Monday , October 20 2025
Home / செய்திகள் (page 363)

செய்திகள்

News

கேப்பாப்பிலவு காணி விடுவிப்பு குறித்து ஜனாதிபதி – கூட்டமைப்பு பேச்சு! – இராணுவம் வெளியேற ரூ.15 கோடி அமைச்சரவை அங்கீகாரம்

கேப்பாப்பிலவு காணி விடுவிப்புத் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்குழு நேற்று ஜனாதிபதி தலைமையிலான அரசுத் தரப்புடன் பேச்சுக்களில் ஈடுபட்டது. கேப்பாபிலவுக் காணிகளை விடுவிப்பதற்காக இராணுவத்தினருக்கு 14 கோடி 80 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்வதற்கு நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தக் கூட்டத்தில் தெரிவித்தார். இந்தச் சந்திப்பு நேற்று மாலை 4.30 மணி தொடக்கம் சுமார் ஒரு மணி நேரம் நாடாளுமன்றக் …

Read More »

மஹிந்தவை தலைமைப் பொறுப்பில் அமர்த்தும்வரை போராட்டம் தொடரும்! – பொது எதிரணி கூறுகின்றது 

“இன்னும் கொஞ்ச நாட்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் எஞ்சியிருக்கப்போவது கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், செயலாளர் துமிந்த திஸாநாயக்கவும்தான்” என்று மஹிந்த அணியான பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், “வீட்டில் கூலிக்கு இருந்தவர் வீட்டை சொந்தமாக்கிக்கொள்ளும் செயற்பாடே இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் நடந்துள்ளது.  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வேறு அரசியல் சக்திகளுக்கு அடிபணிந்துள்ளது. இதற்கான முழுப் பொறுப்பையும் கட்சியின் …

Read More »

வடக்கு அமைச்சரவையிலிருந்து டெனீஸை தூக்கி எறிந்தார் முதல்வர் விக்கி!

வடக்கு மாகாண அமைச்சரவையிலிருந்து பா.டெனீஸ்வரனை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தூக்கி எறிந்துள்ளார். அவரது அமைச்சுப் பதவியில் சிலவற்றை திருமதி அனந்தி சசிதரனுக்கும், எஞ்சியவற்றை தானே பொறுப்பெடுப்பதாவும் தெரிவித்து வடக்கு மாகாண ஆளுநர் குரேக்கு, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கடிதம் எழுதியுள்ளார். அமைச்சர் பா.டெனீஸ்வரன் தானே அமைச்சுப் பதவியில் தொடர்வதாக ஏற்கனவே, வடக்கு மாகாண ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளமையால், இந்த விடயத்தில் சட்டஆலோசனை வழங்குமாறு கோரி வடக்கு மாகாண ஆளுநர் குரே சட்டமா அதிபர் …

Read More »

அடிப்படை உரிமையற்றவரை தற்காலிகமாக நீக்க முடியுமா? – ரெலோவிடம் கேட்கிறார் டெனீஸ்

“எனது அமைச்சுப் பொறுப்பை கபடத்தனமாகவும் – சூட்சுமமாகவும் தட்டிப்பறிக்க நினைக்கின்றார்கள். கட்சியின் அடிப்படை உறுப்புரிமைகூட இல்லாத என்னை ஆறு மாதங்களுக்கு தற்காலிகமாக எப்படி இடைநிறுத்த முடியும்? கட்சி யாப்பில் அதற்கு இடமிருக்கின்றதா? கட்சியின் அடிப்படை உறுப்புரிமை பெற்ற நபரென்று சொன்னால், உறுப்புரிமை எனக்கு எப்போது வழங்கப்பட்டது என்பதை ஆதராத்துடன் பகிரங்கப்படுத்த முடியுமா?” – இவ்வாறு வடக்கு மாகாண மீன்பிடி மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் பா.டெனீஸ்வரன் ரெலோவிடம் கேள்விகளை எழுப்பியுள்ளார். ரெலோவின் …

Read More »

ஒரு தலை குல்லாவா?:தமிழிசை கேள்வி

தமிழக அரசியல் தொடர்பாக அடிக்கடி ட்விட்டரில் கருத்து பதிவிடுவது நடிகர் கமல்ஹாசனின் வழக்கம். அதிமுக அணிகள் நேற்று இணைந்த போது ட்விட்டரில் பதிவிட்டிருந்த கமல்ஹசான், “காந்திக்குல்லா! காவிக்குல்லா! கஷ்மீர்குல்லா!! தற்போது கோமாளிக்குல்லா, தமிழன் தலையில். போதுமா? இன்னும் வேண்டுமா? தயவாய் வெகுள்வாய் தமிழா” எனக் கூறியிருந்தார். இந்நிலையில் ட்விட்டரில் கமல்ஹாசனை மறைமுகமாக சாடியுள்ள தமிழிசை சவுந்தரராஜன், “காந்தி குல்லாவையும் காவி குல்லாவையும் முந்திக் கொண்டு அவசரமாக போட்டவர்கள் முத்தலாக் தீர்ப்பு …

