இந்தியாவில் தற்போது ‘புளூவேல்‘ ஆன்லைன் விளையாட்டால் மாணவ–மாணவிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. தற்கொலை விளையாட்டு என்றழைக்கப்படும் இந்த விளையாட்டுக்கு மாணவ–மாணவிகள் அடிமையாகி இருப்பது பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. ‘புளூவேல்‘ விளையாட்டுக்கு மத்திய அரசு தடை விதித்தாலும், இந்த விளையாட்டு ஒழிந்தபாடில்லை. இந்தியாவில் இந்த விளையாட்டால் ஏராளமான மாணவ–மாணவிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இந்த விபரீத விளையாட்டானது, 50 நாட்களை இலக்காக கொண்டு …
Read More »அடுத்த கல்வியாண்டில் 800 பொறியியல் கல்லூரிகளுக்கு மூடு விழா?
கடந்த 5 ஆண்டுகள் தொடர்ச்சியாக 30%க்கும் குறைவான இடங்களே நிரம்பும் பொறியியல் கல்லூரிகளை அடைக்கப்பட உள்ளதாக அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவின் (AICTE) தலைவர் அனில் தத்தாத்ரயா கூறியுள்ளார். பெங்களூருவில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற தத்தாத்ரயா நாடு முழுவதும், 2018-19 கல்வி ஆண்டில் குறைவான தரத்துடனும், முழுமையான அளவில் சீட்கள் நிரப்பப்படாத 800க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் மூடப்படும் என கூறினார். தற்போதைய நிலவரப்படி நாடு முழுவதும் 10,363 …
Read More »சமூகநீதியையும், மாநில உரிமையையும் பறிகொடுத்து விடுவோமோ!
அந்தோ அனிதா.. உன்னைப் போலவே சமூகநீதியையும், மாநில உரிமையையும் பறிகொடுத்து விடுவோமோ என்ற வேதனைத் தீ நெஞ்சில் எரிகிறது. அந்தத் தீயையே சுடராக்கி போராட்டக் களம் காண்போம். உன் உயிர்ப்பலிக்குக் காரணமான மத்திய, மாநில அரசுகளை ஜனநாயக முறையில் வீழ்த்தி, சமூகநீதியை என்றும் பாதுகாப்போம் எனத் தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகள் அனைவரும் சூளுரை மேற்கொள்வோம் என்று குறிப்பிட்டு திமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் …
Read More »செப்டம்பர் 5-ல் அதிமுக எம்எல்ஏ.,க்கள் கூட்டம்
சென்னையில் நாளை மறுநாள் (செப். 5-ம் தேதி) அதிமுக எம்எல்ஏ.,க்கள் கூட்டம் நடைபெறுகிறது. முதல்வர் பழனிசாமி தலைமையில் கட்சித் தலைமை அலுவலகத்தில் இக்கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 12-ல் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில் எம்எல்ஏ.க்கள் கூட்டம் நடைபெறுவது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதிமுக பொதுக்குழுவை கூட்ட சசிகலாவுக்கு மட்டுமே அதிகாரம் இருக்கிறது. பொதுக்குழுவை கூட்டுவதாக அறிவித்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். …
Read More »ஜெ. தனது வாரிசாக யாரையும் அடையாளம் காட்டவில்லை
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தனது வாரிசாக யாரையும் சுட்டிக்காட்டவில்லை என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறிள்ளார். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் பழனிசாமி கலந்து கொண்டார். அப்போது அவர், “சாதாரண குடிமகனும் ஆட்சியில் அமர முடியும் என்பதற்கு வழிவகுத்தவர் ஜெயலலிதா. அதனால்தான், தன் வாரிசாக யாரையும் அவர் சுட்டிக்காட்டவில்லை. 27 ஆண்டுகள் ஆட்சியில் அமர்ந்திருக்கும் ஒரே கட்சி அதிமுக தான். அதிமுக ஆட்சியை கவிழ்க்க துடிக்கிறார்கள், …
Read More »எந்த இராணுவத் தளபதியின் மீதும் கைவைக்க இடமளியேன்! – சு.க.மாநாட்டில் மைத்திரி சூளுரை
