வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெற்றிருக்காவிட்டால், உடனடியாக அறிவிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய வாக்காளர்களை கேட்டுள்ளார். 2017ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு தயாரிக்கும் பணி பூர்த்தி அடைந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தேர்தல்கள் திணைக்களத்தின் இணையத்தளத்தில் வாக்காளர் இடாப்பை பார்வையிட முடியும். இணையத்தளத்தின் முகவரி : www.elections.gov.lk
Read More »ஆசியாவின் தலைசிறந்த சுற்றுலா வலயமாக காலி – பிரதமர்
காலி மாவட்டம் ஆசியாவின் சிறந்த சுற்றுலா வலயமாக தரமுயர்த்தப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். எல்பிட்டிய பிரதேசத்தில் நான்காயிரம் காணி உறுதிப்பத்திரங்களை வழங்கும் நிகழ்வில் பிரதமர் உரையாற்றும்போதே இவ்வாறு குறிப்பிட்டார். காணி உறுதிப்பத்திரங்களை வழங்கும் வேலைத் திட்டத்தின் கீழ் அடுத்த சில ஆண்டுகளில் சகலருக்கும் காணி உரிமைகள் உறுதி செய்யப்படும். களுத்துறையில் 800 ஏக்கர் விஸ்தீரணமான நிலப்பரப்பில் கைத்தொழில் பேட்டை நிறுவப்படவுள்ளது. ஹம்பாந்தோட்டை துறைமுகம் மத்தள விமான நிலையம் …
Read More »ஜெனிவா தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம்
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சிறிலங்கா முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்தின் கொழும்பு பணியகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “ஐநா மனித உரிமைகள் பேரவைத் தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவு நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் கிடையாது. பாதிக்கப்பட்டவர்களின் இதயத்தில் தான் நீதியும், குணப்படுத்தல் வசதிகளும் உள்ளன என்பது முக்கியமாகும். வேறு எதுவும் அனைத்துலக சமூகத்தினால் ஏற்றுக் …
Read More »ஷங்காய் நகரம் போல தென்னிலங்கையை மாற்றுவோம்- சீனத் தூதுவரின் சபதம்
அடுத்த 15 ஆண்டுகளுக்குள் சிறிலங்காவை சிங்கப்பூராக தரமுயர்த்துவதற்கு ஏற்ற வகையில், சீனா தொடர்ந்து உதவிகளை வழங்கும் என்று சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் யி ஷியான்லியாங் தெரிவித்துள்ளார். தங்காலையில் நேற்று நடந்த- சீனாவின் கொடையில், ஆயிரம் பாடசாலை மாணவர்களுக்கு 1.8 மில்லியன் ரூபா பெறுமதியான பாடசாலை கருவிகளை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே சீன தூதுவர்,இவ்வாறு குறிப்பிட்டார். “சீனாவின் மிகச் சிறப்பான நண்பன் தான் சிறிலங்கா. இரண்டு நாடுகளுக்கும் …
Read More »தமிழர் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி – சம்பந்தன் குழு இன்று முக்கிய பேச்சு!
காணி விடுவிப்பு, காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை, தமிழ் அரசியல் கைதிகளின் விவகாரம் உள்ளிட்ட தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றத் குழுவுக்கும் இடையில் இன்று செவ்வாய்க்கிழமை முக்கிய சந்திப்பு நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் மாலை 4.30 மணிக்கு இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளது என கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. தெரிவித்தார்.
