் சவாலை விடுத்துள்ளது. இதனுடன் தொடர்புபட்டவர்கள் இன்று வெளிப்படுத்தப்பட்டுள்ளனர். அந்தக் குற்றச்சாட்டுக்கு இலக்கான ரவி கருணாநாயக்க அமைச்சுப் பதவியிலிருந்து விலகியுள்ளார். ஐக்கிய தேசியக் …
Read More »கட்சியிலிருந்து நீக்கினால் நீதிமன்றத்தை நாடுவேன்! – வடக்கு அமைச்சர் டெனீஸ் தெரிவிப்பு
“ஜனநாயக விழுமியங்களுக்கு முரணான இரு வேறு நிலைப்பாடுகளுடன் கட்சி செயற்படுகின்றது. சட்டத்துக்கு மாறாகக் கட்சியிலிருந்து என்னை நீக்கினால் நீதிமன்றத்தை நாடுவேன். இருப்பினும் இன்னும் கட்சியில் ஜனநாயக விழுமியங்கள் இருப்பதாக நம்புகின்றேன்.” – இவ்வாறு வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்தார். அமைச்சுப் பதவியிலிருந்து விலகுவதற்கு மறுத்துள்ளமையால் பா.டெனீஸ்வரனுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு நாளை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு ரெலோவின் உயர்மட்டக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் …
Read More »