Monday , October 20 2025
Home / செய்திகள் (page 357)

செய்திகள்

News

நல்லாட்சி அரசில் அடுத்து என்ன? செப். 4இல் வெளியாகும் அறிவிப்பு! – களமிறக்கப்படுகின்றார் மங்கள

நல்லாட்சி என ஆட்சிசெய்யும் தேசிய அரசின் அடுத்தகட்ட நகர்வுகள் பற்றியும், முன்நோக்கி வந்த பயணம் குறித்தும் எதிர்வரும் செப்டெம்பர் 4ஆம் திகதி விசேட அறிவிப்பொன்று வெளியாகவுள்ளது. அரசின் சார்பில் மேற்படி அறிவிப்பை நிதி மற்றும் தகவல் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர வெளியிடவுள்ளார். இதன்போது அரசின் வரிக்கொள்கைகள் பற்றியும் விவரிக்கப்படவுள்ளது என அரச வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது. நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சிப்பீடமேறி இம்மாத நடுப்பகுதியுடன் ஈராண்டுகள் கடந்துள்ளன. இந்நிலையில், …

Read More »

’20’இற்கு மேற்குலகம் போர்க்கொடி! இராஜதந்திர நெருக்கடிக்குள் அரசு!! – தேர்தலை விரைந்து  நடத்துமாறு அழுத்தம் 

மாகாண சபைகளுக்குரிய தேர்தல்களை ஒத்திவைக்கும் நோக்கில் அரசு முன்னெடுத்துவரும் காய்நகர்த்தல்களுக்கு மேற்குலக நாடுகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன என்று இராஜதந்திர வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது. கொழும்பிலுள்ள தமது தூதுவர்கள் ஊடாகவே மேற்படி நாடுகள், இலங்கை அரசிடம் அதிருப்தியை வெளியிட்டுள்ளன. மாகாண சபைகளைக் கலைக்கும் அதிகாரத்தை நாடாளுமன்றத்துக்கு வழங்கும் வகையிலும்  அனைத்து மாகாண சபைகளுக்கும் ஒரே நாளில் தேர்தல் நடத்தும் நோக்கிலும் 20ஆவது அரசமைப்புத் திருத்தச் சட்டவரைபை அரசு நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. இந்தச் …

Read More »

’20’ இற்கு வலுக்கிறது எதிர்ப்பு! திருத்துகிறது அரசு!! கிழக்கில் 7இல் வாக்கெடுப்பு; வடக்கில் 4இல் பலப்பரீட்சை

மாகாண சபைகளில் பெரும் பின்னடைவைச் சந்தித்து அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிர்ப்புகள் வலுத்துவருவதால் அதில் முக்கிய சில திருத்தங்களைச் செய்வதற்கு அரசு அவசரமாக தீர்மானித்துள்ளது என அறியமுடிகின்றது. மாகாண சபைகளைக் கலைக்கும் அதிகாரத்தை நாடாளுமன்றத்துக்கு வழங்கும் வகையிலும் சகல மாகாண சபைகளுக்கும் ஒரே நாளில் தேர்தலை நடத்துவதற்கு வழிவகுக்கும் 20ஆவது திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த சட்டமூலம் தொடர்பில் மாகாண சபைகளின் அனுமதியையும் அரசு கோரியுள்ளது. இதன்படி …

Read More »

’20’ குறித்து சம்பந்தன் – ஹாபீஸ் மந்திராலோசனை!

அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் குறித்து நாடாளுமன்றின் பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட்டும் நேற்றுமுன்தினம் மந்திராலோசனை நடத்தியுள்ளனர். கிழக்கு மாகாண சபையானது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய இரு கட்சிகளின் ஆட்சிக்குட்பட்டது. இந்நிலையில், 20ஆவது திருத்தச் சட்டமூலம் கிழக்கு மாகாண சபையில் நேற்றுமுன்தினம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேற்றுமுன்தினம் …

Read More »

அஸ்வருக்கு  இறுதி அஞ்சலி செலுத்தினார் மைத்திரி! 