Read More »மு.காவுடன் இணைவது ஒருபோதுமே நடக்காது! – ஹசனலி திட்டவட்டம்; முஸ்லிம் கூட்டமைப்பே ஒரே இலக்கு என்றும் தெரிவிப்பு
“ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் மீண்டும் என்னை இணைப்பதற்கான எந்த முயற்சிக்கும் நான் துளியும் இடமளியேன். முஸ்லிம் கூட்டமைப்பு உருவாக்க விடயத்தில் மும்முரமாகவுள்ளேன்.” – இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் செயலாளர் நாயகமும் தூய முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் கூட்டமைப்பின் ஏற்பாட்டாளருமான எம்.ரி.ஹசனலி தெரிவித்தார். ஹசனலிக்கு தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்கி, முஸ்லிம் கூட்டமைப்பு உருவாவதைத் தடுப்பதற்கான காய்நகர்த்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் …
Read More »சுயகௌரவம் இருக்குமானால் உடன் பதவி விலகவேண்டும் விஜயதாஸ! – வலியுறுத்துகின்றார் பொன்சேகா
நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவுக்கு சுயகௌரவம் இருக்குமேயானால் அவர் உடனடியாகப் பதவி விலகவேண்டுமென பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா வலியுறுத்தியுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- “விஜயதாஸ ராஜபக்ஷ ஊழல்வாதிகளையும், மோசடியாளர்களையும் காப்பாற்றிவருகின்றார். குற்றம் செய்தவர்களை சட்டத்தின் பிடிக்குள் கொண்டுவருவதற்குத் தடையாக இருக்கின்றார். ஐக்கிய தேசியக் கட்சியினரின் ஒட்டுமொத்த வெறுப்புக்கும் ஆளாகியிருக்கின்றார். அவர் இந்தப் பதவியைவிட்டு விலகினால் மட்டுமே குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தமுடியும். எனவே, அவருக்கு சுயகௌரவம் இருக்குமேயானால் …
Read More »இராஜிநாமா வேண்டாம்! – அமைச்சர் விஜயதாஸவிடம் தேரர்கள் குழு கோரிக்கை
நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவை அமைச்சுப் பதவியிலிருந்து இராஜிநாமா செய்யவேண்டாம் என தேரர்கள் குழுவினர் நேற்று கோரிக்கை விடுத்துள்ளனர். பௌத்த சங்கங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தேரர்கள் அடங்கிய குழுவினர் நீதி மற்றும் புத்தசாசன அமைச்சுக்கு நேற்று வந்திருந்தனர். அமைச்சரை சந்தித்து ஆசீர்வாதம் வழங்குவதற்காகவும் பதவியை இராஜிநாமா செய்யவேண்டாம் எனக் கோருவதற்காகவும் தாம் வருகை தந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர். எனினும், அமைச்சர் அங்கு வருகை தராத காரணத்தால் அதிகாரிகளைச் சந்தித்துவிட்டு …
Read More »புத்தளத்தில் சிறுவன் படுகொலை!
புத்தளம், முந்தல், சமீரகம பிரதேசத்திலுள்ள தனியார் ஒருவருக்குச் சொந்தமான தோட்டத்திலிருந்து சிறுவனொருவன் படுகொலைசெய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என முந்தல் பொலிஸார் தெரிவித்தனர். சமீரகம பிரதேசத்தைச் சேர்ந்த நஸார் முஹம்மது நஸ்ரான் (வயது 14) எனும் சிறுவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:- உயிரிழந்த சிறுவன் தனது நண்பரான இளைஞர் ஒருவருடன் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை காலை சமீரகம பிரதேசத்திலுள்ள தோட்டத்துக்குச் சென்றுள்ளார். குறித்த இருவரும் …
Read More »அமெரிக்கா, தென்கொரியா இன்று கூட்டு போர் பயிற்சி: வடகொரியா எச்சரிக்கை
கொரிய தீபகற்ப பகுதியில் அமெரிக்காவும், தென்கொரியாவும் இன்று நடத்தும் கூட்டு போர்ப்பயிற்சிக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் இடையேயான பனிப்போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. தன்மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் புதிய பொருளாதார தடை விதிக்க காரணமான அமெரிக்காவின் குவாம் தீவின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்துவோம் என வடகொரியா அதிரடியாக அறிவித்தது. அதற்கு பதிலடி கொடுத்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், “அந்த நாட்டின் மீதான பிரச்சினையில் …
Read More »