புதுடில்லி: நாட்டு மக்களை பொருளாதார ரீதியாக மேம்படுத்த பாடுபட்டு வரும் பிரதமர் நரேந்திர மோடி, நாட்டுக்கு கிடைத்த வள்ளல்’ என மத்திய கலாசார துறை இணையமைச்சர் மகேஷ் சர்மா பாராட்டியுள்ளார்.
Read More »20 ஆவது திருத்தம் அடியோடு மாற்றம்! – அரசுத் தலைமை முடிவு; உயர் நீதிமன்றத்தில் தெரிவிப்பு
இருபதாவது அரசமைப்புத் திருத்தத்தின் வடிவத்தை அடியோடு மாற்றுவதற்கு அரசு நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை தீர்மானித்தது. சகல மாகாண சபைகளையும் இந்தத் திருத்தம் நடைமுறைக்கு வந்து சரியாக ஒரு வருடத்தில் கலைக்கவும், அதன் பின்னர் ஒரே நாளில் சகல சபைகளுக்குமான தேர்தலை நடத்தவும் புதிய திருத்த வடிவம் வழி செய்கின்றது. அதன் பின்னர் மாகாண சபை ஒன்று முற்கூட்டியே கலைக்கப்படும் சூழல் நேருமானால் அந்த மாகாண சபையின் எஞ்சிய ஆட்சிக் காலத்துக்கான நிர்வாகத்துக்கென …
Read More »மைத்திரியின் ‘போர்க்குற்ற’ அறிவிப்பால் மேற்குலக தூதுவர்கள் அதிருப்தி! கொழும்பில் கூடி அவசர ஆய்வு!! – ஜெனிவாத் தொடரிலும் ‘தலையிடி’யாக மாறும் அபாயம்
படையினருக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைக்கு இடமளிக்கப்போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள அறிவிப்பால் கொழும்பிலுள்ள இராஜதந்திரிகள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர் என இராஜதந்திர வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது. எனவே, இலங்கையின் சமகாலப்போக்கு, ஜெனிவாத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் அரசு காட்டும் ஆர்வம் தொடர்பில் ஆராய்வதற்காக கொழும்பிலுள்ள மேற்குலக இராஜதந்திரிகள் இவ்வாரம் கூடவுள்ளனர் எனப் பெயர்க் குறிப்பிட விரும்பாத மேற்குலகின் மூத்த இராஜதந்திரியொருவர் தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 66 ஆவது ஆண்டுவிழா ஜனாதிபதி …
Read More »பொன்சேகாவின் கருத்து மீது கோட்டாபய கழுகுப்பார்வை! – விரைவில் பதிலடி வழங்கப்படும் எனவும் சூளுரை
“போர்க்கள இரகசியங்களை அம்பலப்படுத்தும் வகையில் கருத்து வெளியிடும் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு உரியவகையில் பதிலடி கொடுக்கப்படும்” என்று முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தமிழ்ப் பத்திரிகை ஒன்றிடம் தெரிவித்துள்ளார். முன்னாள் இராணுவத் தளபதியான ஜெனரல் ஜகத் ஜயசூரிய போர்க்குற்றமிழைத்துள்ளார் என்றும், அதற்குரிய ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதால் சாட்சியமளிக்கத் தான் தயார் என்றும் சரத் பொன்சேகா வெளியிட்டுள்ள கருத்து தொடர்பில் வினவியபோதே கோட்டாபய …
Read More »மைத்திரியின் கருத்துக்கு எதிராக கூட்டமைப்பு போர்க்கொடி!