Read More »

கருணாநிதி ஒவ்வொரு நாளும் கனவில் வருகிறார்

திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரிப்பதற்காக வைகோ இன்று கோபாலபுரம் இல்லம் சென்றார். அவரை ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்டோர் வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றனர். வைகோ கருணாநிதியை சந்தித்து உடல் நலம் விசாரித்தார். பின்னர் வெளியே வந்த வைகோ செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், திமுகவுடனும் கருணாநிதியுடனும் தனக்கு ஏற்பட்ட நெருக்கத்தையும் கட்சிப் பணியாற்றிய வரலாற்றையும் சுருக்கமாகவும் நெகிழ்ச்சியோடும் பேசினார். கருணாநிதிக்காக தான் மெய்க்காப்பாளர் படை அமைத்ததாக வைகோ …

Read More »

ஆப்கானிஸ்தானுக்கு கூடுதல் படைகள்

வாஷிங்டனில் உள்ள ராணுவ மையத்தில் உரையாற்றிய அவர், ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா மேற்கொள்ள வேண்டிய போர் உத்திகள் குறித்து விவரித்தார். இந்த உரை தொலைக்காட்சி மூலமாக நேரலையாக ஒளிபரப்பானது. அப்போது பயங்கரவாதிகளின் புகலிடமாக ஆப்கானிஸ்தான் இருக்கக்கூடாது என்பதற்காகவே புதிய அணுகுமுறையை வரையறுத்திருக்கிறோம். யுத்தம் நடத்தி வெற்றி பெறுவதே தமது நோக்கம்’எனத் தெரிவித்தார். ஆப்கானிஸ்தானில் நடக்கும் போர் குறித்து, முந்தைய அதிபர்களைத் தொடர்ச்சியாக விமர்சனம் செய்து வந்த ட்ரம்ப், தற்போது அவர்களின் நடவடிக்கையைத் …

Read More »

தீவிரவாதத்தை எதிர்ப்பதில் பாகிஸ்தான் முதலிடம்: சீனா சர்டிபிகேட்

தீவிரவாதிகளை வளர்த்து வருவதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ள நிலையில் தீவிரவாதத்தை எதிர்த்து போராடுவதில் பாகிஸ்தான் முதலிடத்தில் இருப்பதாக சீனா வக்காலத்து வாங்கியுள்ளது. தெற்காசிய நாடுகள் தொடர்பான அமெரிக்காவின் புதிய கொள்கைகள் குறித்து அந்நாட்டின் அதிபர் டொனால்ட் டிரம்ப் தொலைக்காட்சி மூலமாக நாட்டு மக்களிடையே உரையாற்றினார். ‘பாகிஸ்தானுக்கு கோடிக்கணக்கான டாலர்கள் அமெரிக்கா நிதியுதவியாக அளிக்கிறது. அதேநேரம், நாம் எதிர்த்துப் போரிட்டுவரும் தீவிரவாதிகளின் புகலிடமாக அந்நாடு விளங்குகிறது. தலிபான் உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் …

Read More »

ஆசிய-பசிபிக் கடற்பகுதியில் அமெரிக்க கடற்படை செயல்பாடுகளால் ஆபத்து அதிகரிப்பு: சீனா விமர்சனம்

சிங்கப்பூர் கடற்பகுதியில் அமெரிக்க போர்க்கப்பல் சரக்கு கப்பலுடன் மோதி விபத்துக்குள்ளானதை தொடர்ந்து அமெரிக்க கடற்படை ஆபத்தானது என சீன ஊடகம் விமர்சனம் செய்துள்ளது. சிங்கப்பூர் கடல் பகுதியில் மலாக்கா தீவு அருகே சென்று கொண்டிருந்த ஜான் மெக்கெயின் அமெரிக்க போர்க்கப்பல், லிபியாவை சேர்ந்த அல்னிக் என்ற சரக்கு கப்பலுடன் நேற்று திடீரென மோதி விபத்துக்குள்ளானது. இது இந்த ஆண்டு பசிபிக் கடற்பகுதியில் அமெரிக்க கப்பல் ஏற்படுத்திய நான்காவது விபத்தாகும். இந்த …

Read More »

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த போதைப்பொருள் தூத்துக்குடியில் பறிமுதல்

தூத்துக்குடியில் இருந்து கட‌ல் வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற மூன்று கோடி ரூபாய் மதிப்புள்ள 24 கிலோ அசிஸ் போதைப்பொருளை அந்நாட்டு சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இதில் கடத்தல்காரர்களை பிடிக்க துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதுடன், ஒருவரை கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாநகர் பகுதியில் இருந்து அசிஸ் என்ற போதைப்பொருளை இலங்கைக்கு சிலர் கடத்த முயல்வதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு இரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்கத்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். …

Read More »