மறைந்த முன்னாள் முஸ்லிம் சமய விவகார இராஜாங்க அமைச்சரும் முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் செயலாளருமான ஏ.எச்.எம். அஸ்வரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று புதன்கிழமை மாலை இறுதி அஞ்சலி செலுத்தினார். தெஹிவளை, பாத்தியாமாவத்தை, இலக்கம்  04 என்ற முகவரியிலுள்ள அஸ்வரின் வீட்டில் நடைபெற்ற இறுதி அஞ்சலி நிகழ்வில் ஜனாதிபதியுடன் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும்  கலந்துகொண்டனர். நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு7.15 மணியளவில் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அஸ்வர் காலமானார். …

Read More »

பாஜகவின் சூழ்ச்சிக்கு அதிமுக இரையாகக் கூடாது

தமிழக அரசியல் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக தோழமை கட்சி எம்எல்ஏக்களான மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தலைவர் தமிமூன் அன்சாரி, கொங்கு இளைஞர் பேரவையின் தலைவர் தனியரசு மற்றும் முக்குலத்தோர் புலிப்படையின் தலைவர் கருணாஸ் ஆகியோர் இன்று கூட்டாக ஆலோசனை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்த அவர்கள், தினகரனை ஒதுக்கி வைத்து விட்டு நல்லாட்சி தர முடியாது என்று தெரிவித்தனர். மேலும் தினகரன் தரப்பு எம்எல்ஏக்களை அழைத்துப் பேச …

Read More »

அதிமுகவின் பிரச்னைகளை சரி செய்யும் மருத்துவர் டி.டி.வி தினகரன்

சென்னையில், டிடிவி தினகரனை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜெயலலிதாவின் உயிருக்கு ஆபத்து வரும்போதெல்லாம், அவரை பாதுகாத்தவர்கள், சசிகலா குடும்பத்தினர்தான் என கூறினார். எடப்பாடி பழனிசாமியையோ, ஓ. பன்னீர் செல்வத்தையோ தலைவர்களாக ஏற்க முடியாது எனக் குறிப்பிட்ட நடிகர் செந்தில், தேர்தலைச் சந்தித்து முதலமைச்சரானால் மட்டுமே அவர்களை ஏற்க முடியும் என்றும் தெரிவித்தார். தனக்குப் பிறகும் 100 ஆண்டுகளைக் கடந்தும் அதிமுக மக்கள் நலனுக்காகப் பாடுபடும் இயக்கமாகத் திகழும் …

Read More »

அசல் ஓட்டுநர் உரிமம் இல்லாவிட்டால் 3 மாதம் சிறை

அசல் ஓட்டுநர் உரிமம் இல்லாவிட்டால் 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை எச்சரித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், நாளை மறுநாள் முதல் வாகன ஓட்டிகள் அசல் உரிமம் வைத்திருக்காவிட்டால் 3 மாதம் சிறை தண்டைன அல்லது 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சீருடை அணிந்த எந்த காவல்துறை அதிகாரியும் வாகன ஓட்டுநர்களின் அசல் உரிமத்தை கேட்கும் போது …

Read More »

மண்டைதீவு கடலில் படகு ஒன்று கவிழ்ந்ததில் 6 மாணவர்கள் கடலில் மூழ்கி மரணம்…

இச் சம்பவம் நேற்று மதியம் 01.30 பிற்பகல் இடம்பெற்றது. குறித்த சடலங்கள் யாழ் போதனா வைத்தியசாலையின் பிரேதஅறையில் வைக்கப்பட்டுள்ளன, உரிய பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் சடலங்களை பொறுப்பேற்குமாறு பணிப்புரை. 18 முதல் 20 வயதுக்கிடைப்பட்ட மாணவர்களே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள நிலையில் அவர்களது சடலங்கள் தற்போது மீட்கப்பட்டுள்ளன. இன்று கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பிரதான பாடங்கள் நிறைவடைந்த நிலையில், குறித்த மாணவர்கள் படகு சவாரி சென்ற போது …

Read More »

எகிப்து: பஸ்சுடன் லாரி மோதிய விபத்தில் 14 பேர் பலி

எகிப்து நாட்டின் தலைநகரான கெய்ரோவை மத்திய பகுதியான பெனி சூயெப் நகருடன் இணைக்கும் பிரதான சாலையில் இன்று பஸ்சுடன் லாரி மோதிய கோர விபத்தில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். எகிப்து நாட்டின் மத்தியப் பகுதியான பெனி சூயெப் நகரை அந்நாட்டின் தலைநகரான கெய்ரோவுடன் இணைக்கும் சாலையில் தனியாருக்கு சொந்தமான ஒரு சுற்றுலா பஸ் இன்று சென்று கொண்டிருந்தது. சாலையின் எதிர்திசையில் வேகமாக வந்த லாரி 62 பேருடன் வந்த …

Read More »