போர்க்குற்றச்சாட்டு என்ற போர்வையில் ஜெனரல் ஜகத் ஜயசூரியவின் மீதோ அல்லது எந்தவொரு இராணுவத் தளபதியின் மீதோ அல்லது நாட்டின் எந்தவொரு இராணுவச் சிப்பாய் மீதோ கைவைக்க எவருக்கும் இடமளிக்கப்போவதில்லை என்று சூளுரைத்திருக்கிறார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. அத்துடன், புலிச்சார்பு அமைப்புகளிடம் பணம் வாங்கிக்கொண்டு அதன் நிழலாகச் செயற்படும் அரசசார்பற்ற அமைப்புகளின் தாளத்திற்கேற்ப தான் ஆடமாட்டார் எனவும் அவர் இடித்துரைத்தார். கொழும்பு கெம்பல் மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் …
Read More »உள்ளக சுயநிர்ணய உரிமையுடன் இறைமையை உறுதிப்படுத்தும் தீர்வு! – அதற்கே முயல்கிறோம் என்கிறார் சம்பந்தன்
“எமது தமிழ் மக்களின் உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில், அவர்களின் இறைமையை உறுதிப்படுத்தும் ஒரு தீர்வுக்காகவே நாங்கள் கடுமையாக முயன்று வருகின்றோம். எங்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்டு, நாங்கள் சரித்திர ரீதியாக வாழ்ந்து வந்த பிரதேசங்களில் எமக்குப் போதியளவு சுயாட்சி கிடைக்க வேண்டும் என்பதையே நாம் வலியுறுத்தி வருகின்றோம்.” – இவ்வாறு யாழ்ப்பாணத்தில் வைத்துக் கூறினார் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன். தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் …
Read More »சமஷ்டிக்கு இதுதான் தருணம்! – சுமந்திரன் எம்.பி. விவரிப்பு
“தமிழர்கள் சமஷ்டி அடிப்படையிலான தீர்வு ஒன்றைக் கோருவதற்கும் – ஏன் சுயநிர்ணய உரிமையைக்கோருவதற்கும் உரித்துடையவர்கள் என்பதை அங்கீகரிக்கும் விதத்தில் இலங்கை உயர்நீதிமன்றத்திடமிருந்து சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தீர்ப்புக் கிட்டியிருக்கின்றது. இந்தச் சமயத்தில்தான் நாட்டின் இரு பெரும் கட்சிகளும் சேர்ந்து ஒரு கூட்டு அரசை அமைத்திருக்கின்றன. எனவே, சமஷ்டி அடிப்படையிலான தீர்வு ஒன்றைத் தமிழ் மக்கள் உரிமையுடன் கோரிப் பெற்றுக்கொள்வதற்கான சரியான தருணம் இதுதான்.” – இவ்வாறு தெரிவித்திருக்கின்றார் தமிழ்த் …
Read More »மைத்திரியின் சகோதரர் படுகொலை வழக்கு விசாரணை ஜூரிகள் சபை முன்னிலையில்!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரரான பிரியந்த சிறிசேன கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணை ஜூரிமார் சபையின் முன்னிலையில் நவம்பர் 20 தொடக்கம் 30 வரை நடைபெறுமென பொலநறுவை மேல்நீதிமன்றம் அறிவித்துள்ளது. இவ்வழக்கின் சந்தேகநபரான டொன் இஷார லக்மால் சப்பு தந்திரி (வயது – 34) பொலநறுவை மேல்நீதிமன்ற நீதியரசர் நிமால் ரணவீரவின் முன்னிலையில் தான் நிரபராதி எனத் தெரிவித்ததையடுத்து வழக்கு மேற்குறிப்பிட்ட கால எல்லையில் ஜூரிகள் சபை முன்னால் தொடர்ந்து …
Read More »’20’ இற்கு எதிராக சிவில் அமைப்புகள் போர்க்கொடி!
அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக மாற்றுக்கொள்கைக்கான மத்திய நிலையத்தின் பணிப்பாளரும் நல்லிணக்கச் செயலணியின் பொதுச் செயலாளருமான பாக்கியசோதி சரவணமுத்து போர்க்கொடி தூக்கியுள்ளார். தேர்தல்களை ஒரே தினத்தில் நடத்தவேண்டும் என்று அரசு முயற்சிகள் எடுத்தாலும், அதனைக் காரணங்காட்டி தேர்தல்களைப் பிற்போடவோ அல்லது காலதாமதத்தை ஏற்படுத்தவோ முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் குறித்து பகிரங்கக் கருத்தாடல்கள் மாகாண சபைகளில் இடம்பெற்றுவருகின்றன. குறித்த சட்டமூலம் ஊவா, தென் …
Read More »