“போர்க்குற்றங்கள் மற்றும் மனிதப் படுகொலைகளில் ஈடுபட்டுள்ள படையினரைக் காப்பாற்றும் வகையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கருத்து வெளியிட்டுள்ளார். இவர் தன்னுடைய இனத்தைக் காப்பாற்ற முற்படுகின்றார்; அழிக்கப்பட்ட பாதிக்கப்பட்ட தமிழினத்துக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்கப் பின்னடிக்கின்றார்.” – இவ்வாறு பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விசனம் தெரிவித்துள்ளது. “ஜனாதிபதி சர்வதேச சமூகத்தினருக்கு வழங்கிய அல்லது அவர்களுடன் இணங்கிக் கொண்ட விடயங்களைச் செய்வது நல்லது” என்றும் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. …
Read More »ஆறாவது முறையாக அணு குண்டு பரிசோதனை செய்து வடகொரியா அடாவடி
சமீப காலமாக வடகொரியா 5 தடவை ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது. கண்டம்விட்டு கண்டம் பாயும் இரு ஏவுகணைகளையும் இந்நாடு பரிசோதித்துள்ளது. அமெரிக்காவை குறிவைத்து இந்த சோதனை நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதனால் அமெரிக்காவின் தூண்டுதலின் பேரில் வட கொரியாவின்மீது ஐ.நா.சபை சமீபத்தில் புதிய பொருளாதார தடையை விதித்துள்ளது. இது வடகொரியாவுக்கு கடும் எரிச்சலையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தப் புதிய பொருளாதார தடை எங்கள் இறையாண்மைக்கு எதிரானது. அதற்கு அமெரிக்கா உரிய விலை …
Read More »தே.மு.தி.க. அமைப்பு தேர்தல்: விஜயகாந்த் அறிவிப்பு
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் விடுத்துள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:- தே.மு.தி.க.வின், 2017 கழக அமைப்பு தேர்தல் 3-ம் கட்டமாக இன்று முதல் 7-ந்தேதி வரை தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட கழக அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட கழகத்திற்கும் கழக அமைப்பு தேர்தல் நடைபெறும். தேர்ந்தெடுக்கப்படும் பதவிகள், மாவட்ட கழக செயலாளர், அவைத் தலைவர், பொருளாளர், 4 துணை செயலாளர்கள், 2 செயற்குழு உறுப்பினர்கள், 5 பொதுக்குழு உறுப்பினர்கள் …
Read More »வடகொரியாவின் அணு குண்டு பரிசோதனை கவலை அளிப்பதாக உள்ளது
சமீப காலமாக வடகொரியா 5 தடவை ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது.கண்டம்விட்டு கண்டம் பாயும் பல ஏவுகணைகளையும் இந்நாடு பரிசோதித்துள்ளது. இந்நிலையில், வட கொரியா நாட்டின் கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதிக்கு இடையில் உள்ள சுங்ஜிபேகாம் பகுதியில் (உள்ளூர் நேரப்படி) இன்று பகல் 12.36 மணியளவில் சக்திவாய்ந்த அணு குண்டினை வடகொரியா பரிசோதித்ததாகவும் இதன் விளைவாக 6.3 ரிக்டர் அளவிலான நில அதிர்வு ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. வட கொரியா இன்று …
Read More »தமிழக அரசு அளித்த ரூ.7 லட்சம் நிதியுதவியை வாங்க மறுத்த அனிதா குடும்பத்தினர்
நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அரியலூர் மாணவி அனிதா, தனது மருத்துவக் கனவு தகர்ந்ததால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார். அவரது மரணத்திற்கு நீதி கேட்டு மாநிலம் முழுவதும் மாணவர்களும் பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மாணவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கிடையே, தற்கொலை செய்துகொண்ட அனிதாவின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் 7 லட்சம் …
Read More »கட்டட விபத்தில் பெற்றோரை இழந்த ஒன்றரை வயது குழந்தைக்கு ரூ.5 லட்சம் வைப்பு நிதி
தமிழக முதலமைச்சர் எடப்பாடி மு.பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருச்சிராப்பள்ளி கிழக்கு வட்டம், டவுன் கிராமத்தில் இன்று (3.9.2017) தனியாருக்குச் சொந்தமான அடுக்கு மாடி குடியிருப்பு இடிந்து விழுந்ததில், இரண்டாவது தளத்தில் வசித்து வந்த கார்த்திக், அவருடைய மகன் சிறுவன் ஹரீஸ் மற்றும் பழனி, அவருடைய மனைவி ராஜாத்தி ஆகிய நான்கு நபர்கள் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரமடைந்தேன். இந்த …
Read More »